பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசும்பு5

பட்டு (கம்பரா.6, 30, 21). 13. வடிகஞ்சி. அசும்பு அறா மடையின் தூபம் (பாரதம். 1, 6, 33).

அசும்பு" பெ. 1. நீர்நிறைந்த நிலம். அசும்பின் அம் தூம்பு வள்ளை அழற்கொடி (அகநா. 376, 13-14). அசும்பு அமல் தாமரை (பெருங். 3,5,11). 2. வழுக்குநிலம். (நாநார்த்த. 116) 3. கரடுமுரடான நிலம். அசும்பில் தேயா அலர் கதிர் ஆழி (பெருங். 1, 38, 152). 4. (நாஞ்சில் நாட்டிலுள்ள) ஒரு மலையின் பெயர். (தமிழ் உரி. பனு. 5482)

2.

அசும்பு பெ. 1. குற்றம். அசும்பு அற ஞானத்துறவனே (சேதுபு. சங்கர. 92). அசும்பு ஒற்கமும் (பொதி.நி. 2,20).

...

...

அகன்ற

வறுமை.

பசும்

அசும்பு பெ. 1 ஒளி. அசும்பு இருக்கும் பொன் மன்றத்து (சிதம்பரச்செய்யுட். 37). 2. ஒளி வீசுகை. அசும்பு வீசுதலும் (பொதி.நி.2,20). பொதியில் விளை பொன்னால் அசும்பு செய் விசும்பிழிந்த கோயிலதனை அகம் புறமும் குயின்று (திருவிளை. பு.31,17).

வீ அசும்பு அலரி பூ.

அசும்பு பெ. பெயர் (ஆசி.நி. 140).

...

...

து

பூவின்

அசுமகம் பெ. திருவிதாங்கூருக்கு வழங்கிய ஒரு பெயர். (அபி. சிந். அனு.)

அசுமகேது பெ. மலையில்வளரும் நச்சுப்பூடு. (சாம்ப.

அக.)

அசுமசத்து பெ. கல்மதம் என்னும் மருந்துச்சரக்கு. (சித். பரி. அக. ப. 153)

அசுமம்1 பெ. இடியேறு. (சங். அக.)

அசுமம்' பெ. 1.கல். (முன்.) 2. தீச்சட்டிக்கல். (முன்.)

அசுமம்3 பெ. மோகம். (முன்.)

அசுமரி (அசுமை) பெ. (சிறுநீரகக் குழல்களில் உண்டாகும்) கல்லடைப்பு. (பைச.செ. ப. அக.)

அசுமலோட்டிரநியாயம் பெ. (கல்லோடு ஒப்பிடுகையில் களிமண்ணுருண்டை மென்மையுடையது எனவும், பஞ்சோடு நோக்கக் கடினத்தன்மையுடையது என வும் கூறுவதான) ஒரு பொருளுக்குச் பெருமை கற்பிக்கும் நெறி. (சங். அக.)

சிறுமை

89

அசுரசேனாபதி

அசுமாரோபணம் பெ. திருமணச் சடங்கில் ஒன்றான அம்மி மிதிக்கை. கற்புரி கடவுள்-அசுமாரோ பணார்த்தமான அம்மி (சீவக. 2464 நச்.). அசு மாரோபண சமயத்திலே கையாலே காலைப் பிடிக்கிறீர் (இராமா. தனிச். பால. 17, 26).

அசுமாற்றம்

கம். (முன்.)

Gu. 1. சாடை. (இலங். வ.) 2. சந்தே

அசுமானகிரி பெ. கட்டிலின்மேல் கட்டும் துணி, மேற் கட்டி. (நாட்.வ.)

அசுமை (அசுமரி) பெ. (சிறுநீரகக் குழல்களில் உண் டாகும்) கல்லடைப்பு. (மருத். க.சொ.ப.86)

அசுயை பெ. பொறாமை. மனத்தினில் அசுயையும் அற்றான் (முக்கூடற். 86).

அசுர் (அசுரர்) பெ. அரக்கர். அசுரைச் செற்ற மா வியம் புள் வல்ல மாதவன் (நம். திருவிருத்.67).

அசுரகிருத்தியம் பெ. 1. அசுரர் செய்த செயல். (செ. ப. அக.) 2. அசுரர் செயல் போன்ற கடும் செயல். (நாட். வ.)

அசுரகுஞ்சரம் பெ. விநாயகரால் வெல்லப்பட்ட யானை வடிவம் பெற்ற கயமுகாசுரன்...அசுரகுஞ்சரம் என் னும் யானையை வென்று (தக்க.3 ப. உரை).

அசுரகுரு பெ. 1. அசுரகணத்தின் ஆசிரியன். வெள்ளி அசுரகுரு வியாழம் தேவகுரு (முன். 476 ப. உரை). 2. வெள்ளி என்னும் கோள். (சங். அக.)

அசுரசத்துவம் பெ. பெண்களின் உடற்பண்பு, உள்ளப் பண்பு என்பவற்றின் அடிப்படையில் பகுக்கப்பட்ட பத்து வகைப் பாகுபாடுகளுள் ஒன்று. (கொக்கோ. / செ.ப. அக. அனு.)

அசுரசந்தி பெ. (அசுரருக்குரியது என்று கருதப் படும்) அந்திவேளை. (சங். அக.)

அசுரசம் பெ. பூடுவகை. (சாம்ப. அக.)

அசுரசேனாபதி பெ. (அசுரர்களின் படைத் தலைவ னான) சூரபன்மன். சூரபன்மாவான அசுரசேனா பதியுடன் பொருதற்கு மேற்செல்ல (தக்க. 231 ப.

உரை).