பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசை -த்தல்

யினால் அசைத்த மிக்க வானரச் சேனை (கம்பரா.

6, 37, 150).

அசை - த்தல் 11 வி. 1. தட்டுதல். கதவம் சேர்ந்து அசைத்த கை (கலித். 68, 8). 2.சொல்லுதல், இசைத்தல். பா அசையும் நாவலர் (சிலையெழு. 48). சேடன் ஆயிரம் நாவினாலும் அசைக்கினும் (குற்றா.பு.திருக்குற்றா. 70). என்னை வாக்கினில் அசைத்திடும் வலிமையினாய் (பாரதி: பாஞ்சாலி. 298). 3. (இசை ) தாளத்திற்குரிய காலத்தை வரை யறுத்தல். கொளை ஆய்ந்து அசை விளங்கும் பாடலொடு (புற. வெண். 144 மேற்கோள்).

.

அசை10 பெ. தனக்கென ஒரு பொருள் இன்றி அசை நிலையாக வரும் சொல். தேற்றம் வினாவே ஈற்று அசை இவ்வைந்தும்

...

...

(தொல்.சொல்.257 சேனா.). ஆங்கு என்பதனை அசை ஆக்கினும் அமையும் (குறள். 15 மணக்.).

அசை11 பெ. (யாப்.) நேரசை, நிரையசை என இரு வகையாய்ச் சீர்க்கு உறுப்பாய் நிற்கும் செய்யுள் உறுப்பு. மாத்திரை எழுத்தியல் அசை வகை எனாஅ (தொல். பொ. 310 இளம்.). அசை இன்றிச் சீரில்லை சீரின்றி அசையுமில்லையாம் (தொல். பொ. 313 பேரா.). எழுதப்படுதலின் எழுத்தே அவ் வெழுத்து அசைத்து இசைகோடலின் அசையே (இலக். வி. 711).

அசை12 பெ. (இசை) தாளத்தில் குறிப்பிடப்படும் ஒரு மாத்திரைக்குரிய பெயர். கொட்டும் அசையும் தூக் கும் அளவும் ஒட்டப் புணர்ப்பது பாணியாகும் (சிலப். 3, 16 இவை மாத்திரைப் பெயர்கள் மாத்திரை- அடியார்க்.).

...

அசை ஒரு

அசை13 பெ. உடல். (மனையடி. 9/செ. ப. அக. அனு.)

அசை 14 பெ. ஆடுமாடுகள் (உண்ட தீனியை இரைப் பையிலிருந்து வாய்க்கு மீண்டும் கொண்டு வந்து) மெல்லுகை. ஆனிரைகள் அறுகு அருந்தி அசை விடாது (பெரியபு. 14, 30).

அசை15 பெ. சுவடி வைப்பதற்குரிய உரி போன்ற தூக்கு. பள்ளிக்கூடத்து அசையாம் பற்பல தொட் டில் கிடத்தி (தமிழ்விடு. 24). 2. படுக்கைத்தூக்கு.

(ரா. வட். அக.)

அசை 16

அசை 17

பெ.

சீரகம். (தைலவ. தைல. 29/செ. ப. அக.) பெ. குற்றம். (சம். அக./செ.ப. அக. அனு.)

04

அசைநிலை

அசை18 பெ. ஆடு. மறி மை... அசை மேழகம்... ஆட்டின் பொதுப்பெயர் (ஆசி. நி. 112).

அசைகம்பு பெ. 1. பிணத்தை

...

எடுத்துச்செல்வோர் கையில் ஏந்தி ஆடுவதற்குப் பயன்படுத்தும் நீண்ட கழைக்கோல். காளம் இல்லையா களியல் கூத்து அசைகம்புகள் இல்லையா (நாஞ். மரு. மான். 7, 55- 56).2. பரவர் திருமணத்தில் பயன்படும் ஒன்பதடி நீளமான, வண்ணம் பூசி மணிகள் கட்டப்பெற்ற கோல். (செ.ப. அக.)

அசைகை1 பெ. (சருகிலைகளில் உராயும் ஒலியால் பாம்பு உண்டு எனக்கொள்ளும்) ஐயம். (வின்.)

அசைகை'

பெ. (அ +. சைகை) பொறாமை. (செ. ப. அக. அனு.)

அசைகொம்பு பெ. ஆடுமாடுகள் சிலவற்றிற்கு இயல் பாகவே உறுதியற்றதாய் ஆடும் நிலையில் அமைந்த கொம்பு. (நாட். வ.)

அசைச்சீர் பெ. (யாப்.) (பெரும்பான்மையும்) வெண்பாவின் ஈற்றடியில் இறுதியாக அமையும் ஓர் அசையாலான சீர். அசைச் சீர்க்கு உதாரணம் நாள் மலரே (யாப். காரிகை 7). ஓரோவிடத்து நேரசை தானே நின்றுஞ் சீராம்; நிரையசை தானே நின்றுஞ் சீராம்; அவை அசைச்சீர் எனப்படும் (யாப். காரிகை 6 குணசா.).

அசைச்சொல் பெ. தமக்கெனப் பொருள் இன்றிப் பெயர் வினைகளோடு சேர்ந்து வரும் மா, ஆங்க போன்றவை. மா என் கிளவி வியங்கோள் அசைச்சொல் (தொல். சொல். 273 சேனா.). ஆங்க என்பது அசைச்சொல் (இறை. அக. 3 உரை).

அசைந்தாடி

பெ. (திருவாரூரிலுள்ள கடவுளாம்) தியாகராசர். மாது உமையாள் பாகத்தினும் அசைந்தாடி (திருவாரூருலா 278).

...

அசைந்தாடு-தல் 5வி. 1. மெதுவாக நடத்தல். கிழ வர் கோல் ஊன்றி அசைந்தாடிச் சென்றார் (நாட். வ.). 2. கூத்தாடுதல். (ராட். அக.)

அசைந்தாடுசீலை பெ. குழந்தை உறங்கும் தூளிச் சீலை. (ராட். அக.)

அசைநிலை பெ. அசைச்சொல். அசைநிலைக்கிளவி யாகி வருநவும் (தொல். சொல். 250 சேனா.).

சிறிது