பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சாலியிடையர்

அஞ்சாலியிடையர் பெ. ஐவகைத்தாலி அணியும் பெண் குலத்தையுடைய இடைச்சாதியினர். (வின்.)

அஞ்சானனம்1 பெ. சிங்கம். (யாழ். அக. அனு.).

அஞ்சானனம்' பெ. ஐந்து முகங்கள். (கதிரை. அக.)

அஞ்சானனன்

பெ. ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் ஆகிய ஐந்து முகங்களை யுடைய சிவன். (யாழ். அக. அனு.)

அஞ்சி1-த்தல் 11 வி. பூசித்தல். அஞ்சித்தல் சொற்ற பூசனை அடைவுமாம் (சிவஞா. காஞ்சி. திருவே. 36).

அஞ்சி 2 பெ.

2 சங்ககாலச் சிற்றரசனும் கடைஏழு வள் ளல்களுள் ஒருவனுமாகிய அதியமான். அதியர்கோ மான் போரடு திருவிற் பொலந்தார் அஞ்சி,

(புறநா. 91,3).

அஞ்சி 3 பெ. எசமானன். (யாழ். அக. அனு.)

அஞ்சி 4 பெ. (வட். வ.).

பணம் தபால். அஞ்சியில்

வந்தது.

அஞ்சி" பெ. பெண் அன்னம். (சேந். செந். 49 )

அஞ்சிக்கை பெ. பயம். (செ.ப.அக.)

அஞ்சிகம் பெ. கண். (சித். பரி. அக.ப. 153)

அஞ்சிட்டன் பெ சூரியன். (யாழ். அக. அனு.)

அஞ்சிதபதம் பெ. (நாட்டியம்) தரையில் குதிகாலை ஊன்றி முன்பாதத்தை மேல்நோக்கி வைத்து நிற்கை. அஞ்சிதபதம் என்பது மேனோக்கி நிற்றலாம்

(பரத. 1, 84 உரை).

...

அஞ்சிதம் பெ. அஞ்சிதபதம். (பரத. 1, 84 )

அஞ்சிதமுகம் பெ. (நாட்டியம்) வருத்தம் ஆற்றாது தோள்மேல் தலைசாய்க்கையாகிய அபிநய

(வின்)

வகை.

அஞ்சிமூலம் பெ.

வரிவகை.

(திருவாங்.கல். 3, 216)

அஞ்சிறைப்பறவை பெ. (உட்சிறகுடைய)

வண்டு.

அஞ்சிறைப் பறவைகள் எனப் பெயரின

வண்டு

(சூளா. 877).

அஞ்சினான்புகலிடம் பெ. அச்சங்கொண்டோர்

அடைக்

கலம் புகுமிடம். (திருவாங். கல். 4, 98) இடையிலே

10

2

அஞ்சுங்குளிர்-தல்

வளருகைக்கு ஓர் அஞ்சினான் புகலிடம் உண்டா வதே (திருவாய். 6,44,5ஈடு).

அஞ்சினி பெ. ஐந்தாம் மாதம். (செ. ப. அக. அனு.) அஞ்சீரம் பெ. அத்திப்பழம். (முன்.)

அஞ்சு 1-தல் 5 வி. பயப்படுதல். 'அஞ்சியச்சுறுத்தலும் (தொல். பொ. 1.12, 12 இளம்.). பகைவர்க்கு அஞ்சிப் பணிந்தொழுகலையே (மதுரைக். 201). அஞ்சுவது அஞ்சாமை பேதைமை (குறள். 428). நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் (தேவா. 6, 98,1). நம்மை அஞ்சுகின்றிலர்கள் அமரர் (கம்பரா. 6, 2, 92). அஞ்சினர் நடுங்கினராதி (சூளா. 239). அஞ்சி யஞ்சிச் சாவார் (பாரதி. தேசியம்.15).

அஞ்சு' (ஐந்து)

1. பெ.

...

எண் 5. அஞ்சு ஆய் கூந்தல் ஆய்வது (ஐங். 383). அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும் (திருவாச. 4, 19). பிண மெத்தை அஞ்சடுக்கி (கலிங். 155), அஞ்சு அவத் தையும் கடந்து (உமா. நெஞ்சுவிடு. 56). நெஞ்சிற் குறித்த குளம் அஞ்சுக்கும் (முக்கூடற். 14). 2. திருவைந்தெழுத்து. அஞ்சே நினைந்து (சேரமான். பொன். 40). 3. ஐம்பூதங்கள். அஞ்சும் அஞ்சும் என் ஆருயிர் அஞ்சுமால் ஐம்புலன்கள். ஈர்க்கின்ற (திருவாச. 6,8).

3

(கம்பரா. 2, 4,9). 4. அஞ்சொடு அச்சம்

அஞ்சு பெ. அச்சம். அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றா தீமே (நற். 83,9).

4

அஞ்சு பெ. கவறாட்டத்தில் வழங்கும் ஒரு குழூஉக் குறி. பஞ்சென உரைசெய்வர்

...

அஞ்சென்பர்

வெடியென்று ஓதுவார் (கந்தபு. 6, 14, 167).

...

அஞ்சு' பெ. ஒளி. அஞ்சு வள் நத்தின் (கம்பரா. 5,

2, 79 LIT. Gu.).

அஞ்சுகம்1

பெ.

கிளி.

கிஞ்சுகவாய் அஞ்சுகமே (திருவாச. 19, 5). சிறுபூவையும் அஞ்சுகமும் (சங்கர. கோவை. 76). அஞ்சுகம் போல் பாங்கியொடு அழகு வள்ளியும்... பரண் அதனில் ஏற (வள்ளிகதை ப. 7).

1.

அஞ்சுகம்' பெ. மேலாடை. அஞ்சுகம் உத்தரீயம் 2. மெல்லிய ஆடை. அஞ்சுகம்... (நாநார்த்த.17).

மெல்லாடை (முன்.).

அஞ்சுங்குளிர்-தல் 4 வி. ஐம்பொறியும் இன்பம் அடை

தல். (செ.ப. அக.)