பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சைக்களம்

திரமாவன அஞ்செழுத்துமே (தேவா. 3, 22, 10). அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை (திருவாச. 5, 27). அஞ்செழுத்தும் உணரா அறி விலோர் (பெரியபு. தடுத்தாட். 159). அஞ்செழுத்தை விதிப்படி உச்சரிக்க (சி. சி. 9, 8). அஞ்செழுத்தும் எட்டெழுத்தும் நெஞ்சழுத்தி (கொடிக்கவி.4). அஞ்செழுத்து ஈதாகிய (உண்மைவி.39).

...

அஞ்சைக்களம் பெ. மலையாள நாட்டுக் கொடுங்கோ

ளூர் அருகிலுள்ள சிவத்தலம்.

அஞ்சைக்

களத்து அப்பனே (தேவா. 7, 4, 1). சேவீற்றிருந்தார் திரு அஞ்சைக் களம் (பெரியபு. 37, 1).

அஞ்ஞத்துவம் பெ. அறியாமை. (யாழ். அக. அனு.)

அஞ்ஞவதைப்பரணி பெ. வேதாந்தக் கொள்கையை விரித்துத் தத்துவராயர் பாடிய பரணி நூல். அஞ்ஞ வதைப் பரணியை பாடக் கபாடம்திறமினோ (அஞ்ஞ. பரணி கடை. 23).

...

அஞ்ஞன் பெ. (மெய்ப்பொருள் நூல்களில் வரும் உருவக மாந்தன்) அறிவிலான். அஞ்ஞன் வீற்றி ருந்து இனிது வாழும் புரம் (பிரபோத். 38,1). மாயா புரிமேவி நாளும் அரசாளும் அஞ்ஞன்

(அஞ்ஞ. பரணி அஞ்ஞன்சரி. 1).

அஞ்ஞா (அஞ்ஞை1, அம்மா1) பெ. தாய். (ரா. வட்,

அக.)

அஞ்ஞாதகுலகோத்திரன் பெ. குலகோத்திரம் அறியப் படாதவன். (செ.ப.அக.)

.

அஞ்ஞாதசுகிருதம் பெ. தன்னை அறியாமல் வந்த புண்ணியம். (சிரீவசன. 382 அவதாரிகை)

அஞ்ஞாதம் பெ. (அ+ஞாதம்) அறியப்படாதது. ஞாதம் அஞ்ஞாதம் ஆகிய எல்லாவற்றிற்கும் நல்ல சான்றாகி (சூத. எக்கிய. பூருவ. 19, 7).

அஞ்ஞாதவாசம் பெ. பிறர் அறியாமல் மறைந்து வசிக்கை, கரந்துறைகை. பாண்டவர் செய்த அஞ் ஞாத வாசம் போல் (பே. வ.).

அஞ்ஞாழிக்கால் பெ. ஐந்து நாழி அளவு கொண்ட படி. (தெ.இ.கோ. சாசன.ப.1390)

அஞ்ஞானகிருதம் பெ. அறியாமல் செய்த பாவம் அல் லது புண்ணியம். (செ. ப. அக.)

10

4

அஞர்"

அஞ்ஞானசிரவம் பெ. ஞானமின்மை. (மேருமந்.பு.98

உரை)

அஞ்ஞானம் பெ. அறியாமை. அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே (திருவாச. 1, 40), அற வுரை கேட்டுணர்ந்து அஞ்ஞானம் நீக்கி. (அற நெறிச். 195). முற்றும் அஞ்ஞான மூடப்பிள்ளை (திருவருட்பா குடும்ப கோரம் 41).

அஞ்ஞானி பெ. 1. அறிவிலான். ஆங்கார அஞ்ஞா னிகளாம் மானிடரும் (பிரபு. லீலை 6,29).

சட

மொடு அஞ்ஞானியாகும் தன்மையால் (சிவப்பிர. விகா.30). 2.புறச்சமயத்தான். (கிறித். வ.)

அஞ்ஞை1 (அஞ்ஞா, அம்மா1) பெ. தாய். மென் றோள் அஞ்ஞை சென்றவாறே (அகநா. 15, 19). அஞ்ஞை நீ ஏங்கி அழல் (சிலப். 9, 24).

அஞ்ஞை' பெ. அழகு. அஞ்ஞை அழகு (பொதி.நி.

2, 33).

அஞ்ஞை' பெ.

அறிவற்றவன். அஞ்ஞை அறிவி

...

லான் பெயரே (பிங். 873).

அஞ்ஞை+

பெ.

கிடாய்.

(பொதி.நி.2 33).

அஞ்ஞை

...

கிடாய்

அஞர் 1-தல் 4 வி. கலங்குதல். நம் நம் காதலி அறிவு அஞர் நோக்கமும் புலவியும் (அகநா. 225, 17). அஞர்--தல் 4 வி. சோம்புதல். அஞர்தல் ... சோம்ப லாகும் (திவா. 1675).

அஞர் பெ. 1. துன்பம், வருத்தம். கடைக்கொண்டு பெயர்தலிற் கலங்கஞர் எய்தி (தொல். பொ. 44 இளம்.). ஆரவுண்டு பேரஞர் போக்கி (பொருந. 88). நடுங்கஞர் செய்யல மன் இவள்கண் (குறள். 1086). கடுங் கதிர் திருகலின் நடுங்கு அஞர் எய்தி (சிலப். 12,1). அஞர் கெடலானும் (கச்சி. காஞ்சி. கழு. 76).

2.

...

மயக்கம். அறிவு அஞர் உறுவி ஆய்மடநிலையே (நற்.106,9).3. நோய். மடி அஞர் அழுங்கல் 4. (திவா.1662). சூர்நோய் அச்சம். வெருவு அஞர் அழுங்கல் அச்சப் பொருள் (திவா.1678).

அஞர்+

பெ. வழுக்குநிலம். அருப்பம் ஆரிடம் அஞர் இழுக்கு வழுக்கு நிலம் (திவா. 1048).

அஞர் பெ. அறிவிலார். அஞர் ... அறிவிலார் (அக். நி. அம்முதல்.82).