பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞல்

அஞல் பெ. கொசுகு. (யாழ். அக.)

அஞலம்1 பெ.நுளம்பு என்னும் கொசுகுவகை. அஞ் லமும் ஞலவலும் நுளம்பே (பிங். 2392).

அஞலம் பெ. ஐவகை மணங்கள். அஞலமே மணமும் (பொதி. நி.2,30).

பஞ்ச

அஞலம்' பெ. சிங்கம். அஞலமே

200

சிங்கமும் (முன்.)

அஞன்

பெ. அறிவிலான். (செ. ப. அக.)

அட்கிடு - தல் 6 வி. (பிறர் கூற்றை மறுத்து) வாதம் செய்தல். சட்சமயிகளொடு வெட்காது அட்கிடும் அறிவிலி (திருப்பு.5).

அட்கெனல் பெ. கடிய ஓசைக் குறிப்பு. அட்கென்று அழைப்ப ஆந்தை (காரை. பதிகம் 2, 3).

அட்சகன்னம்

பெ.

(வானவியல்)

வானமண்டல

கணிதவகை. (வின்.)

அட்சசூலை பெ. சூலைநோய் வகை.

(கதிரை. அக.)

அட்சதூரம் பெ. பூமியின் நடுக்கோட்டிற்கு வடக்கு அல் லது தெற்கேயுள்ள இடைவெளியின் அளவு. (செ. ப.

அக. அனு.)

அட்சதை

பெ. 1. (மஞ்சள் கலந்த) மங்கல அரிசி. மாமலர் அட்சதை அறுகதிற் சொரிந்து (பிரபோத. 11,42). அட்சதையினோடு துளசி கந்தம் (சோலை.

குற. 117). 2. அரிசி.

(சங். அக.)

அட்சதைப்பொட்டு பெ நெற்றியிலிடும்

பொட்டாகப்

பயன்படுத்தும் கருக்கப்பட்ட மஞ்சள்பொடி. (சங். அக.)

அட்சதைபோட்டுக்கொள் (ளு)-தல் 2 வி. ஒரு செயலை வலிய மேற்கொள்ளுதல். (பே.வ.)

அட்சதையிடு-தல் 6 வி. திருமண நிகழ்ச்சியின்போது மணமக்களுக்கு அட்சதையிட்டு வாழ்த்தல். (நாட்.

வ.)

அட்சதைவை-த்தல் 11 வி. மங்கல நிகழ்ச்சிக்கு அழைத் தற்குறியாக அட்சதை கொடுத்தல். (சங். அக.)

[05

அட்சயம்1

அட்சபாதமுனி பெ. அகலிகையின் கணவனான கௌத மன், கல்லைக் கொடியாக்கி அட்சபாதமுனி இல்லம் புகுக என்று இசைவித்தீர் (தென்பு. மணி. உலா

207).

...

அட்சபாதன் பெ. 1. (வலப் பாதத்தில் ஒருகண் பெற்றவரும்) நியாயதரிசனத்தைத் தோற்றுவித்த வருமாகிய கெளதம முனி. (கதிரை. அக.) 2. நியாய தரிசனத்தைப் பின்பற்றி நடப்பவன். (வின்.)

அட்சம்1 பெ. கண். (சங். அக.)

அட்சம் 2 பெ. பூமியின் குறுக்குக்கோடு.

800

இக்கண்டம்

10 தென் அட்சம் முதல் 77 வடஅட்சம் வரை யிலும் பரவியுள்ளது (புவியியல் 10 ப. 35).

...

அட்சம்' பெ. உருத்திராக்கமணியாகிய விதையைத் தரும் மரம். (சங். அக.)

அட்சமணி பெ. உருத்திராக்கம். (சங். அக.)

அட்சமம் பெ. பொறுமையின்மை, கோபம். அட்சம பட்சபட்சி துரங்க (கந்தரலங். 52).

அட்சமாலிகை பெ. நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று. (கதிரை. அக.)

அட்சமாலை பெ. 1. செபமாலை. (வின்) 2.உருத் திராக்க மாலை. (சிற். செந். ப.287)

அட்சய பெ. தமிழாண்டு வரிசையில் அறுபதாவது ஆண்டு. மானே கேள் அட்சயத்தில் மாரி அற்பம் (வருடாதிநூல் 60).

அட்சயதிருதியை பெ. வைசாக வளர்பிறை மூன்றாம் நாளாகிய புண்ணிய தினம். (சங். அக.)

அட்சயதூணி பெ. அம்பு குறைவுபடாக் கூடு, அம்பறாத் தூணி. உருண்டமணி முழங்காலுக்கு உவமை அவருடைய அட்சயதூணி ஏற்குமே (இராமநா. 5,

8 தரு 1).

அட்சயபாத்திரம் பெ. 1. சூரியனால் பாண்டவர்களுக் குக் கொடுக்கப்பட்ட வற்றா உணவு தரும் தெய்வநலப் பாத்திரம். (வின்.) 2. பாகவதர் வைத்திருக்கும் பிட்சாபாத்திரம். (சங். அக.)

.

அட்சயம் 1 பெ. 1.கேடின்மை. (கதிரை. அக.) 2. குறைவுபடாதது. தோன்றும் அன்பால் நினைத்து