பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அட்டஞ்சுழி-த்தல்

அட்டஞ்சுழி-த்தல்

11 வி. வளைத்து நெருங்குதல்.

அட்டஞ்சுழிக்காமல் அயற்காத்து வீசாமல் (ரா.

வட். அக.).

அட்டணங்கால்

(அட்டங்கால், அட்டணைக்கால்,

அட்டாணிக்கால்) பெ. குறுக்காக மடக்கிவைக்குங்கால்.

(of eir.)

அட்டணை வி.அ. குறுக்கே. (வின்.)

அட்டணைக்கால்

(அட்டங்கால்,

அட்டணங்கால்,

அட்டாணிக்கால்)

பெ. 1.

உட்கார்ந்தநிலையில்

(வட். வ.)

குறுக்காக மடக்கிவைக்குங்கால். (நாட். வ.) 2. கால்

மேல் இடுங் கால்.

அட்டணைக்கால் 2 பெ. பீடவகை. திரு அட்டணைக் கால் தரா ஒன்றினால் எடை நூற்று எண்பத்து ஐம்பலமும் (தெ.இ.க.7, 1004).

அட்டதசமுலம் பெ. மருந்திற்குரிய எருக்கு, கரந்தை முதலிய பதினெட்டு மரஞ்செடி கொடிகளின் வேர். (சித். பரி. அக.ப. 154)

அட்டதாது பெ.வெள்ளி, பொன், செம்பு. இரும்பு, வெண்கலம், தரா, வங்கம், துத்தநாகம் ஆகிய எண் வகைத் தாதுக்கள். (LOGOT.)

அட்டதானப்பரிட்சை பெ. கண், நாக்கு, உடல், குரல், நாடி, முகம், மலம், சிறுநீர் ஆகியவற்றை மருத்துவர் பரிசோதிக்கை. (முன்.)

அட்டதிக்கயம் பெ. ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சார்வபெளமம், சுப் 'பிரதீகம் என்னும் எட்டுத்திசைக் காவல் யானைகள்.

(கதிரை. அக.)

...

அட்டதிக்கு பெ. நான்கு முதன்மையான திசை, நான்கு மூலைத்திசை ஆகிய எட்டுத் திசைகள். அட்டத்திக்கி னும் அப்புறமும்புக அழைத்து ... வீழ்ந்தனன் (கம்பரா. 3, 8, 77). அட்டதிக்கையும் அடைப்பர் கள் (சிவஞா. காஞ்சி. வாணீச. 95) அட்டதிக்கினிலும் ஒரு திக்கிலை (மீனா. பிள். 7, 7).

அட்டதிக்குப்பாலகர் பெ. இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்னும் எண்திசைக் காவலர். (சங். அக.)

அட்டதிசம் பெ. எருக்குச் செடி. (வைத். விரி. அக.ப. 13)

அட்டதிச மூலம் பெ. எருக்கு. (வாகட அக.)

அட்டதிரசம் பெ. அரப்பொடி. (முன்.)

1

08

அட்டபந்தன மருந்து

அட்டதீரசம் பெ. அரப்பொடி. (சங். அக.)

அட்டதுர்க்கைமூலிகை பெ. மாந்திரீகத்திற்குப் பயன் படும் முருங்கை, தொட்டால்சுருங்கி, நாயுருவி, முட்கா வேளை,முள்ளி, முடக்கொற்றான், முசுட்டை, வெள் ளெருக்கு ஆகிய எட்டு மூலிகை. (சித். பரி. அக .ப.

154)

அட்டதேசம்

பெ. எட்டு உடம்புகள். அட்டதேசப் பொருள் ஆகி நின்றாளே (திருமந். 974).

அட்டநாகபந்தம் (அட்டநாக பந்தனம்) பெ. திசைக்கு இரு நாகமாக நாலு திசைக்கும் எட்டு நாகங்களை வைத்துத் தலை முதல் வால் முடிய உடலைப் பின்னி வரும் கட்டங்கள்தோறும் எழுத்து அமையப்பாடும் சித் திரக் கவி. (சங். அக.)

அட்டநாகபந்தனம் (அட்டநாக பந்தம்) பெ. எட்டு நாகப்பாம்பின் பிணையல்களுக்குள்ளே அமைக்கப் பட்ட சித்திரக்கவி. (தனிச். சிந்.ப.513)

அட்டநாகம் பெ. அனந்தன், வாசுகி, தக்கன், கார்க் கோடகன், பதுமன், மகாபதுமன், சங்கபாலன், குளிகன் ஆகிய எட்டு நாகங்கள்.(சங். அக.)

அட்டநேமிநாதர் பெ. (சைனம்) பொன்னெயில் வட் டத்திருக்கும் அமணப் பெரியோர். அட்டநேமி நாதர் முதலாயினார் (தக்க. 373 உரை).

அட்டப்பல்லக்கு பெ. குறுக்காகக் கொண்டுபோகும்படி அமைந்த சிவிகை. (சங். அக.)

அட்டபந்தம் (அட்டபந்தனம்) பெ. கோயில் சிலைகள் அசைவற்றிருக்கும்படி அவற்றைப் பீடத்தோடு சேர்த்துப் பிடிக்கும் பொருட்டு அடியிடத்துச் சாத்தப்படும் எட்டுப் பொருள்களைச் சேர்த்தரைத்த கலவைச்சாந்து. பொன்னும் அட்டபந்தம் இடுவதினுக்கு வேண் டும் (தெ.இ.க.5,860).

அட்டபந்தனம் 1

(அட்ட பந்தம்) பெ. சிலையைப் பீடத்தோடு பொருத்தும் பொருட்டு எண்வகைப் பொருள்களைச் சேர்த்து அரைத்த கலவைச்சாந்து. (சிற். செந். ப.300)

அட்டபந்தனம் 2 பெ. தீங்கு வாராமல் காப்பதற்காகத் திக்குத் தேவதைகளை மந்திரத்தால் எட்டுத்திசைகளி லும் நிறுத்துகை. (செ. ப. அக. அனு.)

அட்டபந்தன மருந்து பெ. கற்சிலையை ஆதாரபீடத்தில் உறுதியாக நிறுத்த வேண்டிச் சுக்கான்கல், கொம்ப ரக்கு, சாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமை