பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அட்டவணை

அட்டவணை பெ. 1. பொருள் விவர வரிசை, விவரப் பட்டியல். அட்டவணை இட்டதுபோல் அத்தனை யும் தானிருந்து (மாதை. பணவிடு. 30). கிறித்துவின் தலைமுறை அட்டவணை (விவிலி. மத்தேயு 1, 1).

2.

சமயக் கருத்துக்களைச் சுருக்கி உரைக்கும் உரை நடைநூல். பூப்பிள்ளை அட்டவணை (நூ.பெ.). 3. அலுவலுக்குரியவர் என்பதனைக் குறிக்கப் பதி வேட்டில் பதியப்பெற்றபின் அரசு அலுவலர்க்கு அமை யும் அடைமொழி. அட்டவணைத்தாசில்தார் (செ.

ப. அக.).

அட்டவணைக்கணக்கன்

கன். (செ. ப. அக. அனு.)

பெ. பேரேடெழுதுங் கணக்

அட்டவணைக்காரன் பெ. பேரேடெழுதுங் கணக்கன். (பே.வ.)

அட்டவணைச்சாலை பெ. கணக்கு வேலை பார்க்குமிடம்.

(ராட். அக.)

அட்டவணைப்படுத்து-தல் 5 வி. விவரங்களை அட்ட வணை முறையில் ஒழுங்குபடுத்துதல். (நாட். வ.) அட்டவணைப்பிள்ளை பெ. பேரேடெழுதுங் கணக்கன். (மாதை. பணவிடு. 89)

அட்டவருக்கம்! பெ. (சோதிடம்) இராசிச் சக்கரத்தில் கிரகநிலைக்கேற்பக் கிரகங்களின் பலத்தை அளப்பதற் குரிய எண்வகைச் சக்கரங்கள். (செ.ப.அக.)

அட்டவருக்கம்' பெ. நற்சீரகம், கருஞ்சீரகம், ஓமம், மிளகு, திப்பிலி, சுக்கு, இந்துப்பு, பெருங்காயம் என் னும் எண்வகை மருந்துச் சரக்குக்கள். (சித். பரி. அக. ப . 15 4 )

அட்டவருக்கு பெ.

நற்சீரகம் முதலிய எண்வகை மருந்துப் பொருள்கள்.(தைலவ. தைல. 13/செ. ப. அக.) அட்டவற்கம் பெ. மேதை மகாமேதை முதலிய எண் வகை மருந்துப் பொருள்கள். (வாகட அக.)

அட்டவிகாரம் பெ. உயிர்களிடத்துள்ள காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம், இடும்பை, அசூயை என்னும் எண்வகைத் தீக்குணம். (சங். அக.)

அட்டவித்தியேசுவரர் பெ. அனந்தர். சூக்குமர், சிவோத்தமர், ஏகநேத்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தி, சீகண்டர், சிகண்டி ஆகிய எண்வகையராய்ப் படைத்தல் முதலிய தொழில்களை ஈசுவரன் ஏவற்படி நடத்தும் தேவர். அமத்திமராகியட்டவித்தியேசுவரர் ஆவார் அனந்தர், சூக்குமர். ... இவ்வெண்மரும் (சி. சி. சுப. 8,2 மறைஞா.).

1

11

அட்டாங்கம்

அட்டவிதப்பரீட்சை

பெ. நோயாளியின் நோயினை அறிதற்கு உடல், முகம், குரல், கண், நா, நாடி, மலம், சிறுநீர் ஆகிய எட்டனையுஞ் சோதிக்கை. (சீவரட் அணிந்.)

அட்டவிவாகம் பெ. பிரமம், தெய்வம், ஆரிடம், பிரசா பத்தியம், ஆசுரம், காந்தருவம், இராக்கதம், பைசாசம் என்னும் எண்வகை மணம். (செ. ப. அக.)

அட்டவீரட்டம் பெ. சிவபெருமான் தனது வீரத்தை வெளிப்படுத்திய கண்டியூர், கடவூர், அதிகை, வழுவூர், பறியலூர், கோவலூர், குறுக்கை, விற்குடி என்னும் எட்டுப் பதிகள். அட்ட வீரட்டத்து ஒன்று ஈது என்னத்திருந்த வளர் திருவழுவூர் (வீரநா. கடவுள். 7). அட்டவூறு பெ. சருச்சரை, சீர்மை, தண்மை, திண்மை, நொய்ம்மை, மென்மை, வன்மை, வெம்மை என்னும் எண்வகைத்தொடு உணர்ச்சி. (யாழ். அக. அனு.)

அட்டவெச்சம் பெ. ஊமை, செவிடு, குறள்,கூன், குருடு, முடம்,மருள்,உறுப்பில் பிண்டம் என்னும் பிறப்புக் குறைபாடு. (சூடா.நி.12, 94 உரை)

அட்டவெற்றி பெ. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை

என்னும் எண் வகைப் போர் நிகழ்ச்சிகளில் பெறும் வெற்றி. (யாழ்.

அக.)

அட்டழி -த்தல் 11 வி. சமைத்துப் பரிமாறுதல். அட் டழிய வைத்த அரிசி (புது. கல். 8).

அட்டன்1 பெ. அட்டமூர்த்தியான சிவன். அட்டன் அழகாக அரவு ஆர்த்து (தேவா. 7,80,81.

...

அட்டன் பெ. அழித்தவன். புரம் மூன்றையும் அட் டனை மறந்துய்வனோ (தேவா. 5, 4, 1).

...

அட்டனம் பெ. சக்கராயுதம். (யாழ். அக. அனு.)

அட்டாங்கநமக்காரம் பெ. உடலின் எட்டு உறுப்புக்களும் நிலத்தில் தோய வணங்குகை. (சைவ. நெறி பொது 553

உரை)

அட்டாங்கம் பெ. 1.இருகால், இருகை, இருதோள், மார்பு, நெற்றி என்ற எட்டு உறுப்புக்கள்.

அட்டாங்

அட்.

கம் அடிபணிந்து (சேரமான். பொன். 11). டாங்க பஞ்சாங்க விதிமுறையால் (திருவிளை.பு. 1,86).2. இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் யோக உறுப்பு எட்டு. (பிங்.419)