பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அட்டாவதானி

அட்டாவதானி

பெ. அட்டாவதானஞ் செய்வோன். அட்டாவதானி சொக்கன் (தஞ்சைவா. கோ. உரைச் சிறப்.). அட்டாவதானி என்பதாயினேன் (கூளப்ப. விறலி. தூது 103).

அட்டாளகம்

(புதுவை வ.)

(அட்டாளிகை) பெ. மேல் மாடி.

அட்டாளிகை (அட்டாளகம்) பெ. மேல் மாடி. (முன்.)

அட்டாளை (அட்டாலகம், அட்டாலம், அட்டாலை) பெ. காவற்பரண். (யாழ். அக.)

அட்டாளைப்பெட்டி பெ. தட்டுக்கள் அமைந்த பெட்டி.

(வட். வ.)

அட்டானம் பெ. சிவன் வீரச்செயல் புரிந்த எட்டுத்தலங் கள். அட்டானம் என்றோதிய நாலிரண்டும் (தேவா. 2,39,3).

அட்டி1 பெ. 1. தாமதம். அட்டி செய நினையாதீர் (திருவருட்பா 3781). 2. தடை. துரைப் பெண் ணைக் கொள்ள என்ன அட்டி (சர்வ.கீர்த். 181). அதைச்செய்வதற்கு எந்தவித அட்டியும் இல்லை

(பே.வ.).

அட்டி' பெ. 1.செஞ்சந்தனம். (வைத். விரி. அக. ப. 13) 2. சந்தனம். (முன்.)

3

அட்டி பெ. அதிமதுரம். (முன்.)

அட்டி பெ. இலுப்பை. (முன்.)

அட்டி பெ. எட்டி. (முன்.)

அட்டி பெ. குதிரை முன்னங்காலில் உண்டாகிற கழற் காயளவு கூட்டி. (செ. ப. அக.)

1.

அட்டி பெ. கப்பலின் பின்பக்கம். (ராட். அக.) 2. பீப்பாயின் மேற்புறம் அல்லது அடிப்புறம். (ராட்.

அக.)

அட்டி பெ. உணவு. (திவ்ய. அக.ப.5)

அட்டிகம் பெ.சாதிக்காய்.

பெ.சொ.அ.1-8

(மலை அக. செ.ப. அக.)

11

13

அட்டு 1-தல்

அட்டிகை (அட்டியல்') பெ. கல்லிழைத்தோ இழைக் காமலோ செய்யப்பெறும் மகளிரின் கழுத்தணி (நாட்.

வ.)

அட்டித்தா (தரு) - தல் 11 வி. சேர்ப்பித்தல், கொண்டு வந்து தருதல். நெல்லுப் பெற்றேன் ஆள் இலை ...அட்டித்தரப் பணியே (தேவா. 7,20,1).

அட்டிப்பேறு பெ. அரசன் கொடை ஆவண மூலம் கொடுக்கும் வழி வழி உரிமை. (செ. ப. அக.)

அட்டிமதுரம் பெ. அதிமதுரம். அட்டிமதுர மிட்டுத் திரட்டின கவளத்தை (புற. வெண். 350 உ.வே.சா.

அரும்.).

அட்டிமை1 பெ. சீரகம். (வைத். விரி. அக.ப.13)

அட்டிமை2 பெ. ஓமம். (வின்.)

அட்டியல் (அட்டிகை) பெ. மகளிரின் ஒரு வகைக் கழுத்தணி. (பே.வ.)

அட்டியல்' பெ. பாத்திர அடுக்கு.(வட்.வ.)

...

அட்டில் பெ. 1. மடைப்பள்ளி. அட்டிலோளே அம்மா அரிவை (நற். 120,9). புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில் (சிறுபாண்.132). அறச்சோற் றட்டில் (பெருங்.1,40,132). அட்டில் கொட்ட காரம் இவற்றுள் நீங்கி (இறை. அக. 21 உரை). முட்டில் அட்டில் முழங்குற (கம்பரா. 1,2,26). அட்டில்புகுந்து அடிசிலாக்கி (திருவிளை. பு. 23, 22). அட்டில்வாய்ப் புகை வீந்த (கச்சி. காஞ்சி. நக. 67). 2. அடுப்பு. புழுங்கி எரி கூற்றின் அட்டில் என லாய (கம்பரா. 6,35,4). 3. வேள்விச்சாலை. அட் டில் மறையோர் ஆக்கிய ஆவுதி (சிலப். 10, 143). அட்டிற்சாலை பெ. மடைப்பள்ளி. அட்டிற்சாலையும் அருந்துநர் சாலையும் (மணிமே. 20, 7).

அட்டிற்பேறு பெ. 1. கோயிற் பணியாளருக்குப் பிர சாதம் அளிப்பதற்கு ஏற்படுத்திய அறக்கட்டளை. (செ. ப. அக.அனு.) 2. நீர் வார்த்துத் தானம் செய்யப் பெறுவது. (தெ.இ. கோ. சாசன.ப.1391)

அட்டினம் பெ. சீரகம். (வைத். விரி. அக. ப. 13)

அட்டு - தல் 5வி. 1. 1. வடிதல், சொரிதல். வாழை யின் தீங்கனி வார்ந்து தேன் அட்டும் (தேவா. 1. 78,4). தீந்தேன் அட்டும் தாரணிந்த மார்பர் (சீவக. 112). அட்டும் இரசதம் பொன் ஆரம் இலகு