பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அட்டைசுவரியம்

அட்டைசுவரியம் பெ. இராசாங்கம், சுற்றம், மக்கள், அடிமை, நெல், பொன், மணி, வாகனம் ஆகிய எட்டுச் செல்வங்கள். (செ. ப. அக.)

அட்டைத்தாள் பெ. 1. புத்தகங்களையும் குறிப்பேடு களையும் பாதுகாக்க இடும் தடித்த தாள். புத்தகத் துக்கு அட்டைப்போட நீல அட்டைத்தாள் வாங்கு (பே.வ.). 2. புத்தகங்களின் மேலட்டை. இந்த நூலின் அட்டைத்தாள் மெலிதாக உள்ளது (பே.

1.).

அட்டைப்படம் பெ. (இதழ்) கிழமை திங்கள் முதலிய இதழ்களில் அழகுற முன்பக்க அட்டைகளில் வெளி யிடப்பெறுவன. பொங்கலிதழில் அட்டைப்படம் அழகாக இருக்கிறது (செய்தி.வ.).

அட்டைப்பால் பெ. பனங்கள்.

(சாம்ப. அக.)

அட்டைப்பிசின் பெ. அட்டையைப்போல் நன்கு ஒட்டிக் கொள்ளும் பிசின். (பே.வ.)

அட்டைப்பிரயோகம் பெ. உடம்பில் கெட்ட இரத்தத்தை வெளியேற்ற அட்டைப்புழுவை ஒட்டி இரத்தத்தை உறிஞ்சச் செய்யும் சிகிச்சை முறை. (மருத்துவ வ.)

அட்டைப்பூச்சி பெ. வயிற்றுக்குள் அட்டையைப்போல் ஒட்டிக்கொண்டு வாழ்கிற நாடாப்புழு (வட் வ.)

அட்டைப்பெட்டி பெ. தடித்த காகிதத்தால் செய்யப் பட்ட பெட்டி. (நாட் .வ.)

அட்டைபோடு -தல் 6 வி. புத்தகத்துக்குக் காகித மேலுறை அமைத்தல். (நாட். வ.)

அட்டையாடல் பெ. போரில் துண்டிக்கப்பட்டவிடத்து அட்டைபோல வீரனுடல் வீரச்செயல் காட்டி ஆடுகை. உடம்பு ஆடுதலின் அட்டையாடல் எனவும் அத னைக் கூறுப (தொல். பொ. 71 நச்.).

அட்டையொட்டல் பெ. வழிப்போக்கர் மீதும் வேட்டைக் காரர் மீதும் அட்டை தானாகவே ஒட்டிக்கொண்டு இரத் தத்தை உறிஞ்சுகை. (சாம்ப. அக.)

அட்டைலட்சணம் பெ. அட்டைகளைக் கொண்டு இரத் தத்தை உறிஞ்சச் செய்யும் தன்வந்திரியின் நோய் நீக்குமுறை. (சாம்ப. அக.)

அட்டைவிதி பெ. அட்டைப் புழுக்களைக் கொண்டு நோய் நீக்கும் முறையைக் கூறும் நூல். (சாம்ப. அக.)

பெ. சொ. அ.1-8 அ

11

15

அட்டோலகம் பெ.

அடக்கம்2

1.ஆடம்பரம்.

(கதிரை. அக.) 2.

உல்லாசம். (சங். அக.)

அட இ. சொ. துயரம், இரக்கம், வியப்பு, வெறுப்பு முதலியவற்றை உணர்த்தும் இடைச்சொல். வம்மின் அட, வம்மின்

(கம்பரா. 6, 30, 147). அட, கெடு வாய் பல தொழிலும் இருக்கக் கல்வி அதிகம் என்று கற்றுவிட்டாய் (தனிப்பா. படிக்காசு. 1), அட, மண்ணில் தெரியுது வானம் (பாரதி.ஞானம். 6, 1). அட, தெய்வமே இவன் நிலை இப்படியா ஆகவேண்டும் (பே.வ.).

அடக்கச்சடங்கு பெ. பிணத்தை முறைப்படி அடக்கஞ் செய்கை. (புதுவை வ.)

அடக்கச்செலவு பெ. உடல் அடக்கத்துக்குச் செய்யும்

பணச்செலவு. (பே.வ.)

அடக்கஞ்செய் - தல் 1வி. பிணத்துக்கு

முறைப்படி ஈமச்சடங்காற்றுதல். அந்தப்

அவரவர்

பிள்ளை

யைப் பிரேத ஆலயத்தில் ஆடம்பரமாக அடக்கஞ் செய்தோம் (பிரதாப. ப. 40).

அடக்கம்1

க்கம்1 பெ. 1. மனம் மொழி மெய்களின் அடக்கம். தன்மை அடக்கம் வரைதல் (தொல். பொ. 256 இளம்.). அடக்கம் அமரருள் உய்க்கும் (குறள். 121). இளையான் அடக்கம் அடக்கம் (நாலடி. 65).

அறிவே அடக்கமுடையாய் போற்றி (தேவா. 6, 57, 6). 2. அடங்கியிருக்கை. ஆன்றவர் அடக்கம் போல் (கலித்.32,8). 3. பணிவொழுக்கம். அண்ணாந் தியலா ஆன்றுபுரி யடக்கம் (பெருங்.1,32, 66). அடக்கமென்பது உயர்ந்தோர்முன் அடங்கியொழு கும் ஒழுக்கம் (தொல். பொ. 6 பேரா.). அடக்கமும் பொறையுங் கருணையும் (குசே.50). அம்மான் என்றோர் அடக்கமில்லாமல் (நாஞ். மரு. மான். 6, 5). 4. பொறுமை. அடக்கமுடையார் அறிவிலர் என் றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா (வாக்குண். 16).5. மூச்சடக்கம். (மூச்சு அடங்கிவிட்ட நிலை) (பே.வ.) 6. இறந்தவர் உடலைப் புதைக்கை. அவரை அடக்கஞ் செய்துவிட்டனர் (நாட். வ.). 7. செறிந் திருக்கை. பை அடக்கமாகப் பவுன் பவுனாய் வைத் திருந்த (பஞ்ச.திருமுக. 1544). 8. புதைபொருள். (செ. ப. அக.) 9. மறைபொருள். அடக்கமாயிருக்கிறது (நாட். வ.). 10. உள்ளடங்கிய பொருள். நூலின் பொருள் அடக்கம் (நூல் வ.). 11. கருத்து. (சங். அக.) அடக்கம் 2 பெ. 1. செலவொடு சேர்ந்த மொத்த விலை. வீடுகட்டியதற்குச் செலவு அடக்கம்