பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடக்குமுறை

அடக்குமுறை பெ. (அரசு தன் வன்செயலால்) பிறர் செயல்களை ஒடுக்குகை. அடக்குமுறை முதன்முதலில் அவிழ்த்து விட்டதுஆர் (காந்திகாதை. 5, 6, 52).

பெ. கிளர்ச்சிகளை அடக்குமுறைச்சட்டம் ஒடுக்கு வதற்கு அரசு இயற்றிக்கொள்ளும் சட்டம். அயல் நாட் டில் அடக்குமுறைச்சட்டம் செயலுக்கு வந்துள்ளது (செய்தி.வ.).

அடக்குமுறையாட்சி பெ. மக்களை ஒடுக்கும் அரசாட்சி. அந்த நாட்டில் மக்களுக்கு எதிராக அடக்குமுறை ஆட்சி நடைபெறுகின்றது (செய்தி.வ.).

அடக்குவி-த்தல் 11வி. மனம் மொழி மெய் ஆகியவை ஒடுங்கச் செய்தல். அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே (தேவா. 6, 95,3).

அடகம் பெ. 1.வசம்பு. (பரி. அக.செ. ப. அக. அனு.) 2.நாய்வேளை. (சாம்ப. அக.)

மென் பிணி

அடகு1 பெ. 1. இலை, இலைக்கறி. அவிழ்ந்த குறுமுறி அடகு (மதுரைக். 531). அருந்தும் மெல்லடகு ஆரிட அருந்தும் என்று அழுங் கும் (கம்பரா. 5, 3, 15). அடகு இடுமின் ஓட்டகத்து என்று அயில்வார் (சீவக. 2623). அடகு அயில ஆர முதை விட்டு (நக்கீர. அந். 91). ஆயிரமாண்டு புல் லடகு மேயினான் (கந்தபு. 6, 14, 73). அடகு உண்டு அமர்ந்தானரோ (செ. பாகவத. 9, 9, 29). அட கென்று. சொல்லி அமுதத்தையிட்டார் (தனிச்.

ஒளவை.ப. 12)

அடகு பெ. மகளிர் விளையாட்டு வகை, கூடல் அனை யாளை ஆடா அடகினுங் காணேன் (திணைமாலை.

4).

அடகு3

(அடவு') பெ. அடைமானம். ஆபரணம் வைத்து அடகு தேடுபொருள் (திருப்பு. 752). முந்தி ஈந்த அடகை முறிப்படிக்கு...விற்று ஆளலாம் (மனுவிஞ்.197). நகையை அடகு வைத்திருக்கிறான்

(நாட். வ.).

அடகுபிடி-த்தல்

11 வி. கொடுக்கும் கடனுக்கீடாக நகை, பாத்திரம் போன்ற பொருளை வாங்கி வைத் தல். இங்கு அடகு பிடிக்கப்படும் (நாட். வ.)

அடகோலை பெ. அடைமான ஓலை. (செ. ப. அக.அனு.) அடங்க வி.அ . 1. உள்ளாக. அவனிமுழுதும் ஓரடிக் குள் அடங்க அளந்துகொண்டவனே (சூத. முத்தி.

1

17

அடங்கலன்

429). 2. முழுவதும். கணனடங்கக் கற்றாரும் இல் (சிறுபஞ்ச. 29). தயிர் வாவியும் நெய்யளறும் அடங்க (பெரியாழ். தி. 3, 5, 1). வயலடங்கக் கரும் பும் அதுக்கு நிழல் செய்யும் செந்நெல்லும் சூழ்ந்து கிடக்கும் (திருவாய். 8, 9, 4 ஈடு). உடம்படங்கவும் ஊன்கெட (பெரியபு. 21,359). பௌவம் அடங்க வளைந்த குடைப் பண்டித சோழன் (கலிங். 532). வெளியடங்க முடியச் சென்றேறி (தக்க. 108 ப. உரை). செய்தன இப்பணி அடங்கவும் (தெ.இ.க. 8, 69, 3). உலகடங்க ஒருநொடியில்

நீ (சிதம். செய்யுட்.68,11).

எரித்திடும்

அடங்கம் பெ. கடுகுரோகணி. (வைத். விரி. அக. ப. 13) அடங்கல் பெ. 1. அடக்கமாக இருக்கை. கதம்காத் துக்கற்றடங்கல் ஆற்றுவான் (குறள். 130). அடங் கல் இல்கொடுந் தொழில் அரக்கர் (கம்பரா. 3, 6, 164). 2. எல்லாம், முழுவதும். பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும் (சிலப். 5,71). மன்னுயிர் அடங்கலும் உலகும் வேறமைத்து (கம்பரா. 1, 6, 4). இமையோர் புரம் அடங்கலும் அரண் செய்து (கலிங். 190). அண்டம் அடங்கலையும் தந்து காத்து (திருவரங். அந். 59). உலகடங்கலும் துயி லெழ (தக்க. காப்பு). திக்கடங்கலும் கடந்த அத் திகிரி (திருவிளை. பு. 3,13). ஊர் அடங்கலும் கழனி நெடுநாளாகப் பாழாகிக் கிடந்தபடி (தெ. இ.க.22, 251). ககனம் எண்திசை அடங்கலும் பரந்து (சீறாப்பு.1 நாட்டுச்.2). 3. அடக்குகை. வானநாட் டையும் அடங்கல்வீழி கொண்டீர் (தேவா.7,88,

2).

அடங்கல்' பெ. செய்யத்தக்கது. தாதையர் இட்ட காரியம் அடங்கலின்றாயினும் (சேதுபு. அவைய, 2).

அடங்கல்3 பெ. தங்குமிடம். அடங்கல் வீழி கொண் டிருந்தீர் (பெரியபு. 29, 59).

அடங்கல் + பெ. ஒப்பந்தவேலை. (செ. ப. அக.)

அடங்கல்' பெ. 1. சாகுபடிச் சோதனை. (செ. ப. அக.) 2. கிராமக் கணக்கர் வைத்திருக்கும் சாகுபடிக்கணக்கு. இந்த ஊர்ப் பயிர்க்கணக்கெல்லாம் கர்ணத்திட முள்ள அடங்கலில் வந்துவிடும் (பே.வ.).

அடங்கல்டாப்பு பெ. கண்டுமுதற் கணக்கு. (செ.ப.அக. அனு.)

ஊர்

அடங்கலன் பெ. 1. பகைவன். அடங்கலார் எரிய (தேவா. 7, 6, 1). வேற்று அடங்கலர் ஊர்