பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடி-த்தல்

(நாட். வ.). 6. (காற்று) வேகமாக வீசுதல். அடிக் கின்ற காற்றே நீ யாராலேதான் சுழல்கின்றாய் (தாயுமா. 14, 26 ) நேற்றும் இன்றும் கொம்புசுற்றிக் காற்றடிக்குதே (முக்கூடற். 35). காற்றடிக்குது கடல் குமுறுது (பாரதி. தனிப்பா. 5). 7. 7. கையால் அறைதல். அடித்தடித்து அக்காரம் முன் தீற்றிய அற்புதம் (திருவாச. 41, 3), தீரா வெகுளியளாய்ச், சிக்கென ஆர்த்தடிப்ப (இயற். சிறியதிரு மடல் 36). அக் கிரமத்தாற் குற்றம் அடித்துத் தீர்த்து (சி. சி. சுப. 2,15). அடித்தது போதும் அணைத்திடல் வேண் டும் (திருவருட்பா 3386). 8. கம்பு அல்லது பிற கருவியால் அடித்தல். அருள் என்னும் தண்டத்தால் அடித்து (இயற். பெரியதிருவந் 26) அடற் தடுங் கதையால் அடித்திடும் (பார்தம். 5, 3, 15). வளாரி னால் அடித்துத் தீய தண்டமும் இடுவர் (சி. சி. 106). பஞ்சவரில் ஒருவன் வில்லால் அடித்த புண். (தனிப்பா. இராம. 26). கல்லால் எறிந்தும் கைவில்லால் அடித்தும் (தாயுமா. 27,22). அடித் தானே அசோகவனந் தன்னை (இராமநா. 5,14 தரு). 9. கொல்லுதல். மாடு ஆடுகளை அடித்து அவித் துப் பாரணம் செய்ய (தனிச். சிந். வேத. 227). சாதிக் கோழியை அடிச்சு (மலைய. ப. 15). அடித் தானே ரகுராமன் கோதண்டம் கைபிடித்தானே (இராம்நா. 3, 7. தரு).

அடி5-த்தல் 11வி. 1.கட்டுதல். சோற்றால் அடித்த சுவர் (நாட். வ.). 2. ஒழுங்குபடுத்துதல், சமப்படுத்து தல். கல் அடித்து அடுக்கி (கம்பரா. 1, 3, 24). பரம்பு அடிக்க உடைந்து அளைந்த பழனச் சேற்று (ஏரெழு. 26).

அடி - த்தல் 11 வி. 1. தைத்தல். சட்டையை அடித் துக்கொடு (நட்.வ.). 2. (முத்திரை முதலியன) பதித்தல். முத்திரை அடித்துத் தா ((LDGIT.).

அடி-த்தல் 11 வி. 1. நிரப்புதல்.

காற்று அடித்துவா

(பே.

வ.).

2.

கால்பந்தில் பெய்தல்.

மழை நன்கு அடித்து ஓய்ந்தது (நாட். வ.).

1.

அடி8-த்தல் 11 வி. வந்து சேர்தல். என்ன வித மாகவோ அடித்தது யோகம் ( சர்வ. கீர்த். 191).2. (உடலில் சுரம்) இருத்தல். காய்ச்சல் அடிக்கிறது (தாட்.வ.).

அடி9-த்தல் 11 வி. கொடுத்தல். பாலமுதுக்கு முன் னாள் திருச்சுரபி இடையர்வசம் அடித்துவைத்த பசு (தெ.இ.க. 8, 427).

1

25

அடி18

அடி10-த்தல் 11 வி. திருடுதல். அவன் பணத்தை எவனோ அடித்துக் கொண்டு போய்விட்டான். (நாட். வ).

அடி 11-த்தல் 11 வி. நீக்குதல். அந்தப் பையனின் பேரைப் பதிவேட்டில் அடித்துவிட்டார்கள் (புதிய

வ.).

அடி12-த்தல் 11 வி. உடைத்து இழுத்துச் செல்லுதல்.

வெள்ளம் பாலத்தை அடித்துச் சென்றது (நாட்.வ.). அடி13-த்தல் 11 வி. (சாராயம் கள் முதலியன) குடித் தல். இரண்டு மொந்தை அடித்தான் (நாட். வ.). அடி14-த்தல் 11 வி. பதறுதல். கேட்கவில்லை, மனம் அடித்துக் கொள்கிறது (பே.வ.).

15

அடி Qu. 1.

பெ. 1. கால், பாதம். அடிபுதை அரணம் எய்தி (பெரும்பாண். 69). ஒற்றினவோ அவள் அஞ் சிலம்பு அடியே (ஐங். 389). வந்து அடி பொருந்தி முந்தை நிற்பின் (புறநா.10, 5). மன் னன் அடிதழீஇ நிற்கும் உலகு (குறள். 544).ஆங்க வன் அடிமுதல் வீழ்ந்தாங்கு (சிலப். 11, 175). மொய்ம்மலர்த்தார் மாறன் அடிமிசையே காணப் படும் (முத்தொள். 35). பெருஞ்செல்வம் ஆக்கும் ஐயாறன் அடித்தலமே (தேவா. 4,92, 7). அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ (திரு வாய். 3, 1, 1). செம்மலர்ச் சீறடி (இறை. அக. 2 உரை). பஞ்சு ஒக்கும் அடிகள் (கம்பரா 3, 7, 70). நிலத்து அடி இடாததே (கலிங். 84). நீர்பூத்த திருமகளும் நிலமகளும் அடிவருட (திருவரங். கலம். 7). திலக முனிவர்கோன் சீரடிக் கமலத்தினை வாழ்த்துவேன் (பாரதி. தேசியம். 46,3). 2. கால் சுவடு. (சம். அக.) செ.ப.அக.) 3. நெறி. 3. நெறி. பெரியோர் சென்ற அடி வழிப் பிழையாது (மதுரைக் 192). 4. கீழ்ப்பகுதி. பாடகக்கால் அடி பதுமத்து ஒப்பன (கம்பரா. 1, 3,31). இரண்டு பாம்புகள் ஒரு பாலத்தடியே வெளிப்பட்டு (பாரதி. வசன. 5). அடி வயிறு (நாட். 5. அடிப்பாகம், ஆதாரப் பகுதி. அம்மென் மருங்குல் அசைய அடிபரந்த (பெருங். 2, 2, 209). மண் அடி உற்று ... எய்த நோக்கி (கம்பரா. 5, 1, 92). புட்பகரபத்தி மடல் அடியோடுமென்று (தெ.இ.க. 2, 15). சுற்றுறும் அளவு உரைக் குறின் அடியுறுஞ்சுற்று (செ. பாகவத. 5, 3, 18) 6.அடிவாரம். தண் பரங்குன்றத்து அடிதொட் டேன் (பரிபா. 8, 62). முத்தாறு வந்து அடிவீழ் தரும் முதுகுன்றடைவோமே (தேவா. 1, 12, 1). அடி பெ. 1.நடக்கும்போது இரு கால் சுவடுக்கும், இடைப்பட்ட தூரம், ஓர் எட்டு. ஏழடி இடுதல் ஆற்றா

Q.).

16

...