பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிக்கடி சம்போகி

அடிக்கடி சம்போகி1 பெ. திரும்பத் திரும்பப் புணரும் இயல்புடைய சேவல். (சாம்ப. அக.)

அடிக்கடி சம்போகி' பெ. அடைக்கலங்குருவி. (முன்.)

அடிக்கணு பெ. கைவிரலின்

அடிப்பாகமான பகுதி.

(சிற். செந்.ப.216)

அடிக்கணை பெ. கணைக்கால். இணைவரால் நிகர் அடிக்கணையாளை (சேதுபு. விதூம. 30).

அடிக்கயில் பெ. தேங்காயின் கண்ணுள்ள மூடி. (இலங்.

வ.)

அடிக்கல் பெ. (கட்டடம் எழுப்ப) முதலில் சடங் கோடு இடப்படும் கல். மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது (நாட். வ.).

அடிக்கல்நாட்டு-தல் 5 வி. கட்டடத்துக்காக அடிப்படைக் கல் இடுதல். கல்லூரிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார் (செய்தி.வ.).

அடிக்கலம் பெ. (காலணி) சிலம்பு. அடிக்கலம் அரற்ற (சீவக. 2041) அடிக்கலந் திருத்தி (சூளா.

1114).

அடிக்கழஞ்சு பெறு-தல் 6 வி. பெருமதிப்புப் பெறுதல். திருவடிகளை வாழ்த்தப் பாருங்கோள் அடிக்கழஞ்சு பெறும் மருந்திறே (திருவாய். 4, 6, 9 ஈடு).

அடிக்கழிவு பெ. முறைகேடு. நீ செய்கிற அடிக்கழி வால் உனக்கொரு பலமில்லை (திருவாய். 6,2,6 ஈடு).

அடிக்களம் பெ. களத்திற் சிதறிக் கிடக்கும் தானியம். (செ.ப.அக.)

அடிக்காட்டுகை பெ.

அள்ளிப்பிடிக்கை. (திவ்ய. அக.)

அடிக்காந்தல் பெ. 1. பண்டங்களைக் காய்ச்சும்போது அவை பாண்டத்தின் அடியிற் பற்றித் தீய்கை. (சாம்ப. அக.) 2. பாண்டத்தின் அடியில் தீய்ந்தவை. (பே.வ.)

அடி

க்காயம் பெ. அடியால் உண்டான புண். (நாட். வ.)

அடிக்காறை பெ. கால் அணிவகை. திருவடிக்காறை ஒன்று பொன் பன்னிரு கழஞ்சு (தெ. இ. க. 2, 34).

அடிக்கீழ்ப்படுத்து-தல் 5 வி. வென்று தன்னாணைக் குள்ளாக்குதல். (செ.ப. அக.)

127

அடிக்கொள்(ளு)-தல்

அடிக்குச்சி பெ. பன்னிரண்டு அங்குல அளவுகோல்.

(பே.வ.)

அடிக்குடல் பெ. சிறுகுடலின் கீழ்ப்பாகம். (சாம்ப. அக.)

அடிக்குடலிசிவு பெ. சிறுகுடல் இழுப்பு நோய்.

(LOGIT.)

அடிக்குடி பெ

இறைவனின் அடிமைத் தொண்டன். வைத்திடு இங்கு என்னை நின்னடிக்குடியா (தாயுமா.

24, 37).

அடிக்குடில்1 பெ. 1. இறையடிமைக் குடும்பம். அடி யோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண் (பெரியாழ். தி. 1, 110). அடியோம் அடிக்குடில் ஒருத் தரும் வழாமை ஒடுக்கினன் (திருவாச. 3,160).2. பணியாளர்கள் குடியிருப்பு, அடிச்சேரி. அன்னந்

துஞ்சும் அடிக்குடிலின் (சீவக. 2588).

அடிக்குடில்' பெ. புறநகர். (வின்.)

அடிக்குடில்3 பெ. வேடர் இருக்கும் ஊர். (சங். அக.)

அடிக்குரம் பெ. அடிக்குளம்பு. அடிக்குரம் அழுத்தும் (திருவிளை. பு. 59, 50).

அடிக்குழம்பு பெ. அடிவண்டல். (செ.ப.அக. அனு.)

அடிக்குள் வி. அ. மிகவிரைவில். ஓரடிக்குள்ளே வா

(நாட். வ.)

அடிக்குறிப்பு பெ. நூல் கருத்துக்குரிய விளக்கத்தை அந்தந்தப் பக்கத்தின் அடியில் குறிப்பிடும் முறை. அந் நூலில் அடிக்குறிப்பு நன்றாக உள்ளது (புதிய வ.).

அடிக்கூடு பெ. நூல் சுற்றிவைக்கும் குழல். (ஆட்சி. அக.) அடிக்கொதித்தல் பெ. பாதம் சுடுகை. (திவ்ய. அக.)

அடிக்கொருக்க

வி. அ. அடிக்கடி. அவன் அடிக்

கொருக்க ஊருக்குப் போகிறான் (கோவை (கோவை வ.).

அடிக்கொருக்கால்

வி.அ.

அடிக்கடி. வீட்டுக்கு அடிக்கொருக்கால் வந்துபோ (முன்.).

அடிக்கொள்(ளு)-தல் 2 வி. 1. தோன்றுதல், முளைத் தல். ஐய நுண்மருங்குல் நோவ அடிக்கொண்ட குவவுக்கொங்கை (சூளா. 673). ஆதியுகம் வந்து அடிக்கொள்ள (விக்கிர. உலா 120). வாட்டடங்

...