பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடித்தவம்

அடித்தவம் பெ. திருவடித் தொண்டு. அடித்தவமல் லாமல் ஆரையும் அறியேன் (தேவா. 7, 14, 6).

அடித்தழும்பு பெ. அடிச்சுவடு. (வின்.)

அடித்தள்ளுகை பெ. அண்டி (ஆசனவாய்) தள்ளுகை. (செ.ப. அக.)

முதல்

அடித்தளம்1 பெ. 1. கட்டடத்தின் அடிப்பகுதி, அடி மட்டம். (செ. ப. அக.) 2. மாடி வீட்டின் நிலை. (பே.வ.) 3. கிணற்றின் அடியிடம். (முன்.) அடித்தளம் 2 பெ. படையின் பின்பகுதி. (செ. ப.அக.அனு.)

அடித்தளம்3 பெ. அடிப்படைக்காரணம். அவர் பேச்சுக்கு ஏதாவது அடித்தளம் உண்டா? (பே.வ.).

அடித்தான் பிடித்தான் வியாபாரம் பெ. சண்டை சச்சர வான செய்கை. (நாட். வ.)

அடித்தி' (அடிச்சி) பெ. அடியவள். அடித்தியாரும் முன்பட்டது ஒழிந்து நுங்கண் முகவியர் முனிவு தீர்ந்தார் (சீவக. 2045). அடிகண் முன் அடித்தி யார் (சூளா. 1563).

அடித்தி2 பெ. வணிகப் பிரதிநிதி. (செ.ப. அக.)

அடித்திகம் பெ. அமுக்கிராச் செடி. (மலை அக /செ.

ப. அக.)

அடித்திப்பை பெ. நிலைப்பீடம். (செ.ப.அக.)

அடித்திரும்பு-தல் 5 வி. பூமி சுற்றுதலால் மேல்பக்க நிழல் கீழ்ப்பக்கத்துக்கு வருதல், இறங்கு வெயில்.

(ரா. வட். அக.)

அடித்திவியாபாரம் பெ. மொத்த வணிகம்.

அக.)

(செ.ப.

அடித்துக்கொண்டுபோ-தல் 4 வி./5 வி. 1. வாரிக்கொண்டு செல்லுதல். வெள்ளம் ஊரை அடித்துக்கொண்டு போயிற்று (நாட். வ.).2. கொள்ளைகொண்டுசெல்லு தல். வீட்டிலுள்ள பொருள்களைக் கொள்ளைக் கூட்டம் அடித்துக்கொண்டு போய்விட்டது (முன்.)

அடித்துக்கொள்(ளு) -தல் 2 வி. 1. அறைந்து கொள்ளு தல். தலையில் அடித்துக்கொண்டாள் (நாட்.வ.). பலமுறை தடுத்துரைத்தல். அது செய்யத்தகாத தென்று முன்னமே அடித்துக்கொண்டேன் (முன்.).

2.

3.

சண்டையிடுதல். இருவருமே வீணே அடித்துக் கொள்ளுகிறார்கள் (முன்.). 4. மனம் படபடப்புடன்

130

அடித்தொண்டை

வருந்துதல்.

அந்நிகழ்ச்சியைப் பார்த்ததிலிருந்து

என் மனம் அடித்துக்கொள்கிறது (முன்.).

அடித்துக்கொளுத்து-தல் 5 வி. போட்டியில் திறமை காட் டுதல். நேற்று நடந்த பேச்சுப்போட்டியில் உங்கள் மகன் அடித்துக் கொளுத்திவிட்டான். (நாட்.வ.).

அடித்துச்சொல்(லு )-தல் 5 வி. வலியுறுத்திக் கூறுதல். தான் அதைச் செய்யவில்லையென்று அடித்துச் சொல்கிறான் (முன்.).

அடித்துண்டு பெ. வாழ்க்கைக்கு வேண்டிய பொருளு தவி, சீவனாம்சம். (செ. ப. அக. அனு.)

அடித்துப்பேசு - தல் 5 வி. வலியுறுத்திக் கூறுதல். தன் கருத்தை அவன் அடித்துப்பேசுகிறான் (நாட் .வ.).

அடித்துமுதலானது

பெ. கதிரையடித்துக் களத்திற்

குவித்த தானியம். (செ. ப.அக. அனு.)

அடித்துவிடு-தல் 6 வி. பலவந்தமாக முடித்தல். (முன்.)

அடித்துவிழு-தல் 4 வி. இழவு வீட்டில்

மாரடித்து

விழுந்து அழுதல். (செ. ப. அக.)

அடித்தூறு பெ. 1. பலவாகக் கிளைத்த புல்பூண்டு களின் வேர்ப்பகுதி. (நாட். வ.) 2. மரத்தின் அடிக் கட்டை. (முன்)

அடித்தேறு பெ. அநீதி. (முன்.)

அடித்தொங்கல் பெ. மிகக் கடைசிப்பகுதி. (இலங். வ.)

அடித்தொடை1 பெ. 1. தொடையின்

மேற்பாகம். (செ. ப. அக. அனு.) 2. தொடையின் பின்புறம்.

(முன்.)

அடித்தொடை2

பெ. (யாப்.) செய்யுளின் அடிதோ றும் அமையும் மோனை, எதுகை முதலாகிய தொடை. (யாப். காரிகை 16)

அடித்தொண்டன் பெ. திருவடிக்குத் தொண்டு செய்ப வன்.ஆரூர் நறுமலர் நாதன்

அடித்தொண்டன் நம்பி நந்தி (தேவா. 4, 102,2). தென் நாவலர்கோன் அடித்தொண்டன் (தேவா. 7,3,10).

அடித்தொண்டை பெ. 1.தொண்டையின் கீழ்ப்பகுதி. (மருத். க.சொ. ப. 126) 2. கனத்த, கரகரத்த குரல். அடித்தொண்டையில் பேசுகிறான் (நாட். வ).