பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிநிலைச்சாத்து

குறடு, பாதுகை. பரதநம்பிக்கு அன்று அடிநிலை ஈந்தானை (பெரியாழ்.தி.3, 9. 6). அடிநிலைமேல் நந்திமாகாளர் கடைகழிந்த போழ்தத்து (சேரமான்.

உலா 21).

அடிநிலைச்சாத்து பெ. குதிரைச் சவாரி செய்வோர் கால் வைப்பதற்காக இருக்கையிலிருந்து தொங்கவிடப் பட்டிருக்கும் கால்தாங்கி, அங்கவடி. அடிநிலைச் சாத் தோடு யாப்புப் பிணியுlஇ (பெருங். 2,18,22).

அடிநிழல் பெ. ஒருவர் பாதம் அடைந்து பெறும் பாது காப்பு. அடிநிழல் வட்டம் அடையத்தரூஉம் என்று ...

(பெருங். 1, 47, 47, 78). அடிநிழல் தருக

அருளிச்செய்தான் (சீவக. 1087).

அடிநிழலார் பெ. குடிகள். (செ.ப. அக.)

அடிநீறு பெ. பாத தூளி. நின்றபிரான் அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே (திருவாய். 5,9,2).

அடிப்பட்டகாந்தி பெ.

தீமுறுகற்பாடாணம்,

(செ.ப.

அக.)

அடிப்பட்டகெந்தி பெ. திமிர்பாடாணம். (சித். பரி. அக.

u. 154)

அடிப்பட்டசான்றோர் பெ. பண்டை நல்லிசைப்புலவர். இலக்கணம் அன்றெனினும் இலக்கணமுடையது போல் அடிப்பட்ட சான்றோரால் வழங்கப்பட்டு வருவதும் (நன். 266 மயிலை.).

அடிப்பட்டடைநெல் பெ. பெ. களத்துப் பட்டடையின் அடியில் வைக்கோலோடு கலந்துகிடக்கும் நெல்.

அனு.)

(செ.ப. அக.

அடிப்பட்டவழக்கு பெ. தொன்றுதொட்டு வரும்வழக்கு.

(செ. ப. அக.)

அடிப்படர்-தல் 4வி.

1.

லூழி அடிப்படர

(மதுரைக்.

பொருந்தி வருதல். நல் 21). 2. (வேர்

போன்று) கீழேபரவுதல். (செ.ப.அக.)

அடிப்படி பெ. கதவுநிலையின் தரைப்பகுதியிலுள்ள படிச்சட்டம். (செ. ப. அக, அனு.)

அடிப்படு-தல் 6 வி. 1. அடிச்சுவடுபடுதல். சிலநாள் அடிப்படிற் கல்வரையும் உண்டா நெறி (நாலடி. 154).2. கீழ்ப்படிதல். ஆணைகொண்டு அடிப்பட

13

2

அடிப்படையுரிமை

விருந்தன்று (புற. வெண்.125).

3.

அம்புவி பல்

லாண்டு அடிப்பட ஆண்டான் (பாரதம். 5, 1, 3). பயிலுதல், அனுபவம் பெறுதல். ஒழுகுதலைக் கற்றலாவது அடிப்படுதல் (குறள். 140 பரிமே.). காவலில் அடிப்பட்டோரை அழைத்து (சிலப். பதி தொன்றுதொட்டுவருதல். அடிப்பட்ட சான்றோர் (நன். 266 மயிலை ).

கம் 29 அடியார்க்.).

4.

அடிப்படு-த்தல் 11 வி. 1. கீழ்ப்படுத்தல். அடிப் படுப்பான் மண் ஆண்டு அரசு. (ஏலாதி 42). பிற புலங்கள் அடிப்படுத்து (பெரியபு. 47, 2). திக் கெலாம் அடிப்படுத்தும் (யசோதர. 43). சிங்கள தேசம் அடிப்படுத்து (மெய்க். சோழர் 14, 4). 2. நிலைபெறச்செய்தல். தன்நெறி முறைமை அடிப் படுத்து வருதற்குப் பிரிவன் (கலித். 26, 1 நச்.). 3. பயிற்றல். இரு முதுகுரவரும் இவரை இல்வாழ்க் கையில் அடிப்படுத்த வேண்டி (சிலப். பதிகம் 64 அடியார்க்.). 4. திருத்துதல். உலகம் தந்து அடிப் படுத்ததை (பரிபா. 4, 23 இவ்வுலகத்தை அவ்வெள்ளத்தி னின்றும் எடுத்துத் திருத்திய தொழில் பரிமே.).

அடிப்படுத்து - தல் 5 வி. கீழ்ப்படுத்துதல்.

சோழ

அரசு ஒரு காலத்தில் பல நாடுகளை அடிப்படுத் துதலில் முன் நின்றது (நாட். வ.).

அடிப்படை பெ. 1. சேனையில் தலைமையாகவும் ஆதா ரமாகவும் உள்ள பகுதி. அடிப்படையைத்தான் ஏவி (பாரத வெண். 23). 2.சுவரின் அடித்தளம். (செ. ப. அக.) 3.நிலைக்களம். வாழ்க்கைக்கு அடிப்படை யானது கல்வி(நாட்.வ.). 4. ஆதாரம். அடிப்படை ஊதியத்தை உயர்த்தக் கோரிக்கை (செய்தி. வ.)

அடிப்படைக்கல்வி பெ. 1. (இக்) கல்வி கற்கும் வய துள்ள குழந்தைகளுக்கு எழுதவும் படிக்கவும் தரவேண் டிய ஆதாரமான கல்விப் பயிற்சி. எல்லாக் குழந்தை கட்கும் அடிப்படைக் கல்வி அவசியம் வேண்டும் (பே.வ). 2.காந்தி பரப்பிய கல்வித் திட்டம், ஆதா ரக் கல்வி, (நாட். வ.)

பாது

அடிப்படையுரிமை பெ. ஒவ்வொரு நாடும் அரசியல் அமைப்பினால் குடிமக்களுக்குப் பேச்சு, எழுத்து, வாக் களிப்பு முதலியவற்றில் தரவேண்டிய ஆதாரமான உரிமை. மக்களின் அடிப்படை உரிமைகள் காக்கப்பட வேண்டும் (செய்தி.வ.). அரசியல் அமைப்பினால் உறுதியளிக்கப்பட்ட உறுதியளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளின் பட்டியல் தனிமனிதனின் சுதந்திரத் தைப் பாதுகாக்கும் கேடயமாகும் (அரசியல் 11 ப.

85).