பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்படையூதியம்

அடிப்படையூதியம் பெ. (இக்.) ஒரே வகையான பணி யாளர்க்கு வரையறுக்கப்படுவதும், பிற படிகள் சேராத தும் ஆகிய சம்பளத்தொகை. இப்போது அரசு ஊழி யர்க்கு அடிப்படை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது (செய்தி.வ.).

அடிப்பண்டம் பெ.

மூலப்பொருள். (காகிதம் செய் தற்கு) அடிப்பண்டமாகக் கூளம் மட்டும் பயன் படுத்தப்பட்டது (அச்சுக்கலை ப. 24).

அடிப்பணி பெ. குற்றேவல். அன்னவற்குரியள் என்ன அடிப்பணி செய்வல் என்றான் (சீவக. 552).

(வின்.)

அடிப்பதறு-தல் 5வி. 1. கால் நடுங்குதல். 2. நிலை தடுமாறுதல், மனங்கலங்குதல். (இலங்.வ.)

அடிப்பந்தி Qu. 1. முதன்முறையுண்போர் வரிசை. இடுகிறவன் தன்னவன் ஆனால் அடிப்பந்தியில் இருந்தாலென்ன கடைப்பந்தியில் இருந்தாலென்ன உண்போரின் முதல் வரிசை.

(பழ . அக. 1546). (பே.வ.)

2.

அடிப்பரத்து-தல் 5 வி. பூப்பு நீராட்டுச் சடங்கில், நிலத் தில் நெல் பரப்பி அதன்மேற் பூப்படைந்த பெண்ணை உட்காரவைத்தல். (செ.ப.அக.)

அடிப்பல்

பெ.

கீழ் வரிசைப் பல். அடிப்பல் ஆடு கிறது (பே.வ.).

அடிப்பலம் பெ. அடிப்படை வலிமை. (செ.ப. அக.)

அடிப்பலன் பெ. முதற்பலன். (செ.ப.அக.)

அடிப்பற்று 1 பெ. சமையலில் தீய்ந்துபோன சோறு கறி

முதலியன. (பே.வ.)

அடிப்பற்று' பெ. பாறையுப்பு. (யாழ். அக. அனு.)

லும்

அடிப்பற்று 1-தல் 5 வி. திருவடியைப் பற்றுதல். அடிப் பற்றின மருந்தன்றோ (திருவாய். 4,6,9, ஈடு).

அடிப்பற்று'-தல் 5 வி.

சமைத்த கலத்தின் அடியில் சோறு கறி முதலியன தீய்தல், அடியில் பிடித்தல். கனல் அடிப்பற்றாவண்ணம் இடைவிடாமல் துழாவி (தைலவ. 94/செ.ப.அக.).

அடிப்பாடன் பெ. சீடன். உன்றன் அடிப்பாடன்

(அரிச். வெண். 86).

வங்கம)க்

13

3

155).

அடிப்பினை

அடிப்பாடு1 பெ. பெ. அடிச்சுவடு. நிலந்தனில் அடிப்பாடு உணர்ந்து பின்தொடர்ந்தார் (நல். பாரத. அரசநீ. 2. நடந்து நடந்துண்டான வழி, அடிப்பட்ட வழி. (யாழ். அக.) 3. வழக்கு. பதத்துள் அடிப் பாடும் செய்யுள் தொடையும் ... முதலாயினவாக வருவன (நன். 132 மயிலை.). அடிப்பாடு காரண மாகத் தந்தம் என விகாரம் ஆயிற்று (குறள். நுண். 63). 4. உறுதியான நிலை. இதிறே உபாயத் தில் அடிப்பாடு (திருவாய். 6, 3, 36 ஈடு). பழுதில் அடிப்பாடு பைங்கழற்கால் ஐவர்க்கு (பாரதவெண். 173). 5.வரலாறு. உகந்தருளின நிலங்களுடைய அடிப்பாடு சொல்லுகிறது (திருமங்கை. திருநெடுந். 6 வியாக்.). 6. திருவடியில் ஈடுபாடு. இதென்ன அடிப் பாடுதான் (திருவாய். 4,1,11 ஈடு).

.

வெல்

அடிப்பாடு2 பெ. (இலக்.) பகுபத உறுப்பில் முதல் நிலை. பகுதி... அடிப்பாடு தாது என்பன லாம் ஒருபொருள் (நன். 321 சடகோ ).

அடிப்பாய்-தல் 4 வி. தாவிக்குதித்தல். (வின்.)

அடிப்பாரம் 1 பெ. கட்டடத்தின் அடிப்படை. (கோயிலொ.

ப.130)

அடிப்பாரம்' பெ. அடியிலுள்ள கனம். (செ. ப. அக.) அடிப்பாரம் 3 பெ. சிரங்கின் புடைப்பு. (முன்.).

அடிப்பிச்சை பெ. 1. பிச்சையெடுக்கப் போகும் போது வெறுங்கலமாகக்கொண்டு போகாமல் அதிலிட்டுக் கொள்ளும் சிறிதளவான அரிசி. (நாட்.வ.) 2. சிறு மூலதனம். அவனுக்கு அடிப்பிச்சை எதாவது

உண்டா? (வட்.வ.).

100

அடிப்பிடி'-த்தல் (அடிபிடித்தல்) 11 வி. 1. அடிச்சுவட் டைக் கண்டுபிடித்தல், குறிப்பறிதல். (செ.ப. அக.) 2. முதலிலிருந்து தொடங்குதல். அடிப்பிடித்து நான் சொல்லி வருகிறேன் (வட். வ.). 3. காலைப்பிடித்து வேண்டுதல். (நாட்.வ.) 4. பின்தொடர்தல் (வின்.)

改良

அடிப்பிடி-த்தல் 11 வி. சோறு கறி முதலியன சமையற் கலத்தின் அடியில் பற்றுதல். (நாட்.வ.)

அடிப்பிடி-த்தல் 11 வி. தட்டிமுடைதல். (செ.ப. அக.)

அடிப்பிரதட்சிணம் பெ. (அடிமேலடியாக வைத்து ) வலம்வருகை. (செ . ப . அக.)

ம்.

அடிப்பினை பெ. 1. ஈயம் கலந்துள்ள மணல் . (செ. ப. அக.) 2. ஈயம், வங்கம். (வைத், விரி. அக. ப. 13)