பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியொட்டி

ம்

வர்கள் அங்ஙனம் ஓடாமைக்கு நட்டுவைத்த அடி யொட்டி உள்ளடியிலே பாய்கையினாலே (சீவக.

2768 நச் ).

யொட்டி 2 பெ. பூடுவகை. (செ. ப. அக. அனு.)

அடியொட்டி3 (அடியொற்றி) பெ. (அடியொற்றி) பெ. முந்தையோரைப் பின்பற்றுபவன். (பே.வ.)

அடியொத்தகாலம் பெ. நிழல் காலடியில் நிற்கும் நண் பகல். கூகை அடியொத்த காலத்தே கூப்பிடும்படியா கவும் (பட்டினப். 268 நச்.).

அடியொற்றி (அடியொட்டி3) பெ. பின்பற்றுபவன். (நாட். வ.)

முந்தையோரைப்

அடியொற்று-தல் 5 வி. 1. பின்பற்றுதல். அதை அடி யொற்றியாயிற்று இவர் இப்படி அருளிச்செய்தது (திருவாய். நூற். 1 வியாக்.). 2. புறப்படுதல். பரமபதத் தினின்றும் அடியொற்றினான் திருமலையளவும் பயணமுண்டாயிருந்தது (அமலனாதி. 3 அழ.).

அடியோ பெ. பெண்ணை விளிக்கும் சொல். அடியோ பெண்ணே (வருணா. குற.105).

அடியோட்டி பெ.

1.

மனிதர் வைக்கின்ற, விலங்கு களின் காலைக் கிழிக்கவல்லதான முள் போன்ற கூரமைந்த கருவி வகை. (வின்.) 2. நெருஞ்சில்.

(சாம்ப. அக.)

அடியோடு வி. அ. முழுவதும்,

யோடு இறந்து (திருப்பு. 1034).

அறஞ்செயாது அடி

அடியோம் பெ. அடியாராகிய யாம். அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு (பெரியாழ். தி. 1, 1, 2). அங்கண் அரசை அடி யோங்கட்கு ஆரமுதை (திருவாச. 7, 17).

அடியோர் பெ. குற்றேவல் செய்வோர். அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் (தொல்.பொ. 25 இளம்.). அடியோர் மைந்தர் அகலத்து அகலா (பரிபா. 8, 43).

சாயங்க17 அடியோலப்படு-தல் 6 வி. மிகவும் துயரப்படுதல். அந்தக் குடும்பம் அடியோலப்படுகிறது (நாஞ்.வ.).

அடிலவோடாகம் பெ. மலையாள நாட்டில் வளரும் ஒரு செடி. (சாம்ப. அக.)

அடிவட்டம் 1

பெ. பாத அளவு. அடிவட்டத்தால் அளப்ப (இயற். மூன்றாம் திருவந். 13).

140

அடிவாரம்

அடிவட்டம்2 பெ. நாதசுரத்தின் அடிப்பூண். அடி வட்டம் சூரியன் மேற்சுற்று அட்டநாகம் (பரத. 4. 6 2000).

அடிவண்டல் பெ. எண்ணெய் முதலியவற்றின் அடி யில் தங்கிநிற்கும கசடு. (சாம்ப. அக.)

அடிவயிற்றுக்கருப்பம் பெ. பெண்களின் கீழ்வயிற்றில் வளர்ந்து பெரிதாகத் தோன்றும் சூல். (முன்.)

அடிவயிறு பெ. கீழ்வயிறு. அடிவயிற்றில் நெருப் பைக் கட்டியிருப்பது போல (பழமொழி). அன்னை யிட்ட தீ அடிவயிற்றிலே (பட்டினத்துப். பொது அன்னை

7).

அடிவரலாறு பெ. 1.காரணம். (செ. ப. அக.) 2. பழைய வரலாறு. (முன்) 3. கொடிவழி, வமிசாவளி. (வின்.) அடிவரவு பெ. பதிகப் பாட்டுக்களின் முதற்குறிப்பை வரிசையாகத் தொகுக்கை. அடிவரவு-பல் அடிவாழ்... வண்ணம் (நாலாயிர. திவ்ய. பதிக முடிவு).

அடிவருடி Qu. 1. கால் பிடிப்பவன். (பே.வ.) 2. தான் எண்ணியது எய்தப் பிறரை எப்போதும் புகழ் பவன். அந்த ஆள் சரியான அடிவருடி (பே.வ.) அடிவருடு-தல் 5 al. கால்பிடித்தல். தெண்ணீர்ப்

பொன்னி திரைக்கையால் அடிவருடப்பள்ளி கொள் ளும் (பெருமாள் தி. 1,1). அடிவருடிப் பின் தூங்கி முன் எழூஉம் பேதையே (தனிப்பா. வள்ளுவ.17). அடிவரை பெ. மலையடிவாரம், தாழ்வரை. அடிவரை யிலே சிங்கம் பாய்ந்தாற்போல் (கலித். 86, 32, நச்.). செய்யுளின் அடிவரம்பு. அடி வரையறையின்மையும் அளவியல் என்பதும் (தொல். பொ. 476 பேரா.).

அடிவரையறை1 பெ.

அடிவரையறை பெ. பாட்டின் முதற்குறிப்பு வரிசை.

மனனமான பாடல்களின் அடிவரையைத் தனியே குறித்து வைத்துக் கொள்வதும் உண்டு (மீனா. சரித். 1 ப. 10).

அடிவழி பெ. காற்சுவடு பட்ட நெறி. அவர்கள் போன அடிவழியே போம் (பெரியதி. 1, 1, 1).

அடிவாரம் பெ. மலையின் அடியையொட்டிய பகுதி. பிடியும் அடிவாரஞ்சேர் கயிலை (தேவா. 1,68,5). அடிவாரமும் சிகரங்களுமான உறுப்பு (தக்க. 360 ப. உரை). கருமுகிலுக்கு அரிதாம் அடிவாரம் (முத்துக். பிள்3, 7).