பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுக்கம் +

அடுக்கம்' பெ. செறிந்த சோலை. குரங்கமையுடுத்த மரம்பயில் அடுக்கத்து (சிலப். 10, 157)..

அடுக்கல் பெ. 1. மலையடுக்கு. அடுக்கல் மீமிசை. அருப்பம் பேணாது (மலைபடு.19). நடுகல் அடுக் கலும் (பெருங். 1, 46, 272). அடுக்கல் பொரும் ஏறோ (காரை. அந். 100). அடுக்கற் கீழ்க் கிடக்கி னும் (தேவா. 4, 11, 4). நடுகல் அடுக்கலும் நறும் பூஞ்சாரலும் (பெருங்.1,46, 272). அடுக்கலின் அடுத்த தீந்தேன் (கம்பரா. 1, 1, 13). காளத்தி அடுக்கல் சேர அணைந்து (பெரியபு. 29,196). அரக் கன் உரத்தை அடுக்கல் அடுக்க (மதுரைச். உலா 436). 2. வரிசை. பன்மணி யிட்டுச் செய்த ஆர அடுக் கல் பொன்னாகம் இலங்க (கந்தபு. 3, 12, 35). 3. குவியல். மீனத்து அடுக்கல் முழுவதும் நோக்கி (கந்தபு. 2,18,8)

அடுக்கலரி பெ. பல அடுக்கிதழ்களாக மலரும் அலரிப் பூ. அடுக்கலரிப் பூ ஒன்றை அரன்தனக்கு ஏற்றி னோர்கள் (புட்பபலன் 55).

அடுக்கலிடு - தல் 6 வி. நெல் முதலியவற்றை இரண் டாம் முறை குற்றுதல். (வின்.)

அடுக்கவரை பெ. அவரை வகை. (நாட். வ.)

அடுக்களை பெ. மடைப்பள்ளி, சமையலறை. வகை அடுக்களைபோல் (மணிமே. 29, 61). அடுக் களை எச்சிற் படாஅர் (ஆசாரக். 39). மெச்சு மனத்தால் அடுக்களையின் மேவார் (பெரியபு. 36. 61). அடுக்களை கொண்டு அடுமின் (கலிங். 517).

அடுக்களைக்குருக்கள்

பெ. நகரத்தார் இனத்துப் பெண்டிர்க்கு உரிய சமய குரு. (செ.நா.வ.)

அடுக்களைகாணுதல் பெ. சீமந்தச் சடங்கு. (நாஞ்.வ.)

அடுக்களைத்தாலி பெ.

தாலி. (ரா. வட். அக.)

வீடுபுகுந்து வலியக் கட்டும்

அடுக்களைப்புறம் பெ. கோயில் மடைப்பள்ளிச் செல வுக்காக விடப்படும் மானியம். அடுக்களைப் புறக் காரியங்களும் (தெ. இ. க. 24, 203).

அடுக்காழி பெ. கல்லிழைத்த மோதிரம். இரத்தினக் கற்கள் பதிக்கப்பெற்ற மோதிரம் அடுக்காழி என்று சொல்லப்படும் (சிற். செந். ப. 100).

43

அடுக்கு'

அடுக்கானகன்னி' பெ. அழகும் குணமும் நிறைந்த

வள். (வின்.)

அடுக்கானகன்னி2

பெ. பவளப்புற்றுப் பாடாணம்.

(வைத். விரி. அக.ப. 13)

அடுக்கியல் பெ. (யாப்.) வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பாவின் உறுப்புகளுள் ஒன்றான அராகம். அரா

கம் எனினும்

(வீரசோ. 117).

அடுக்கிளநீர் பெ.

அடுக்கிறை பெ.

அடுக்கியல் எனினும்

...

ஒக்கும்

ஒருவகை இளநீர். இளநீர். அடுக்கிள நீர்

ஐயத்தை அண்டாதகற்றும் (பதார்த்த. 67).

வெண்டாமரை. (சாம்ப. அக.)

அடுக்கு-தல் 5 வி. 1. ஒன்றின்மேல் ஒன்றாக வைத் தல். முப்புணர் அடுக்கிய முறைமுதல் கட்டின் (புறநா. 6,5). திங்கள் மூன்றடுக்கிய திருமுக்குடைக் கீழ் (சிலப். 11, 1). அடுக்கிய மூவுலகும் கேட்குமே (நாலடி.100). விண்ணுற அடுக்கிய விறகின் வெவ் வழல் (தேவா. 4, 11, 3). கல் அடித்து அடுக்கி (கம்பரா. 1,3,24). கருந்தலைச் சுவர் அடுக்கியே (கலிங். 99). செழுந்தாட் பவளத்துவர் அடுக்கி (LEGUIT LIGHT, 3, 2). 2. வரிசைப்பட வைத்தல். நிரை யேழ் அடுக்கிய நீள் இலைப்பாலை (பரிபா. 21, 13). உருபு தொடர்ந்து அடுக்கிய வேற்றுமைக் கிளவி (தொல்.சொல். 102 சேனா.). அடுக்கிய கோடி பெறி னும் (குறள். 954). பசும்பொன் அடுக்கி (குலோத். 2. GUIT 80). ஏட்டை வரிசையாக அடுக்கி (பாரதி. தோத்திரம். 62, 5). 3. தொடர்தல். அடுக்கிய சுற்றத்தால் சுற்றப்படும் (குறள். 525).

அடுக்கு2 பெ. 1. ஒன்றின் மேல் ஒன்றாக இருக்கை. அண்டகோடிகளெலாம் கருப்பவறை போலவும் அடுக்கடுக்கா அமைத்து (தாயுமா. 12, 7). 2. வரிசை. அடுக்குமேல் அமருலகம் ஆள்வ தற்கு (தேவா. 7, 34,2). நாலு பாக்கும் ஓரடுக்கு இலை யுமாக (தெ.இ.க. 24,3). ஏழடுக்கு மெத்தைக் காரி (மலைய. ப. 80). கொலுப்பொம்மை அடுக்கு நன்றாயுள்ளது (நாட். வ.). 3. (இலக்.) ஒருசொல் அடுக்கிவருகை, அடுக்குத்தொடர். தழுவுதொடர் அடுக்கு என ஈரேழே (நன். 152). திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் என்னும் அடுக்கு (சிலப். 1, 1, 1 அரும்.). ஒவ்வொன்று இஃது அடுக்கன்று (நன். 199 சங்கர நமச்.). 4. நெய்வதற்காகச் சேர்க்கப்பட்ட நூல் இழை அடுக்கு.

...

(afsir.)