பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுக்குவாகை

அடுக்குவாகை பெ. பெருவாகை மரம். (சென். இரா. தாவரப். வரிசை )

அடுக்குவாழை பெ. பனை வாழை. (சாம்ப. அக.)

அடுக்குவிருசு பெ. பொரி வாண வகை. (செ. ப. அக.

அனு.)

அடுக்குள் பெ. 1. அறைக்குள் அறை. (செ. ப. அக.) 2. சமையலறை. (முன்.)

அடுக்கூமத்தை பெ. நாட்டு ஊமத்தை. (சாம்ப. அக.) அடுகலன் பெ. சமையற் பாத்திரம். அடுகலன் பிற வும் எரிபொனால் இழைத்து (திருவிளை. பு. நகரச்சி.

64).

அடுகளம் பெ. போர்க்களம். அடுகளம் வேட்ட அடு போர்ச்செழிய (புறநா. 26, 11). அடுகளம் பாய்ந்த தொடி சிதை மருப்பின் பிடி (அகநா. 99, 12). அடு களத்தின் முரசு அதிர்ந்தன்ன புணரி (நற்.395, 5-6). அடுகளத்துள் வாளமர் வேண்டி (இயற். முதல் திருவந். 81). அடுகளத்து அப்பு மாரியால் உக் கவர் (கம்பரா. 6,26,58). அடுகளத்து வேழங்களா யிரமும் (விக்கிர.உலா 39).

அடுகிடைபடுகிடை 1 பெ. 1. நினைத்தது பெறும் வரையில் ஒருவன் வீட்டின்முன் படுத்துக் கிடக்கை. (செ.ப.அக.அனு.) 2. நோய்வாய்ப்பட்டுப் பாயும் படுக்கை யுமாய்க் கிடக்கை. அவன் ஒரு மாதமாக அடுகிடை படுகிடையாய்க் கிடக்கிறான் (நாட். வ.).

அடுகிடைபடுகிடை? பெ. ஒட்டுமொத்தம். கோயில் விழாவுக்கு அடுகிடைபடுகிடையாகப் போயிருக்கி றார்கள் (தஞ். வ.).

உள்ள

அடுகுவளம் பெ. 1. ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிய உணவு வகைகள் போனகப் பெட்டி. அடுகு வளத்தைத் தடுப்பாரைப் போலே (திருவாய். 6,1, 2 ஈடு). 2. உணவு. அடுகுவளம் போசனமும் (முன். 10, 4, 3 ஈடு)

9

அடுகுழிசி பெ. சோறு ஆக்குகின்ற பனை. ஆறுசெல் வம்பலர் காய்பசி தீரச் சோறடுகுழிசி ... பெரும்

LIT GOT. 365-366),

அடுகைமனை பெ. மடைப்பள்ளி. தென்திசை அந் தத்து அடுகைமனை (சிவதரு.2, 70).

பெ. சொ.அ.1-10

14

5

அடுத்தி

அடுசில் (அடிசில்) பெ. உணவு. அடுசில் நெய்யா கிய ஆவுதி (பதிற்றுப். 21, 13 ப. உரை).

அடுசிலைக்காரம்

அக, ப. 11)

பெ. செந்நாயுருவி.

(வைத். விரி.

அடுத்த பெ. அ. 1. நெருங்கியுள்ள, பக்கமுள்ள. குறிஞ் சியும் முல்லையும் அடுத்த நிலமே (இறை. அக.1 உரை). அடுத்த சில்லிடங்கள் (பெரியபு. 19, 15). நம் வீட்டுக்கு அடுத்த வீடு பெரியது (நாட். வ.) 2. வரப்போகிற அடுத்த தைமாதம் (பே.வ.). 3. (எண்முறையில்) முந்தியதைத் தொடர்ந்து வருகின்ற. பெண்டிர் நால்வரும் பென்சன் பெற்றனர்,... அடுத்த அக்காள் அழு பிள்ளைக் காரி (நாஞ். மரு.

LDIT ST. 1, 45-55).

அடுத்தடுத்து வி.அ. 1. மேன்மேலும். அடுத்தடுத்து ஆடுவார்ப் புல்லக் குழைந்து (பரிபா. 16, 43). அடுத் தடுத்து வன்காய் பலபல காய்ப்பினும் (நாலடி. 203). அடுத்தடுத்து அவர் முன் மயங்கிய மயக்கம் (சிலப். 8,107). அடுத்தடுத்துச் சீறும் சீறும் செருவில் (குலோத். உலா 41). 2. திரும்பத் திரும்ப. அடுத் தடுத்து அத்தத்தா என்பான் (கலித். 81, 19). அடுத் தடுத்து நாம் அதனைத் தப்பினால் நம்மையது தப்பாதோ (தனிப்பா. ஒப்பிலா. 27). 3. ஒன்றன் பின் ஒன்றாக. அடுத்தடுத்து அவளுக்கு ஐந்து

குழந்தைகள் (நாட்.வ.).

அடுத்தணித்தாக வி. அ. மிக்க அண்மையில். (திருவாய். 9, 8, 7 ஈடு)

அடுத்தபடி வி. அ. (ஒன்று முடிந்து) அதன்பின், இனி. அடுத்தபடி நாம் என்ன செய்வது (நாட்.வ.).

அடுத்தமுறை பெ. மறுதடவை. (செ. ப. அக.)

அடுத்தமுறை' பெ. அடுத்த நெருங்கின உறவு முறை. (செ.ப.அக.) அவ்வவர்க்கு அடுத்த முறை கடவார் நெல்லுப் பெறவும் (தெ. இ. க. 65, 4).

அடுத்தவரைக்கெடு - த்தல் 11 வி. புகலடைந்தவர்க்கும் உடன் இருப்பவர்க்கும் தீங்கு செய்தல். அடுத்தவ ரைக் கெடுக்கலாமா (பழமொழி).

அடுத்தாரைக்கொல்லி பெ. நெருப்பு. (சித். பரி. அக.

4. 155 )

அடுத்தாரைமயக்கி பெ.கஞ்சா. (முன்.)

அடுத்தாள் பெ. உதவியாள். (செ.ப.அக.)

அடுத்தி பெ. முறைகேடான வட்டி. (செ. ப. அக. அனு.)