பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டகோசம்2

அண்டகோசம்' பெ. அண்டசாத்திரம் என்னும் நூல்.

(சங். அக.)

அண்டகோசம்' பெ.

அண்டகோசம் +

பீசப்பை. (முன்.)

பெ. பழம். (முன்.)

அண்டகோளகை பெ. அண்டப்பெருந்தொகுதி. அண்ட கோளகை இவன் கவிகை (குலோத். பிள். 76). அதற்கு மீதே திகழ் அண்டகோளகையுங் கோடி யாமே (கந்தபு. 2, 11, 65). எம்பெரும ஓர் கோடி ஏசில் அண்டகோளகையே (நல். பாரத. அண்டகோச.

69).

அண்டகோளம் பெ. 1. பேருலகு. அண்டகோளமும் உலக உருண்டை. அண்ட

ஒத்து (தக்க.

257). 2.

கோளத்து ஆரணுவாகி (பெருந். 1825).

அண்டங்காக்காய் பெ. அண்டங்காக்கை. என்ன காக் காய் அண்டங்காக்காய் (மலைய. U. 266).

அண்டங்காக்கை பெ. உருவில் ஓரளவு பெரிதாகவும் (கழுத்தில் வெண்ணிறமில்லாமல்) முழுக்கருமையாக வும் உள்ள காக்கை. காலோலம் அண்டங்காக்கை யாகும் (பிங்.2368).

அண்டங்காகம் பெ. அண்டங்காக்கை. (நாட், வ.)

அண்டச்சுவர் பெ.

அண்டகோளத்தின் மேல் ஓடு.

பித்திகை அண்டச்சுவரின் பெயரே (பிங்.10). புறம் மூடும் அண்டச்சுவர்த்தலம் (மீனா. பிள். 6,3).

அண்டசம் முதல்ஆம் எண் தரு நால்வகை (தாயுமா. 55,9).

அண்டசம் பெ. முட்டையிற் பிறப்பன.

அண்டசராசரம்

பெ. அனைத்துலகங்களிலுமுள்ள இயங் கும் பொருளும் இயங்காப் பொருளும். அண்டசரா சர உலகம் அடங்கலும் அன்பொடு பூத்தவளே (திருவருணை உண்ணா. பிள். தாலப்.6).

அண்டசன் பெ. ஆதிசேடன். அண்டசன் மணிச்சய னம் ஒப்பது அகலத்தின் (கம்பரா. 6, 35, 12).

அண்டசாத்திரம் பெ. அண்டகோசம்'. (சங். அக.)

அண்டசை பெ. கத்தூரி. (முன்)

அண்டத்தைலம் பெ. கோழி முட்டைத் தைலம். (சங்.

அக.)

அண்டதாபிதரோகம் பெ. விதைவீக்கம். (பைச.ப.171)

15

6

அண்டபற்பம்

அண்டநாடு1 பெ. இ.க. 11, 62)

பாண்டி நாட்டின் ஒரு பகுதி. (தெ.

2

அண்டநாடு பெ. கொங்கு நாடுகள் இருபத்து நான்க னுள் ஒன்று. வாழவந்தியும் அண்டநாடு வெங்கால நாடு (பெருந்.2106).

அண்டநாயகி பெ. (உலகத் தலைவியாம்) பார்வதி. அண்டநாயகி தன் முகிழ்முலை சுரந்தபால் (திருப்பு.

241).

அண்டப்பரப்பு பெ. உலகப்பரப்பு. திக்கொடு அண்டப் பரப்பெலாம் (தாயுமா. 5,3).

அண்டப்பித்தி (அண்டப்பித்திகை, அண்டபித்தி) பெ. அண்டகோளத்தின் மேலோடு. மகாப்பிருதிவியை அண்டப்பித்தியினின்றும் ஒட்டு விடுவித்து (திருவாய்.

4, 2, 6 ஈடு).

அண்டப்பித்திகை (அண்டப்பித்தி, அண்டபித்தி) பெ. அண்டகோளத்தின் மேலோடு. அண்டப்பித்திகை கனம் ஓர் கோடி (கந்தபு. 2,11, 24).

அண்டப்புரட்டன் பெ. பெருமோசக்காரன். அண்டப் புரட்டனை அறிய மாட்டீர் (நாஞ். மரு. மான். 9, 328). அவனிடமா பணத்தைக் கொடுத்தாய், அண்டப்புரட்டன் அல்லவா அவன்? (நாட். வ.).

அண்டப்புளுகன் பெ.

பெரும்பொய்யன்.

பணம்

கொடுப்பான் என்று நம்பாதே, அவன் அண்டப் புளுகன் (நாட். வ.).

அண்டப்பொகுட்டு பெ. அண்டகோளகை. பூதலப்பரப் பின் அண்டப்பொகுட்டின் உட்புறத்துள் ... தூத ரைக் கொன்றுள்ளார்கள் யாவர் (கம்பரா. 5,12,

113).

அண்டபகிரண்டம் பெ. பூவுலகும் அதன் புறத்தே யுள்ள கோளமும். அண்டபகிரண்டமும் அகண்ட மும் பெறுதி (மீனா. பிள். 7, 4). அண்டபகிரண்ட மும் மாயாவிகாரமே (தாயுமா. 2, 4).

அண்டபதி பெ. அரசன். ஆதரவொடாயிரத்தெட்டு அண்டபதி ஆனால் (பெருந்.பு.23,3).

அண்டபவுத்திரம் பெ. பீச பகந்தரம் என்னும் நோய்.

(செ.ப.அக.)

அண்டபற்பம் பெ. கோழிமுட்டைக் கருவைக்கொண்டு செய்யும் மருந்து. (செ.ப.அக. அனு.)