பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டபித்தி

அண்டபித்தி (அண்டப்பித்தி,

அண்டப்பித்திகை)

பெ. 1. அண்டகோளத்தின் மேலோடு. ஒரு திரு வடிகளே அண்டபித்திக்கு அவ்வருகே

போய்

2. அண்டத்தின் (திருமங்கை. திருநெடுந். 5 வியாக்.). அடுப்பமும் அடுக்கும். அண்டபித்தி - அண்டத்தின் அடுப்பமும் (கனமும்) அடுக்கும் பிளந்துபோய் (தக்க. 631).

அண்டபேரண்டப்பட்சி பெ. கண்டபேரண்டம் என்னும் பெரும் பறவை. (செ. ப. அக. அனு.)

அண்டம்1 பெ. 1. பிரபஞ்சம். அண்டங்கடந்து அப் அண்டமுத புறத்து இருந்தீர் (தேவா. 7, 2, 2).

4, (தேவா.

14, 2).

லாயினான் (திருவாச. 8,9). அண்டங்கள் படைத் தளிப்போனே (சர்வ, கீர்த், 57,3). 2. உலகம். வெள்ள மண்டி நெடு அண்டமூட அண்டர் அண்டமாய் நின்ற ஆதியே (திருவாச. 37, 8). அண்டங்காக்கும் உரிமையினில் (கலிங்.2). 3. வானம். அறிய வொண்ணாததோர் அண்டம் பதிந்ததே (திருமந். 1572). அண்டம் உற நிமிர்ந்து கோரை. பதிகம் 1, 4). 4. தேவலோகம். பின்ன அளிப்பன வர்க்கு அண்டம் அஞ்செழுத்துமே

சி, 22, 8), பெருமாளே (இருப்பு- 8), -

ஈ அண்டம் தொழும்.

பெ 1. முட்டை. அண்டமிரண்டு. முந் துயிர்த்திடு அந்நாள் வந்து (கம்பரா. 4, 15, 36), திண்ணிய கமடம் பரப்பு சிறைபுள்ளும் அண்டம் சேரும் (சிவதரு. 8, 3), 2, 2. பீசம், அண்டத்தில் ஊறு செய்வனவால் (திருவிளை 4. 60, 11), 3, விதை. இல்லமுறும் அண்டங்கள் நூறு பலம் (தைலவ. தைல. 33/செ.ப. அக.), 4. திரட்சி. அண்ட கபாலம் சென்னி (தேவா.7,22,2).5. சுக்கிலம்.

(சங். அக.)

அண்டம்3 பெ.

1. மூளை. (வைத். விரி. அக. ப. 16) 2. தலையோடு. (யாழ். அக.அனு.)

அண்டம்+ பெ. புழுகுசட்டம். (சம்.அக. /செ. ப. அக. அனு.)

அண்டம்5 பெ. மடம். (அக. நி.)

பெ. அண்டத்தின் உச்சி.

அண்டமுகடு

அண்டமுகடு கொண்ட

5,4, 202).

கனவு

பவனம்

(தக்க.

240).

அண்டமுகட்டுற நின்று சிரித்தனன் (பாரதம்.

அண்டமுறு-தல் 6வி. வானளாவுதல். அண்டமுற நிமிர்ந்தாடும் எங்கள் அப்பன் (காரை. பதிகம் 1, 4).

1

57

அண்டர்நிலை

பொறி பிதிரப் பொன்முடிபோய் அண்டமுற

(பாரத வெண். 211).

அண்டமூலம் பெ.

அண்டகோளத்தின்

மேற்பாகம்.

அண்ட மூலத்து

ஓர்

ஆசனத்து இருத்தினை

(கம்பரா. 6, 37, 119).

அண்டயம் பெ. அண்டகோளம். விண்டலத்தின் மீது போய் அண்டயத் தடுத்ததே (சூளா. 1376).

அண்டயோனி' பெ

சூரியன். அண்டயோனி சூரியன் பெயரே (பிங்.210).

...

அண்டயோனி2 பெ. முட்டையில் தோன்றுவது. (சங்.

அக.)

அண்டர்1 பெ. இடையர். அண்டர்

மகளிர்

தண்

தழை உடீஇயர் (அகநா. 59, 5). அண்டர் மிண் டிப் புகுந்து நெய்யாடினார் (பெரியாழ். தி. 1, 1, 5). கற்றாவைக் கூவும் அண்டர் (முக்கூடற். 45).

அண்டர்' பெ. பகைவர். கால்வல் புரவி அண்ட ரோட்டி (பதிற்றுப். 88,9).

அண்டர்' பெ. தேவர். அண்டர் தொழும் அதிகை வீரட்டானம் (தேவா.6,70, 9). அண்டர் நாடு ஆள்வோம் நாம் (திருவாச. 46, 2). அண்டர் மனம் மகிழ் மீற (திருப்பு. 25). அண்டர் தச்சன் அனேக தவஞ்செய்து (திருவிளை. பு.புராணவர்.2),

அண்டர்கோன் பெ 1. திருமால், அண்டர்கோன் அணியரங்கன் (அமலனாதி. 10). 2. (தேவர் அரச னான) இந்திரன். அண்டர்கோன் வீழ்தலும்

(கந்தபு. 6,20,29).

அண்டர்தோகைமார்

பெ.

தேவமாதர். அண்டர் தோகைமார் பாடுவார் (செ.பாகவத. 1, 4, 24).

அண்டர்நாடு பெ. தேவருலகம். அண்டர்நாடு ஆள் வோம் நாம் (திருவாச. 46, 2).

(முக்கூடற்

19). 2.

அண்டர்நாயகன் பெ. 1. இராமன், திருமால். அண்டர் நாயகன் அருள் தூதன் (கம்பரா. 5, 4, 22), அண்டர் நாயகர் செண்டலங்காரர் (தேவர் தலைவனாகிய) இந்திரன். அண்டர்நாய கன் ஆயிரங்கண்ணினும் அடங்காப் புண்டரீகத் தின் முகை (கம்பரா. 6, 36, 107).

அண்டர்நிலை பெ.

பொன்னாங்காணி. (சாம்ப. அக.)