பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டர்மகள்

அண்டர்மகள் பெ. (இந்திரன் (இந்திரன் மகளாகிய) தெய்வ யானை. அண்டர்மகள் மணவாள (திருப்பு-25).

அண்டர்மாதர் பெ. இடைச்சியர். பண்டு வெண்ணெய் பாலொடும் அண்டர்மாதரார் நலம் உண்ட (செ. பாகவத. 1, 4, 21).

அண்டரசம் பெ.பாதரசம் (வைத், விரி. அக.ப.16)

அண்டரண்டப்பட்சி பெ. 1. கண்டபேரண்டம் என்னும் பெரும் பறவை. (நாட். வ.) 2. கழுகு. (புதுவை வ.)

அண்டரண்டம் பெ. தேவர் வாழும் உலகம்,சுவர்க்கம். அண்டரண்டத்துச் சுடர் மன்னு வேணு (திருமந். 607). அண்டரண்டமாய் நின்ற ஆதியே (திருவாச. 37,8). அண்டரண்ட மளவிடு சூளிகை (கந்தபு. 3,

15, 57).

அண்டரண்டர் பெ. தேவதேவர். அவன் அண்ட ரண்டர் அரசே (தேவா. 4, 14, 1).

அண்டரோகம் பெ. பீசங்கள் தடித்து வீங்குவதாகிய நோய். (அபி. சிந்.)

அண்டலர் பெ

பகைவர்.

அண்டலர்

எனினுங்

கண்டால் அன்புவைத்து (யசோதர. 29). அண்டலர் வன்மையால் அயுத யோசனை உண்டது கொழுங் கனல் (கந்தபு. 4, 6, 51).

அண்டவர் பெ. மேலோர். (ஆசி.நி. 12)

அண்டவாணன் பெ.

1.தேவலோகத்தில் வாழ்பவன். ஆதியான் அண்டவாணர்க்கு அருள் நல்கும் நீதி யான் (தேவா. 5, 33, 4), அண்டவாணர் உகப்பதே செய்தாய் (பெரியதி. 10, 2, 3).2. கடவுள். அண்ட வாணன் அடியுள்குதலால் அருள்மாலைத் தமிழாக (தேவா. 1, 3, 11). சாமகண்டா அண்டவாணா (திருமாளி. திருவிசை. 1,3), கருங்கடல் மேல் துயில் கொள்ளும் அண்டவாணனுக்கு ஆழி...அருளியும் (நக்கீர. கோப. 2-3).

அண்டவாதம் பெ. 1. விரைவீக்கம். மூலவியாதியொடு அண்டவாதம் (திருப்பு. 286). 2. குடலிறக்கம். (செ. ப. அக.)

அண்டவாயு பெ. விரைவீக்கவளி. உதரவலி அண்ட வாயு... கண்ட பேரை அணுகாவே (பெருந். 2150). அண்டவிருத்தி பெ. பீசநோய் வகை. (சாம்ப. அக.)

1

58

அண்டிரன்1

அண்டவெளி பெ. வானவெளி. அண்டவெளி உரு வான பூர்த்தி (தாயுமா. 24, 33).

அண்டவொளி பெ. சூரியன். அண்டவொளியும் அகண்டவொளியுடன் (திருமந். 2806).

அண்டன் பெ. 1. உலகவடிவாய் இருப்பவன். அண் டன்காண், அண்டத்துக்கு அப்பாலான் காண் (தேவா. 6, 24, 2). அண்டனையே ஏத்தீர்களே (பெரியதி. 11, 6, 1). 2.கடவுள். அண்டனாஞ் சேடனாமங்கு (சி. போ. 9, 3, 1).

அண்டா பெ. பித்தளை போன்ற உலோகத்தாலான வாயகன்றதாய்த் தூக்குவதற்கு வளையம் வைத்துள்ள உருளைவடிவான பெரும் பாத்திரம். அண்டாவிலே சோறாக்கி (மலைய. ப. 25).

அண்டார் பெ. (நெருங்காதவர்) பகைவர். அண்டார் தமக்கோர் அரியே (கந்தபு. 4, 12, 470).

அண்டாவர்த்தம் பெ. குதிரையின் கணுக்காலில் இருக் கும் சுழி. (அசுவசா. 148/செ. ப. அக.)

அண்டி1

பெ.

1.

மூக்கின் உள்பகுதி.

உடைந்து

இரத்தம் ஊற்றுகிறது

2.

ஆசனவாயில் உள்சதை. (ரா. வட். அக.)

அண்டி2 பெ. முந்திரி. (நாஞ். வ.)

அண்டி

(வட். வ.).

அண்டிக்கொட்டை பெ. முந்திரிக்கொட்டை. (முன்.)

பெ. செந்நாய். அண்டிகஞ் செந்நாய்

அண்டிகம் பெ.

(பிங். 2513).

அண்டிகா பெ. மண்பானை. (சங். அக.)

அண்டிசவலை பெ. சின்னஞ்சிறு குழந்தை. (ரா. வட்.

அக.)

அண்டி தள்ளுகை

(அண்டுதள்ளுகை) பெ. மலவா

யின் உட்பகுதி வெளியே தள்ளுகை. (திருநெல்வ.)

அண்டிப்பருவம் பெ. இறகு முளைக்காத பருவம். (ரா.

வட். அக.)

அண்டிமாங்கொட்டை பெ. முந்திரிக்கொட்டை. (செ.

ப. அக.)

அண்டிரன்1 பெ.

சங்ககால வள்ளல்களுள் ஒருவன். அண்டிரன் புரவெதிர்ந்து தொகுத்த யானை போல

(நற். 237, 7-8).