பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டையோரம்

அண்டையோரம் பெ. வயல் கொல்லை முதலியவற்றின்

அருகு. மண்வெட்டியால்

அண்டையோரத்தைக்

கொத்திவிடு (தஞ். வ.).

அண்டைவெட்டு - தல் 5வி. நடவுக்கு முன் வரப்பு ஓரத்தை வெட்டிக் கழித்து ஒழுங்கு செய்தல். சரியாக அண்டை வெட்டாததால் ஓரங்களில் தண்ணீர் பாயவில்லை (முன்.).

அண்ணக்குஞ்சம் பெ.

பெ. உள்நாக்கு. (சாம்ப. அக.)

அண்ணகள் (அண்ணகன்) பெ. (அண்ணகன்) பெ. விரை எடுக்கப்பட்ட வன். அலி அண்ணகள்

விஞ். 160).

அண்ணகன்

வன். (வின்.)

ஊமை

ஐவரும் (மனு

(அண்ணகள் ) பெ. விரையெடுக்கப்பட்ட

அண்ணணி வி.அ.

மிகவும் அருகில். இன்னினிக் கொண்டான், அண்ணணிக் கொண்டான் (தொல். எழுத். 247 இளம்.).

அண்ணணித்து பெ. மிகவும் அருகிலுள்ளது. அண்ண ணித்து ஊராயின் (கலித். 108,36).

அண்ணந்தாள் (அண்ணாந்தாள்) பெ. பழங்காலத் தண்டனை வகை. (வின்.)

அண்ணப்பரடு பெ. மேல்வாயின் பரடு. (சாம்ப. அக.) அண்ணபிள்ளை பெ. அண்ணன் முறையினரையும் பெரி யவரையும் சுட்டி வழங்கும் மரியாதைச் சொல். (தஞ்.வ.) அண்ணம் பெ. 1. மேல்வாய். அண்ணம் நண்ணிய பல் (தொல். எழுத். 93 நச்.).2. உள்நாக்கு. அண்ணம் உண்ணாக்கே (பிங். 1046). 3. கீழ்வாய். (யாழ். அக.)

அண்ணமார் (அண்ணன்மார் ) பெ. (கொங்கு நாட்டு அண்ணன் தம்பியரான இரு) சிறுதெய்வங்கள். அண்ணமார் இருவருக்கும் தீபாராதனை கொடுத்து (அண்ணன். கதை ப. 387 ).

...

...

அண்ணமார்கல் பெ. 1. கட்டடத்தில் தட்டைவளைவின் குத்துக்கல்.(சென்னை வ.) 2. சிறு தெய்வ வழிபாட்டுக் காக நடும் கல். (கொங்கு.வ.)

அண்ணல் பெ.

1. பெருமை. நிழற்படுக்கும் அண்ணல் நெடுவரை (அகநா. 7, 7-8). அண்ணல் மூதூர்க்கு அணியெனத் தோன்ற (பெருங். 1, 36, 20). அண்ணல் யானை அணிதேர்ப் புரவி (வெற்றிவேற் கை 17). 2. தலைமை. இருதிரி மருப்பின் அண்ணல்

60

அண்ணன்1

,

யானை அடு

இரலை (அகநா. 34, 4). அண்ணல் களத்தொழிய (புறநா. 93, 13). ஆரமார்பினை அண்ணலை (கலித். 52, 15). 3. அரசன். அடுபோர் அண்ணல் (மதுரைக். 207). அண்ணல் தான் உரைப் பக் கேட்டே (சீவக். 202). ஆதிமனுகுலமிவ் அண் ணலான் மேம்படுகை (விக்கிர. உலா 221). 4. பெருமை பொருந்தியவன், தலைவன். ஆடுநடை அண் ணல் (பதிற்றுப். 44,7). ஆணெழில் அண்ண லோடு (கலித்.9, 10). அண்ணல் ஆண்டு தன் அடி யரில் கூட்டிய அதிசயம் (திருவாச. 26,6). அல்ல குறிப்பாட்டினை அண்ணற்கு உணர்த்தல் (இறை. அக. 17 உரை). அறத்திறன் அழியச் செய்யான் ...அண்ணல் (கம்பரா. 4, 7, 126). ஆயிரங் கரத்தவ் வண்ணலும அல்லவே (நாஞ். மரு. மான். 4, 21). 5. முல்லைநிலத்தலைவன். பாற்று மருப்பொலி தாரண்ணலார் முன்னணிந்துவிட்டார் (அம்பி. கோ. 258). 6. தந்தை. அண்ணலே பெற்றோன் (அரும்.நி. 196). 7. அண்ணன். அண்ணல் அண் ணன் (நாநார்த்த. 312). 8. அருகக்கடவுள். இந்திரன் திருநகர்...வந்திருந்த வண்ணமே அண்ணல் கோ யில் வண்ணமே (சீவசு. 155)9. சிவன். அடையார் பெருவழி அண்ணல் நின்றானே (திருமந்.413) சடையுடைப் பெருமை யண்ணல் (தேவா. 4, 24, 6). அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்ட அரசு அமர்ந் திருந்தார் (பெரியபு. 21, 427). கண்ணுதல் அண்ணல் ஞானா. 7). 10. முருகன். அமரர் மேவரத்தோன்றிய அண்ணல் (சீவக. 994). 11. திருமால். வண்புரு டோத்தமத்துள் அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன் (பெரியதி. 4, 2, 10). 12. நான்முகன். தாயருந் தந்தையுந் தாரணிமேல் உந்திதந்த அண் ணல் (அம்பி. கோ.24). 13. இந்திரன். ஐந்தரு நாட் டண்ணல் அரும்பழிக்கா வன்று (மதுரைச். உலா18).

800

அண்ணல்போடு-தல் 6 வி. கயிற்றை முளை போன்ற வற்றில் கட்டுதல். (தஞ்.வ.)

அண்ணவாதம் பெ. அண்ணத்தை அசையாமல் செய் யும் வாதநோய். (மரு. க.சொ.ப.190)

அண்ணவெலும்பு பெ. மேல்வாய் எலும்பு. (மருத்.க.

சொ.ப.190)

அண்ணவோதை பெ. நாவாற் சொடுக்கும் ஒலி. (செ. ப. அக. அனு.)

அண்ணன்1 Qu. 1. உடன் பிறந்தாருள் மூத்தவன், தமையன். எண் இல் ஆற்றல் அண்ணாவோ! அண் ணாவோ! (கம்பரா. 6, 36, 218). முன்னவன்