பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணவு-தல்

அணவு1-தல் 5வி. 1. அணுகுதல். அணவு அரியான கண்டாய் (தேவா. 6, 73, 7). 2. சேர்தல், அடைதல்.

சீர் வங்கம் வந்து அணவும் வந்து அணவும் தில்லை (திருவாலி.

திருவிசை. 4, 8). 3. தங்குதல். பந்து அணவும் மெல் விரலாள் (தேவா. 6, 46, 10). 4. நெருங்கியிருத்தல். கொந்து அணவும் பொழில் சோலை (திருவாச. 18, 10). 5. பொருந்துதல், தொடுதல். எல்லை நடாவிய அத்தேர் அணவும் திருநாரையூர் (நம்பியாண். திருநாரை. 10). தினகரனை அணவு கொடிகள்

(கம்பரா. 6, 30, 161). 6. ஒட்டுதல். அணவல் ஒட்டுதல் (பிங். 1834). 7. அணைதல். புது மாதவி மீது அணவி (திருவாய். 5, 9, 2). 8. மேல் நோக்கிச் செல்லு தல். அந்தர அகடு தொட்டு அணவு நீள் புகழ்

(சீவக.1239).

அணவு' பெ. என்றாகும்

அணன்

நடு. நனந்தலை

அணவு

...

நடு

(பிங். 492).

பெ. சிறப்புப் பொருந்தியவன். ஞானப்பெரு மானைச் சீர்அணனை ஏத்தும் திறம் (இயற். நான் முகன் திருவந். 67). முகவு

அணா 1

பெ. வேடிக்கை. அணாவாய்த்துக் காலங் கழிக்கிறார் (திருவாய். 1,5,3ஈடு) .

அணா' பெ. பழைய ரூபாய் நாணயத்தில் பதினாறில் ஒரு பங்கு. அஞ்சணாக் கூலி கிடைக்கும் - தங்கம் தையலாளே (மலைய. ப. 102).

அணா' பெ. முகத்தலளவையில் அல்லது நீட்டலளவை யில் பதினாறில் ஒரு பங்கு. (செ. ப. அக.)

அணா பெ. (ஒரு வாழை மரம் வளர்ப்பதற்குப் போதுமான) ஒன்பது சதுர அடியுள்ள இடம்

ப. அக.)

(செ.

அணா' பெ. அண்ணன். (அண்ணா அணா) ஆரணா உன்னுயிரை அஞ்சாதே கொண்டு அகன் றார் (கம்பரா. 6, 36, 222).

அணாசுரோத்திரியம்

(செ. ப. அக.)

பே. மானிய வகைகளுள் ஒன்று.

அணாப்பி பெ. ஏமாற்றுபவள். அணாப்பிகள் படி றிகள் (திருப்பு. 1346).

அணாப்பு1-தல் 5 வி. ஏமாற்றுதல். அணாப்பி ஏத்து அரம்பைமார்க்கு (திருப்பு. 71).

1

65

அணி+

அணாப்பு2 பெ. ஏமாற்றுகை. (வட்.வ.)

அணார் பெ. கழுத்து. அணார் சொறிய ... வேங்கை கள் நின்றுறங்கும் (பெரியாழ். தி. 3, 5, 8).

அணாவு-தல் 5வி. எட்டுதல். அருக்கன் மண்டலத் தணாவும் அந்தண் ஆரூர் (தேவா. 2,101, 1).

அணி-தல் 4 வி. 1. அழகாதல். பாஅயன்ன பறை யணிந்து (மதுரைக். 278). கறை மிடறணியலும் அணிந்தன்று (புறநா. 1,5). ஐயிரு திசையினும் அணிந்து செல்வன (கந்தபு. 5, 2, 65).2. அலங் கரித்தல். இன்று நன்று என்னை அணி (கலித். 91, 5). ஆங்கே அணிந்து நீர் அர்ச்சியும் அன் பொடே (திருமந். 1004). கோநகர் அணிக எனக் கொட்டும் பேரி (கம்பரா. 2, 2, 33). 3. (ஆடை, அணி) பூணுதல், கட்டுதல். இன்புறு பேடை அணிய (புறநா. 67,13). துகில் அணி ... மகளிர் (சிறுபாண். fl 262). தலைக்குத் தலைமாலை அணிந்தது என்னே (தேவா. 7, 4, 1). கங்குல் புகுந்தார்கள் காப்பணி வான் (இயற்.நான்முகன் திருவந். 43). ஆடையாபரணங் கள் அணிந்து (ஏரெழு. 63, 1). 4. பூசுதல். சுந்தர நீறணிந்தும் மெழுகித் தூய பொன் சிந்தி (திருவாச. 9,3). நீறு அணிந்தார் அகத்திருளும் ... புறத்திருளும் மாறவரும் திருப்பள்ளி எழுச்சி (பெரியபு. 21, 68).

அணி2-தல் 4 வி. 1. வருணித்தல். அணியமாட்டாது

அனையதை பொருந்

(பிரபு. லீலை 2,8). 2. துதல். சாறயர்ந்தன்ன காரணி யாணர்த் தூம்பகம் (பதிற்றுப். 81,20).3. பெற்றிருத்தல். வைம்முகம் அணிந்த நுதிவாள் (சீவக. 282). சீர் அணி சிந்தா மணி (திருக்கோ. 400).

அணி 3-தல் 4 வி. 1. சூழ்தல். கார் அணியும் பொழில் (திருமந். 1329). வயல் அணிந்து அழகாய விளங் கொளி குருகாவூர் (தேவா. 7, 29, 19). 2. பரத்தல். சுணங்கணி ஆகம் (கலித். 4, 17). 3. வட்டமிடுதல். பாறு அணியும் உடல் வீழவிட்டு (திருமந். 1822).4. படைவகுத்தல். புனைமலர்த் தாரினானும் போரணி அணிந்து போனான் (கம்பரா. 5, 10, 6). அணிந்து வரும் சமரில் எதிர்ந்து (பாரதம். 5, 4, 5. போல இருத்தல். வெள்ளிலை அணிந்த வேலான்

(சீவக. 1341).

16).

அணி பெ. 1. அழகு. அணி நுதற் குறுமகள் (நற். 147, 1), அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயி