பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணியொட்டிக்கால்

அணியொட்டிக்கால் பெ. தலைப்பக்கம் வேலைப்பாட மைந்த கோயிற் கற்கால். அணியொட்டிக்கால் மண்டபம் (செ. ப. அக.).

அணில்' (அணிலம்) பெ. (முதுகில் மூன்று கோடு உடைய) அணிற்பிள்ளை. மூவரி அணிலொடு (தொல். பொ. 550 இளம்.). அணில் வரிக் கொடுங்காய் (புற நா. 246, 4). சூரற்புறவின் அணில் பிளிற்றும் (ஐந்.எழு.35). வரிப்புற அணில்வால் கருந்தினை (கல்லாடம் 4,23). அணில் அனைய பைங்காய் (சீவக. 1701). மெய்தனில் மணல்கொடே புகும் அணில் (வரத. பாகவத. 1, 146). அணில் பிள்ளை சாடி ஓடி அலைந்து (மலரும்.85,18). அணிலே அணிலே ஓடிவா (மலரும் உள்ளம் 1 ப. 20).

அணில்' பெ. அன்றில். கிளி காடையின் அணில் ஏரளி யாங் குரல் (திருப்பு. 758).

அணில்வரி பெ. அணிலின் முதுகில் காணும் மூன்று கோடு. அணில் வரிக் கொடுங்காய் (புறநா. 246, 4). அணில்வரி ஆகியும் (பெருங். 4,14,33).

அணில்வரிக்கொடுங்காய்

பெ. (அணில் முதுகின் கோடு ஒத்த வரியையுடையதாகிய) வெள்ளரிக்காய். அணில்வரிக்கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட (புறநா.246, 4).

அணில்வரியன்1 பெ. வெள்ளரி வகை. (சங். அக.)

அணில்வரியன் -

பெ.

வரிப்பலாப்பழம். (முன்.) 2

அணில்வரியன் 3

பெ.

முதுகில் வரியுள்ள பசு. (செ.ப.

அக.)

அணில்வரியன் + பெ. ஒருவகைக் கோடுள்ள (இலங். வ.செ. ப. அக.)

பட்டு.

அணில்வாற்றினை பெ. தினை வகை.

அணிலம் (அணில்) பெ. (முதுகில்

(இலங்.வ.)

மூன்றுகோடு

டைய) அணிற்பிள்ளை. தரங்கநீர் அடைக்கலுற்ற சலமிலா அணிலம் (தொண்டரடி. திருமாலை 27).

அணிலன் பெ. அட்டவசுக்களில் ஒருவன். அனலன் அணிலன் அட்டவசுக்கள் பெயரே (பிங்.182)

...

அணிவகு-த்தல் 11 வி. படைகளை வியூகப்படுத்தல். அன்றிலின் உருவதாய் அணிவகுத்தமைந்து நின் றான் (கம்பரா. 6, 21, 12). அணிவகுத்து எழுந்து (சிவஞா. காஞ்சி. நாட்டுப்.2).

169

அணு

அணிவகுப்பு பெ. படை வீரர் போன்றோர் வரிசை ஒழுங்கு பெற நிற்கை. போர்க்களம் புகுந்து அணி வகுப்புச் செய்யாநின்றார் (பாரதவெண். 517 உரை).

அணிவடம்

பெ. கழுத்தில் அணியும்

கோவை. (சங். அக.)

அணிகலக்

அணிவி-த்தல் 11 வி. பூசச் செய்தல். வாளரக்கன் தோள் நெரியக் கண் குருதிச் செஞ்சாந்து அணி வித்து (தேவா. 4, 19, 11).உன்தன் சுண்ண வெண்ணீறு அணிவித்து (திருவாச. 51,4).

அணிவியூகம் பெ. படைவகுப்பு. (சங். அக.)

அணிவிரல் பெ. சிறுவிரலுக்கு அடுத்த மோதிரம் அணியும் விரல். பொருத்தி அணிவிரல் சுட்டிப் பிடித்து (திருமந். 1094). அணிவிரல் முடக்குவது (சிலப். 3,18 அடியார்க்.). அதிரதர் தம்மை யெண்ணில் அணிவிரல் முடக்கல் ஒட்டா க்கல் ஒட்டா (பாரதம். 4, 4, 9).

அணிவில் பெ. பேரேடு. (கணக்கதி. 36)

அணிவிளக்கு - தல் 5 வி. ஒப்பனை செய்தல். தில்லை நகர் மணிவீF அணிவிளக்கும் ... அன பாயன் (பெரியபு. 41,8).

அணிவு பெ. அணிகலன், ஆடை போன்றவை தரித்துக் கொள்ளுகை. புனையிழைகள் அணிவும் (திருவாய். 8, 9, 5). பனிமதியின் அணிவுடைய சடைமுடி யார்க்கு ஆளாகும் பதம் (பெரியபு. 12,8).

அணிவேர் பெ. வெட்டிவேர். அணிவேர் தகரம் பூரம் (தைலவ. தைல. 86/செ.ப. அக.).

அணிற்காலன் பெ. பெ. மாட்டுவகை. பசுக்காலன் அணிற் காலன் (முக்கூடற். 109, 6).

அணிற்பிள்ளை பெ. அணில். அணிற்பிள்ளை சாடி ஓடி அலைந்து (மலரும். 85,18).

அணு பெ. 1. உயிர். அவ்வணு உற்றும் கண்டும் உணர்ந்திட (மணிமே. 27, 114). பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர் மற்றோர் அணுக்களைக் கொல்லாமை (திருமந். 197). 2. (தத்துவம்) ஆன்மா. அன்னை ஒப்ப அணுக்கட்கு நல்லவர் (திருவால. பு. 34, 19). மூன்று திறத்து அணுக்கள் செயும் கன்மங்கட்கு (சி.சி. சுப. 262). ஆன்மாக்களின் பரியாயப் பெயர்களாவன பசு... அணு.. முதலியன (திருவால. கட். ப. 3).

1