பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணு'

3. நுண்மை. அணுவாகி ஆதியாய் நின்றான் (தேவா. 6, 39, 7). அணுமுறை பெருகி மென்மேல் (யசோதர. 38). அணுஅளவும் இணையாமோ (சிலை யெழு.28). 4.நுண்மையான பொருள். இல்நுழை கதிரின் துன் அணுப் புரைய (திருவாச. 3,5). பகுதி காலம் அணு இவை சடங்கள் (சிவப்பிர. விகா. 30). அணு மயங்கும் இல் நுழை கதிர் எறிந்த வாளாக (பிரபு. லீலை 19, 53). 5. தேர்த்துகளின் எட்டில் ஒரு பங்கு. அணுவைத்

துளைத்தேழ்

கடலைப் புகட்டி (திருவள். மாலை 55). அணுவினைச் சதகூறிட்ட (கம்பரா. 6, 3, 124). அணு எட்டுக் கொண்டது தேர்த்துகள் 'சிலப். 3, 100 அடியார்க்.). 6. (அறிவி.) வேதி வினைக்கு உட்படும் தனிமத்தின் மிகச் சிறிய துகள். அணுவையும் பிளக்க முடியும் (செய்தி.வ.). 7. எள்ளின் எடை அளவு. (குண. 2 ப. 32) 8. நுண் உடல், சூக்கும சரீரம். அறிந்து அணு மூன்றுமே யாங்கணு மாகும் (திருமந். 2414). உம்பரால் ஒன்றும் அறியவொணா அணுவாய் (கருவூர்த். திருவிசை. 4, 9). உளம் அணுவாய்ச் சென் றும் (சி. போ. சிற். 2, 3, 1),

அணு' பெ. மந்திரம். அணு மந்திரம் (பொதி. நி. 2,47).

அணு பெ. வழி.

பெ. வழி. (அக. நி.)

அணு+ பெ. புதன். (முன்.)

அணு" பெ. தினை. (சாம்ப. அக.)

அணு பெ. வரகு. (முன்,)

அணுக்கச்சேவகம் பெ. அரசர் முதலியோரிடம் நெருங்கி யிருந்து புரியும் தொண்டு. அணுக்கச் சேவகத்தி லுள்ளோர் (பெரியபு. 29, 332).

அணுக்கடி-த்தல் 11 வி. அந்தரங்கமாகுதல். அலைந்த பரிவட்டமும் தாமுமாய் அணுக்கடித்துத் திரியா நின்றாராயிற்று (திருவாய். 7, 3, 4 ஈடு).

அணுக்கத்தொண்டன் பெ. அரசன், தெய்வம் போன் றோருக்கு நெருங்கிப் பணிசெய்வோன். (சங். அக.)

அணுக்கநம்பி பெ. (இறைவனின் அருகிருந்து

தொண்டுபுரிபவரான) சுந்தரமூர்த்தி நாயனார். (செந். 25,342).

அணுக்கம்1 பெ. அருகு. அணுக்க வன்றொண்டர்

(பெரியபு. 72,3).

அணுக்கம் 2 பெ. பாம்பு. அணுக்கமே உரகம் சந்த னம் (அக. நி. அம்முதல். 101).

17

0

அணுக்குண்டு

அணுக்கம்' பெ. சந்தனம். அணுக்கமே... சந்தனம்

(முன்)

அணுக்கவிளக்கு பெ. கோயில் மூர்த்தியின் பக்கத்து எரியும் திருவிளக்குவகை. இரவைச் சந்திக்கு அணுக்க விளக்காக எரியவைத்த விளக்கு ஒன்றுக்கு (தெ.இ.க 8,34).

அணுக்கன் 1 பெ. 1. அருகிலுள்ளோன். அண் ணற்கு அணுக்கராய்க் காளத்தியுள் நின்ற கண் ணப்பர் (நக்கீர. அந் 12). வேல் வலனுயர்த்தரு ளும் வீரனை யணுக்கனாய்த் தொழுதான் (தணி கைப்பு. நந்தி. 40). 2. தொண்டன். அவ்வப் புவன பதிகளுக்கு அணுக்கராய் வைகி (சி.போ.பா. 8,1). 3. அந்தரங்கமானவன். சாயை போல் பாடவல் லார்தாமும் அணுக்கர்களே (பெரியாழ். தி. 5, 4, 11). 4. அரசர் முதலியோரிடம் நெருங்கிப் பணிபுரி பவன். (தெ.இ. கோ. சாசன. ப. 1392;

அணுக்கன் 2 பெ. குடை. அணுக்கனைக் கவிழ்த் துப் பிடித்தாற் போலே (திருவாய். 5, 6, 6 ஈடு). ஒரு மயில் தோகை விரித்தால் அத்திருச்சோலைக்கு அணுக்கன் இட்டாப் போலிருக்கை (அமலனாதி.

4 பெரிய.).

அணுக்கன்சுரவி பெ. கோயில் மாட்டுக்கொட்டகையில் இருக்கும் பசுமாடு. திருக்கோசாலை அணுக்கன்சுர விகளுக்கு முதலாக (தெ. இ.க.8, 54).

அணுக்கன் திருவாயில் பெ. 1. கோயில் மூலத்தான வாயில். (செ. ப. அக.) 2. கயிலையில் சிவபிரான் திருமுன்புள்ள வாயில். அங்கண் எய்திய திரு அணுக்கன் திருவாயிலின் (பெரியபு. 72, 41).

அணுக்கி பெ. குற்றேவல் செய்யும் பெண். அரம்பை யர் ஒத்துள அணுக்கிமாரும் (கலிங். 321).

அணுக்கிருமி பெ. 1. நுண்உயிரினம்.

2. சிறியபுழு. (முன்.)

(உயிரியல் 12)

அணுக்கு1 பெ. அருகு. தன்ன பேரணுக்குப் பெற்ற பெற்றியினோடு (திருக்கோ. 373).

அணுக்கு2-தல் 5 வி. (நெருக்கித்) தழுவுதல். தோளொடு தோள் பொர அணுக்கி (திருப்பு.15).

...

அணுக்குண்டு பெ. (அறிவி.) அணுவைப் பிளப்ப தன் மூலம் பேராற்றலை வெளிப்படுத்தி அழிவு செய் யும் போர்க்கருவி. (செய்தி.வ.)