பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தமேற்கால்

8 1

கண்ணப்ப. 45). அத்தமிக்கும் போதில் அரிசி வரும் (தனிச். சிந். காளமே. 71).

அத்தமேற்கால்

அத்தமேற்காலாதனம்

பெ. அத்தமேற்காலாதனம். அத்த மேற்கால் ஏகபாதம் ஏகவத்தம் (தத்து. பிர.125). கீழே கிடந்தவண்ணம் மறுபெ. இரண்டு காலும் சம்மணமாக மடித்து அவ்வாறு மடித்த காலிரண்டுந் தலைக்கு மேலாக உயர்த்திக் கையாற் பிடித்துக் கொண்டு கிடக்கையாகிய ஒருவகை ஆசனம். (தத்து. பிர.125 உரை).

அத்தயாமம்

(அர்த்தசாமம்,

அர்த்தயாமம்) பெ.

1. நள்ளிரவு. அத்தயாமத்து இறைஞ்ச (பெரியபு. 29, 304). அத்தயாமத்துக்குப் போனகப்படி அரிசி நானாழியும் (தெ.இ.க.23,185). அத்தயாமம் சாம நாமம் ஆம் (ஆசி.நி. 31).2. ஒருநாளின் பதினாறின் (சித். பரி. அக.ப.155)

ஒரு பாகம்.

அத்தர் 1 பெ. 1.சிவன். அத்தர் தந்த அருட்பாற் கடல் (பெரியபு. திருமலைச்சி. 15). 2. தேவர். யாவர்க் கும் அறிவரிய அத்தர் பெருமானை (தேவா. 7,38, 10).3. முனிவர். (சங். அக.) 4. தந்தை. அத்தர் பியன் மேல் இருந்து உரைத்த பனுவல் (தேவா.

2, 84, 11).

...

அத்தர் பெ. ரோசா போன்ற மலர்களிலிருந்து வடிக் கப்படும் நறுமணத்தைலம். அத்தர், பன்னீர் அதனை அள்ளித் தெளித்து விட்டார் (காத்தவரா. ப. 1871 கொடிதான புழுகு சவ்வாது அத்தர் வைத்து.... தீபம் காட்டே (CUITS. OF GOT SUT. 347).

அத்தரசிதம் 1 பெ.

ப. 15)

(போக. செனன.

மயில் துத்தம். (வைத். விரி. அக.

அத்தரசிதம் - பெ. அரிதாரம். (செ. ப. அக . அனு.) அத்தரதன் பெ. தன்னையும் தனது சேனையையும் காத்து, பல தேர் வீரரோடு போர் செய்யும் ஆற்றலு டைய வீரன். யான்போலும் அத்தரதன் ஆகுவேன்

(பாரத வெண். 457).

அத்தலுத்தன் பெ. பொருள் ஆசை உடையவன். அத் தலுத்தராம் சேயிலாளில் தனிசேர்ந்த நீ (தேவிமான்.

1, 15).

அத்தலை பெ. 1. அவ்விடம், மற்றவர் அத்தலை விடின் இத்தலைவிடார் (சீவக. 423). யானே வேண்ட அத்தலை போதி (கம்பரா. 4, 8, 30). அத்

பெ. சொ. அ. 1-12

77

அத்தன் 2

தலை விண்ணாடர் அருகணைந்து (திருவிளை. 4. 2, 8). 2. அப்பொழுது. அத்தலைத் தானை யன் அளவில் ஆற்றலன் (கம்பரா. 3, 6, 113).

அத்தவசனம் பெ. நினைத்த பொருளை விளக்கும் சொல். வைகரி செவியிற் கேட்பதாய் அத்தவசன மாகி (சி. சி. 1,20). (சி.சி.

அத்தவத்திரதம் பெ. மருந்துச் சரக்கு வகை. துத்த

மாஞ்சி அத்தவத்திரதம்

அத்தவாருடம் பெ.வெள்ளைச்

(பெருங். 3,17, 147).

சாரணை. (சாம்ப. அக.)

அத்தவாளம் 1 பெ. 1.மேலாடை, மேற்போர்வை.

வட

கம் அத்தவாளம் (சீவக. 462 நச். அடிக்குறிப்பு). அத்த வாளம் தலை மேலே பறக்க (திருப்பா. 24 ஆறா.). 2. சீலை முன்றானை. பிராட்டியை அத்தவாளத் தலையையிட்டு மறைத்துக்கொடு போனாற்போலே (திருவாய். 9, 10 பிர. ஈடு).

அத்தவாளம்' பெ. காடு. (வின்.)

அத்தவாளம் 3 பெ. உல்லாசம். வடகம் உல்லாசம் அத்தவாளம் (பிங். 1280)

அத்தன்1 பெ. 1.தந்தை. அவர் நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ (குறுந்.93). அன்னையும் அத்தனும் இல்லராய் யாய் நாண அன்னைமுன் வீழ்ந்தன்றப்பூ (கலித். 115, 8). அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் (தேவா. 6, 25, 7). உத்தமன் அத்தன் உடையான் (திருவாச. 5, 3). பல் பொருளும் பற்றிமுற்றிய அரிகாண் அத்தா (கம்பரா. 6, 3, 120). அத்தனுக்கு என்கொல் கெட்டேன் அடுத்தது என்று அணையும் போதில் (பெரியபு. 10,168). என் அத்தனை வென்றிசை கொண்டி லனோ (கந்தபு. 1, 4, 10). 2. மூத்தோன். எடுங்கள் அத்தா என்னா முன் (ஐயடிகள். சேத். 8). அத்தன்... 3. (ஆசி.நி. 44). மூத்தோர் பெயர் ஆசிரியன். அத்தன்... குருவே (பிங். 782). அத்தனே...மாருதி சிங்கமானான் (பாரதம். 7, 5, 27). 4. உயர்ந்தோன். அத்த நின் அரும் பொருள் அனைத்தும் வரை யாதே (திருவிளை. பு. 30, 34).

அத்தன்' பெ. 1. சிவன். அம்மையோடு அத்தனும் யானும் உடனிருந்து (திருமந். 1254). பழையனூர் மேய அத்தன் ஆலங்காடன் (தேவா. 7,52,10). அத்தனுக்கும் அம்பலமே ஆடரங்கம் ஆயிற்றே (பூந். திருவிசை.2,1). 2. அருகன். அத்தன் ஆனந்தன்