பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தன்3

3

...அருகன் பேராகும் (சூடா. நி. 1, 3).3. (திரு மால் அவதாரமான) கண்ணன். அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய் (திருச்சந்தவி. 115). அத்தன் புனிற்று ஆ மேய்ப்பதற்கு அலர் படர்ந்தான் கானகம் (செ. பாகவத. 10, 8, 14). 4. குபேரன். அத்தனைத் தோழன் எனக் கொண் டவன் (கங்கா. இரட். யமக. 18). 5. வைரவன். (கதிரை. அக). 6.இறைவன். அத்தனது அருளை யின்றி அது விளங்குறாது (சிவப்பிர. விகா. 118)

அத்தனைக் கருதிக் கூவும் அளவையில் (இரட்ச. யாத்.

இரட்ச. சரி. 128).

அத்தன்' பெ. கடுக்காய். (மரஇன. தொ.)

அத்தன் ' பெ.

வெள்ளீயம். (வைத். விரி. அக.ப.15)

அத்தன்பாதம்

பெ.

(சாம்ப. அக.)

செருப்படை என்னும் செடி.

அத்தன்புள்ளடி பெ. அத்தன்பாதம். (முன்.)

அத்தனாபேதி பெ. கடுக்காய் சேர்ந்த குய்யபேதி.

(முன்.)

அத்தனை பெ. 1. அவ்வளவு. ஆசையெலாம் அடி யார் அடியோம் எனும் அத்தனை (திருவாச. 49,8). சொல்லும் அத்தனை அளவையில் மணிமுடிதுறந் தான் (கம்பரா. 6, 14, 247). மீளும் அத்தனை உமக்கினிக் கடன் (பெரியபு. 21,366). அத்தனை குணக் கேடர் (தாயுமா. 8,9). அத்தனையும் வேண்டும் அவர்க்கு (தனிப்பா. இரட்டையர் 16), 2. எல்லாம். சுற்றங்கள் அத்தனையும் துறந் தொழிந்தேன் (திருவாச. 13, 1). பாராதி அண்டங் கள் அத்தனையும் (தாயுமா.9,8), அத்தனை கால மும் தொட்டு (முக்கூடற். 13). 3. (குறிப்பிடப் படும்) அளவு. திலமத்தனையே சிவஞானிக்கீந் தால் (திருமந். 501). ஆயிரம் சால் அத்தனை அப்பு வள் சாந்து (திருவரங். அந்.31). கடுகத்தனை (பே.வ.).

அத்தா பெ. தந்தை. அத்தா என்னை மெக்காவுக் குப் போகச்சொன்னார் (இசுலா.வ.).

அத்தாங்கம் பெ. அத்தாங்காதனம். கோசாங்கமும் அத்தாங்கம் (தத்து.பிர. 124).

அத்தாங்காதனம் பெ. கையிரண்டையும் மடித்து நிலத் தில் ஊன்றி உடல் மேற்பட நிற்கும் ஆசன வகை. (தத்து.பிர. 124 உரை)

1

78

அத்தாந்தரம்2

அத்தாங்குலி

பெ. (அத்தம் + அங்குலி) கைவிரல். அத்தாங்குலிகள் எலாம் வசுக் கரத்தால் (தேவி

LDITT. 2, 8).

அத்தாச்சி பெ. 1. (தன்னைவிட மூத்த) அத்தை/

மாமன் மகள்.

தவள். அக.)

(தஞ் . வ.) 2. கணவன் உடன் பிறந் (தஞ்.வ.) 3. அண்ணன் மனைவி. (செ.ப.

அத்தாசம் (அத்தாயம்1) பெ. அந்தரம், அலாக்கு. அத்தாசமாக அவளைத் தூக்கிச் சென்றான் (ரா.

வட். அக.).

அத்தாட்சி பெ. 1. எடுத்துக்காட்டு. எங்களிடத்தில் அந்த அத்தாட்சி போதும் (இராமநா. 4, 7 தரு 2). 2. சாட்சிக் கையெழுத்து. (அலுவலக வ.) 3. உண் மைச் சான்று. நீ சொல்வதற்கு என்ன அத்தாட்சி (நாட்.வ.).

அத்தாணி1 பெ.

பெ. அரசன் அல்லது அரசன் போன் றோர் வீற்றிருக்கும் இடம், அண்டத் தமரர்கள் சூழ அத்தாணியுள் அங்கு இருந்தாய் (பெரியாழ். தி. 2, 7, 9). அத்தாணி புகுந்து அறம் கேட்பதும் (இறை.

15) மாளிகை முன் அத்தாணி மண்டபத்

அக. 40 உரை),

தின் மணிபுனை பொற்கோளரி (பெரியபு. 41, 13). அந்தார் புனை இமையோர் உறை அத்தாணியும் விடுத்தான் (செ.பாகவத. 10, 22, 6).

அத்தாணி பெ. 1. அருகு. (செ. ப. அக. அனு.) 2. அந்தரங்கம். (முன்.)

அத்தாணிகொள்(ளு)-தல்

2 வி. அரசிருக்கையில் அமர்தல். அத்தாணி கொண்டு அறுமுகக் கடவுள் ஆட்சிசெய் குறிஞ்சி (சிவஞா. காஞ்சிநாட்டு. 49).

...

அத்தாணிச்சேவகம் பெ. அரசனுக்கு அல்லது கடவுளுக் குச் செய்யும் பணிவிடை. நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும் ... தந்து (பெரியாழ்.தி. 1, 1, 8).

அத்தாணிமண்டபம் பெ. அரசன் வீற்றிருக்கும் மண்ட

பம். (சி. போ. சிற்.5, 1, 1)

அத்தாந்தரம்1 பெ. கதியற்ற நிலை. அவனை அத் தாந்தரத்தில் விட்டுவிட்டான் (செ. ப. அக. அனு.).

அத்தாந்தரம்' (அத்தாந்திரம்) பெ. பண வரவு செலவு பார்க்கும் கணக்கர். அம்பலஞ்செய் அத்தாந்தரம் என்றும் (நெல்விடு.317).