பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியுட்டினம்

அத்தியுட்டினம் பெ. பெ. உள்சூடு என்னும் உட்காய்ச்சல்.

(பைச. ப.174)

அத்தியூர் பெ. காஞ்சியிலுள்ள ஒரு திருமால் தலம். அத்தியூரான் புள்ளை ஊர்வான் (இயற். இரண்டாந் திருவந். 96). அத்தியூர் வாயா அணிமயில் போன்றதே கச்சி (யாப். வி. 93).

அத்தியை பெ. கொலை. (சேந். செந். 75)

அத்திரக்கூடு பெ. சிவபூசை செய்பவர் தாம் இருக்கும் இடத்தை அத்திர மந்திரத்தால் அமைக்கும் கூடு ஒத்த விமானம். அத்திரக்கூடு அடைந்து (நித். கன். 254). அத்திரணம் பெ. அதிவிடையம் என்னும் மருந்துச் செடி. (குண.1 ப.11)

அத்திரதம் பெ. இஞ்சி. (சாம்ப. அக.)

அத்திரதேவர் பெ. விழாக்காலங்களில்

மூலதெய்வம்

புறப்படுவதற்குமுன் வலம் வரும் அத்திர ஆயுத வடிவ மான மூர்த்தி. செருவின் மலி யத்திரதேவர் தமக்கு விழா முன்செய்திட்டு (ஆனைக்காப்பு. திருவிழா. 11). அத்திரநீர் பெ. கழுதை மூத்திரம். (சித். பரி. அக. ப.

155)

அத்திரப்பல் பெ. (நிலைக்காத) குழந்தைப் பற்கள். (சாம்ப. அக.)

அத்திரப்பொருள் பெ. ஆவியாக மாறிக் காற்றில் கலக் கக் கூடிய பொருள். (முன்.) வகுப

அத்திரபரீட்சை பெ. அறுபத்துநான்கு கலையுள் ஒன் றாகிய வில்வித்தை. (சங். அக.)

அத்திரம் 1 பெ. 1. கையால் எறியும் போர்க்கருவி, கை விடுபடை. அத்திரமே கொண்டெறிய (பெரியாழ். தி. 3,10,6). அல்லவை புரியும் மாந்தர்க்கு அத்தி ரம் ஒன்றும் வாயா (சீவக. 815). 2. வில். அத்தி ரங்கள் ஈந்தானை அம்பை பொருட்டாக (பாரத வெண். 51). 3. அம்பு. அத்திரமாதியாக ஓதிய நான்கு (சூளா. 1184). எனது ஆசை உன்கை அத்திரம் காய் அத்தியின் பெரிது (திருவரங். அந். 46).

அத்திரம்' பெ. (சிவனுடைய படை எனத் தகும்) சிவசடங்க மந்திரங்களில் ஒன்று. சுத்தநீர் அணி வித்து அத்திர மந்திரத்தினாலே நிசயமுறப்பிடித்து (பெரியபு. 63,3). உணல் ஒழிந்து அத்திரத்தை விளம்புக (சிவதரு. 11,17).

pina

183

அத்திரி3

அத்திரம் ' பெ. ஒரு தேவதை. எல்லாம் உடையர் அத்திரர் என்று இயம்பும் (சிவதரு.11, 95).

அத்திரம்' பெ. குதிரை. (வரத. பாகவத. பரீட்சித். சன.10) அத்திரம் 5 பெ. கழுதை. அத்திரம் என்பது...கணை யும்... கழுதையும் குதிரையும் (அக.நி.அம்முதல். 197). அத்திரம் பெ. (அ + திரம் ) நிலையற்றது. அகில வான் பொருள்கள் யாவும் அத்திரமென்றும் (நல். பாரதம் கிருட்டிணா. 49). அத்திரம் காயம் என உண ரேன் (திருவரங். அந். 46).

அத்திரம் பெ. குங்குலியம். (சித். அக./செ.ப.அக.அனு.) அத்திரம் பெ. கடுக்காய்ப்பூ.(வைத். விரி. அக.ப.15) அத்திரம்' பெ. இஞ்சி. (சாம்ப. அக.)

அத்திரம்" பெ. இலந்தை. (சித். பரி. அக. ப. 53)

அத்திரம் 11 பெ. மலை. அத்திரம் என்பது...வெற்பும் குதிரையும் (அக. நி. அம்முதல். 197).

அத்திரயூகம் பெ. படை வகுப்பு வகை.

அத்திரயூகம

தாக வரும் பெரும் சேனையை வகுத்து (பாரதம்.

9, 1, 15).

அத்திரா பெ. அரசமரம். (பச்சிலை. அக.)

அத்திராத்திரம் பெ. பதினெண் யாகங்களுள் ஒன்று. அத்திராத்திரம். பதினெண் யாகமென்ப (பிங்.

443).

...

அத்திராதாளி பெ. யானை. (சாம்ப. அக.)

அத்திரி' பெ. குதிரை. கழிச் சுறா எறிந்த புண் தாள் அத்திரி (அகநா. 120, 10). கழிச்சேறு ஆடிய கணைக்கால் அத்திரி (நற்.278,7). மனப் பேர் அத்திரி உகைத்து (ஞானா. 33).

அத்திரி பெ. 2

ஆண் கழுதைக்கும் பெண் குதிரைக்கும் பிறந்த கோவேறு கழுதை. பாண்டியும் அத்திரியு மாய் (பரிபா. 10, 16 எருது பூண்ட வையத்தையும் கோவேறு கழுதையையும் பரிமே.). வான

வண்கையன்

அத்திரி ஏற (சிலப். 6, 119). வடித்த போத்தொடு வன்செலல் அத்திரி (சீவக. 1773

கழுதை - நச்.).

அத்திரி - கோவேறு

அத்திரி3 பெ. கழுதை. கத்தபம் கோகு ... அத்திரி வாலேயமுமாகும் (திவா.418).

...