பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்து

இயற்றிய அத்துண் ஆடையர் (சீவக. 1848). வேத சிரம் அத்து ஆர்விரிசடை வைத்தார் (சிங். சிலே.

22).

அத்து' பெ. அழகு. விஞ்சு அத்து அடவியும் ( திரு

மந். 621).

அத்து'

Dise

na

பெ. பத்துவகையான துவர். அத்துமுறை உரிஞ்சி ஆயிரத்தெண்குடம் (பெருங். 1,42,135). ஆடு நீரனவு அத்து மண்களும் (சீவக. 2418).

அத்து' பெ. இடுப்பில் அணியும் அணிவகை. அத்து அரைப்பட்டிகையே (பிங். 1193).

...

...

அத்து' பெ. உடம்பு. அத்து உடம்பினது நாமம் (ஆசி.நி. 85).

அத்து பெ. 1.தையல் தொழில். அத்தும் பொல்ல முந் தைத்தல் துன்னம் (பிங்.2302). 2. இசைப்பு. அத்தெனும் பெயரே இசைப்பு (வட. நி. 49).

...

அத்து பெ. கடப்பம்பட்டை. (இராசவைத்.செ.ப. அக.) அத்து' பெ. அழிஞ்சில். (சாம்ப. அக.) பே

அத்து 1

பெ.எல்லை, ஆணை, வரம்பு. சம்புவைரி ராசர் அத்துக்கு இவள் பொருளோ (பெருந்.928). அத்து மீறிப் பேசாதே (பே.வ.).

அத்து 11 இ.சொ. (பெயர்ச் சொற்களில் அமையும்) ஒரு சாரியை. காமத்துப் பகையே (குறுந். 257). வேதத்து மறை (பரிபா. 3, 66). குடமலை ஆகத்து (கார்நாற். 33). அங்கண் விரிக்கும் (சிலப். 4, 3). புடைத்துணும் பூதமும்

வானத்து அணிநிலா தொடுத்த பாசத்து

(LDGOOLD. 1, 23-24). (மணிமே.

அகத்து நின்று எழுதரும் அன்பு (பெருங்.3, 24, 110). குணத்து ஒண்ணிதிச்செல்வன் (சீவக. I).

கஞ்சத்துக் களிக்கும் இன்தேன் (

1, 21,19). மாகத்து நிரைத்து (தக்க. 182). காளத்தியில் வந்த காட்சிகயிலாயத்து ... சொற்றவனும் (தமிழ்

விடு. 173-174). பொன்னுலகில் அயிராவதத்து ஏறுவரிசை (தாயுமா. 12, 11). (தாயுமா. 12, 11). உள்ளத்து ஒளித்தே உணர்கிறாய் (திருவருட்பா 210).

அத்துகம் பெ. ஆமணக்கு. (மலை அக./ செ.ப.அக.)

அத்துகமணி (அத்துகமானி) பெ. அரசமரம். (பச் சிலை. அக.) 5)+(

அத்துகமானி (அத்துகமணி) பெ. அரசமரம். (சாம்ப.

அக.)

0122

1

85

அத்துவம்?

அத்துகமேதி பெ. செடிவகை. (மர இன. தொ.)

(மரஇன. தொ.)க

அத்துகோசகம் பெ. சீரகம். (சாம்ப. அக.)

அத்துச்சம் பெ. கிரகத்தின் நல்லுச்ச நிலை. (சங். அக.) அத்துசம் பெ.ள. (மூலிகை அக.)

அத்துணாடை பெ. (அத்து + உண் + ஆடை) துவ ரூட்டிய உடை. ஆய்ந்து அளந்து இயற்றிய அத்து ணாடையர் (சீவக. 1848).

அத்துப்படி பெ. (இனி அறிவதற்கு இல்லை எனும்) முற்றும் அறிந்த நிலை. கணக்கு அவனுக்கு அத் துப்படி (பே.வ.).

அத்துமம் பெ. அரத்தை.

அத்துமீறு-தல் 5வி. 1.

(பச்சிலை. அக.) (பச்சிலை. அக.)

வரையறுக்கப்பட்ட விதிக்குப் புறம்பாக நடத்தல். காவலர் அத்துமீறிச் சுட வில்லை (செய்தி. வ.). 2. மரியாதை கடந்து நடத் தல். அவளிடம் அவன் அத்துமீறி நடந்து கொண் டான் (பே.வ.).

அத்துமுறி (அறுத்துமுறி) பெ. மனைவியைத் தள்ளி வைக்கை. (பே.வ.)

அத்துலாக்கி (அத்துலாகியம்) பெ. கருஞ்சீரகம். (வைத். விரி. அக.ப.15)

அத்துலாகியம் (அத்துலாக்கி) பெ. கருஞ்சீரகம். (செ. ப. அக. அனு.)

அத்துவசம் பெ. செடிவகை. (மர இன. தொ.) இன.தொ.)

அத்துவசல்லியம் பெ.நாயுருவி. (சாம்ப. அக.) அத்துவசுத்தி (அத்துவாசுத்தி) பெ. மந்திராத்துவா முதலான ஆறு அத்துவாக்களிலும் கட்டுப்பட்டிருக் கின்ற போகங்கள் எல்லாவற்றையும் ஒரேகாலத்தில் நுகரச்செய்து அவற்றை இல்லாமல் ஆக்கி வீடுபேற் றைக் கொடுக்கும் நிருவாணதீட்சை. அருகமே நால் வர்க்கும் அத்துவசுத்தி (சைவ. நெறி ஆசாரி. 64). அத்துவசோதனை பெ. அத்துவசுத்தி. (செ.ப. அக.) அத்துவநியாசம் பெ. அத்துவசுத்தி. (செ.ப. அக. அனு.)

diau dipe

அத்துவம்' பெ. இரண்டற்று இருக்கை.

முத்திரை

மூன்றின் முடிந்த மெய்ஞ்ஞானத்தள் அத்துவமாய் அல்லவாய சகலத்தள் (திருமந். 1176 பா.பே.)

அத்துவம்' பெ. வழி. (செ.ப. அக.)