பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்வைதம்

அத்வைதம் (அத்துவைதம், அத்தொய்தம்) பெ. 1. இரண்டன்மை. அத்வைதம் பெறும் பேறு (தாயுமா. 24, 9). 2. ஏகான்மவாதம். (சமய வ.)

அதக்கு-தல் 5 வி. 1. கீழ்ப்படுத்துதல். மாவலியைக் குறும்பதக்கி (பெரியாழ். தி.4,9, 7). 2. கசக்குதல். (வின்.) 3. வாயில் அடக்குதல். எப்பப் பார்த்தா லும் எதையாவது அதக்கிக் கொண்டுதான் இருக் கிறான் (நாட்.வ)

அதகடி பெ. அதட்டுகை. (இலங். வ.)

அதகம்1 பெ. மருந்து. அதகங் கண்ட

பையணல்

நாகம் (சீவக. 403). செய்யும் நேர் அதகத்தோடு பன்னும் மந்திரம் (குசே. 737).

அதகம் 2 பெ. பெரிய மருந்துக்கொடி வகை. (மலை அக. செ. ப.அக.)

அதகம்' பெ. சுக்கு. (சாம்ப. அக.)

அதகம் + பெ. காற்று. (முன்.)

அதகம்' பெ. ஆன்மா. (முன்.)

அதகன்1 பெ. வலிமையுள்ளவன். உறுதுயர் தீர்த்த அதகன் (பெரியாழ். தி.2, 1,9),

அதகன்' பெ. மருந்து கொடுப்போன். (சித், பரி. அக.

ப. 155)

அதங்கதம் பெ. யானைத் தீவனம். அதங்கதந்தானே யானைத் தீவனம் (அக. நி. அம்முதல். 28).

அதங்கம் பெ. ஈயம். (கதிரை. அக.)

அதங்கோட்டாசான் பெ. பனம்பாரனார் செய்த தொல் காப்பியச் சிறப்புப் பாயிரத்தில், அந்நூல் அரங்கேற்றத் தில் தலைமை வகித்தவரும் அவருடன் பயின்ற வருமாகச் சொல்லப்படுபவர். அதங்கோட்டாசாற்கு

அரில்தபத் தெரிந்து (தொல். சிறப்புப்.).

அதச்சதனம் பெ. சிவபூசையின் பதுமாசன பூசையில் தாமரையின் கீழ்நோக்கிய இதழ். சாத்திடு அதச்

சதனத்தை (நித்.கன்.438).

அதசி பெ. சணல். (சங். அக.)

அதட்டம்1 பெ. பாம்பின்

கீழ்வாய்ப்பல். பிழிந்து

88

அதம்2

உயிர் உண்ணும் தட்டம் அதட்டமாம் பிளிற்றின்

(சீவக. 1286).

அதட்டம்' பெ. பாம்பின் உயிர்ப்பு. தட்டம் நஞ்சு காலும் பல் அதட்டம் காற்று (சூடா.நி.3,49).

அதட்டு-தல் 5வி. 1. கண்டித்தல், கடிந்துரைத்தல். எவரு மடங்க...அதட்டுவான் போன்று (பிரபோத. 11,1). 2.உரத்த குரலில் கத்தல். எத்தத் துணிந்தே அதட்டிட்டு (முக்கூடற். 133). 3. விலங்கினங்களை வெருட்டுதல். வண்டி மாட்டை அதட்டி ஓட்டினான் (நாட். வ.).

அதட்டு' பெ. வெருட்டும் உரத்த ஒலி. ஓர் அதட்டுப் போட்டான் (நாட். வ.).

அதடம் பெ. மலை முதலியவற்றின் சரிவில்லாத இறக் கம் (தடம் இல்லாதது). (சங். அக.)

அதப்பாதாளம் பெ. எட்டாத ஆழம். (செ.ப. அக.) அதப்பியம் பெ. பேசத்தகாத சொல். (இலங்.வ.)

அதப்பிரளயம் பெ. பிரம்மாண்டத்தில் உள்ள கீழ், நடு, மேல் உலகங்கள் ஒடுங்குகை. பிரம்மாண்டத்து உலகம் மூன்றும் ஒடுங்குதல் அதப்பிரளயம் (சிவப்பிர. விகா. 279).

அதப்பு (அதபு) பெ. மரியாதை. பண்ணையாரிடத் தில் ஆள்களுக்கு அதப்பே இல்லை (பே.வ.).

அதப்பு - பெ. திமிர். அவனுக்கு என்ன அப்படி அதப்பு (பே.வ.).

அதபட்சம் பெ. சுக்கு.(சாம்ப. அக.)

அதபு (அதப்பு 1) பெ. மரியாதை.

வன் (நாட். வ).

அதபு கெட்ட

அதம் பெ. 1. அழிவு. தாமன் முன்னோர் அதமுற மடிந்த பின்னர்

(ஞானவா. உற்பத்தி. வீமபாச. 16). அதம் பண்ணிடும் ... ஆளைப் பார்த்தால் (மலைய. ப. 167). நீ முனிந்தால் பெருமலைகளும் அதமே (சர்வ.கீர்த்.88,1). 2. இறப்பு அரக்கர் அதம் தீர்வர் ஈர்வர் செகம் எங்குமே (கந்தரந்.23).

அதம்' பெ. 1. இறங்குகை. அதம் இறங்குதல் (சூடா. நி. தகரவெது. 28). 2.கீழ். அதம் ... கீழும் என்ற