பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிகன்'

கொன்று வந்து (அகநா. 142, 13). அதிகன் அவன் அணித்தாக...மலையரணத்துள்ளுறைவான் (பெரிய பு. 41, 17). அதிகன் தலைக்குலத்தீர் (களவி. காரிகை

238).

அதிகன்2 பெ. 1. மேன்மையுடையவன். அரன் அதிகன் உலகு அளந்த அரி அதிகன் (கம்பரா. 4, 12, 24). படைஞர்க்கெல்லாம் அதிகனாய் (பிரபோத. 26,110). 2. பரம்பொருள், சிவபிரான். அதிகன் வேணியிலார் தரு கங்கையை (கந்தபு. 1, 1, 20).

அதிகாசம் பெ. பெருஞ்சிரிப்பு. வடவை செம்பவள மாக அதிகாசமாப்...பார்த்து அன்புறக் கூவுமாம் (அருண. சேவல் வி. 8, 3),

அதிகாதி பெ. மிக்க உயர்வு.

அதிகாதி வேதாந்த

சித்தாந்தம் (திருமந்.2404).

அதிகாந்தம்1 பெ. செவ்வானம், (யாழ். அக. அனு.)

அதிகாந்தம் 2 பெ. இரத்தின வகை. (வின்.)

அதிகாயன் 1 பெ. (காப்.) இராவணன் மகன். அதிகாயன் எனும் பெயரான் அறைவான் (கம்பரா. 6, 17, 7). அதிகாயன் 2 பெ.

அக.)

பெ. மிகப் பெரும் உடம்புடையவன். (சங்.

அதிகாரக்கணக்கு பெ. அரசாங்கக் கணக்கு வழக்கு.

(இலங். வ.)

அதிகாரக்குவிப்பு பெ. அரசாங்கமோ தனிமனிதனோ அதிகப்படியான உரிமைகளை வைத்திருக்கை. அதி காரக் குறைப்பிற்குப் பதிலாக அரசிடம் அதிகாரக் குவிப்புத்தான் காணப்படுகிறது (அரசியல் 12 ப. 11-

12).

அதிகாரச்சாலை பெ. 1. அலுவலகம். அனு.) 2. நீதிமன்றம். (ராட். அக.)

அதிகாரசிவன்

முதல்வன்

39 2mg).

...

பெ. மகேசுரன்.

(செ. ப. அக.

அவத்தைகளிலேயும் அதிகாரசிவன் என்றும் (திண்ண. அந்.

அதிகாரசூத்திரம் பெ. (இலக்.) தான் ஒன்றனையும் விதிக்காது பல சூத்திரங்கட்கு முன் படிக்கப்பட்டு அவற் றுக்குப் பொருள் கொள்ளும்போது தானும் அவற்று டன் சேர்ந்து பொருள் கொள்ளப்படும் சூத்திரம். (செ.

ப. அக. அனு.)

பெ சொ . அ, 1-13 அ

195

அதிகாரம்'

அதிகாரஞ்செலுத்து-தல் 5 வி. 1. ஆட்சி செய்தல். (அருகிய வ,) 2. பிறரை வெருட்டி வேலை வாங்குதல்.

(பே.வ.)

அதிகாரடாகை பெ. அதிகாரத்தால் உண்டாகும் கரு வம். அதிகார டாகையின் மேல் ஆர்த்து (சரவண.

பணவிடு. 108).

அதிகாரதத்துவம் பெ. கிரியை மிகுந்து ஞானம் குறைந்த ஈச்சுர தத்துவம். (சி. சி. 1, 65 ஞானப்.)

அதிகாரநந்தி பெ. 1. சிவாலயக் கோபுரத்தின் அடி யறையில் அமைக்கப்பட்டுள்ள தேவமுகமும் நான்கு கையுமுடைய சிவகணத் தலைவர். (சைவ வ.) 2. பத்து நாள் சிவாலய விழாக்களில் உற்சவரை ஒரு நாள் தாங்கி வரும் நந்திவாகனம். அதிகாரநந்தி

சேவை (நாட். வ.).

அதிகாரப்புறனடை பெ. (இலக்.) ஒரு நூலின் அதி கார இறுதியில், முன் கூறாதவற்றையெல்லாம் கூறிய வற்றைக் கொண்டு முடிக்கும் வகையில் உள்ள நூற்பா. அந்நிகரன செய்யுள்முடிபு எனப்படும்; அவற்றை அதிகாரப் புறனடையாற் கொள்க (தொல். சொல். 45 சேனா.).

அதிகாரபத்திரம் பெ. ஆட்சி செய்வோரின் ஆணைக் கடிதம். (செ.ப.அக.)

...

அதிகாரபூர்வம் பெ. சட்டம் திட்டம் போன்றவற்றை வரையறை செய்யும் அரசு அதிகாரம் பெற்றிருக்கை. திட்டத்தை வரையும் பணியை மேற்கொண்டுள்ள ஓர் அதிகாரபூர்வமான அமைப்பு. (செய்தி. வ.) அதிகாரம்1 பெ 1. இடம். (இலக்.) நுதலியது அறி தல் அதிகார முறையே, அதிகாரம் என்ற பொருண்மை என்னைஎனின் இடமெனவும்... கொள்ளப்படும் (தொல். பொ. 665 பேரா.). 2. முறைமை. (இலக்.) அதிகாரம் என்ற பொருண்மை என்ன வெனில் முறைமை எனவும் கொள்ளப்படும் (தொல். பொ. 665 பேரா.). 3. உரிமை. காக்கும் அதிகாரம் மாலுக் களித்தோன் (மதுரைச் உலா 15). மாயைக்கு ஆர் தந்தார் இந்த அதிகாரமே (சர்வ. கீர்த். 5, 3). 4. சந்தர்ப்பம். பொருள் என்பது அதிகாரத்தான் வருவித்து அளவென்பது பின்னுங் கூட்டி உரைக்கப்பட்டன (குறள். 478 பரிமே.).

...

அதிகாரம் 2 பெ. 1.ஆட்சி. அதிகாரத்தைத் தன் மாட்டு வைத்து மன்னவன் வந்தேயிருப்ப (சி.போ. பா. 6, 2). அப்பா இது என்ன அதிகாரம் (சர்வ.