பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிமதுரம்"

அதிமதுரம்' பெ. குயில்மொழி. (சித். பரி. அக. ப. 155) அதிமதுரம்' பெ. மணமுடைய பொருள். இலவங்கம் சண்பகம் அதிமதுரம் (திருவால. பு. 43, 16).

அதிமதுரம் ' பெ . பூடுவகை. அதிமதுரம்வீட்டு அவரை மருக்காரையின் காய் (மச்சபு. பூருவ. 86, 8). அதி மதுரம் கழஞ்சு மூன்று (போகர் 700,361). அதிமதுரம்" பெ. குன்றி. (சாம்ப. அக.)

அதிமதுரம் பெ. காளமேகப் புலவர் காலத்திலிருந்த அதிமதுர கவி. அதிமதுரம் என்றே அகிலம் அறிய (பெருந். 1589).

அதிமல்லி பெ. மாவிலிங்கம். (செ.ப. அக. அனு.)

அதிமலம்' பெ. விலங்குகள் மிகுதியாக மலம் தள்ளுகை.

(சாம்ப. அக.)

அதிமலம்' பெ. மாவிலிங்கம் என்ற மரம். (வைத். விரி.

அக.ப. 15)

அதிமாத்திரம் பெ. மிகப் பெரியது. பல்லவன் அதி மாத்திரமான ஆனுகூலியங்களைப் பண்ணி (பெரிய தி. 2, 9, 1 வியாக். பிர.).

அதிமாதம் பெ.

சந்திரனைக் கொண்டு அளக்கப்படும் காலம். அதிமாதத்தைக் கணக்கன் வாயிலாகக் கணித்துக் கொள்ளல் வேண்டும் (கௌடலீயம் 173).

அதிமார்க்கநூல் பெ. அதிமார்க்கிக சாத்திரம். (சித்.

பிர. 14)

அதிமார்க்கம் பெ. 1. சைவாகமப் பிரிவினுள் ஒன்று. (சி. போ. பா. சிறப்புப்.ப.17) 2. உட்சமயமாயும் சைவ சித்தாந்தத்திற்குப் புறம்பாயும் இருக்கும் சமயம். (சதாசிவ. 43)

அதிமார்க்கவினை பெ. மோசம் செய்கை. (சி. போ.

பா. 2,2 உரை)

அதிமார்க்கிகசாத்திரம் பெ. பாசுபதம் காபாலிகம் மாவிரதமென்னும் அகப்புறச் சைவசமயங்களைக் கூறும் சாத்திரங்கள். (விவேகசிந். 17 /செ. ப. அக. அனு.) அதிமித்திரன் பெ.கணவன். (சங். அக.)

அதிமிதி பெ. வீம்பான நடை. (இலங். வ.)

அதிமிருத்தியாதிமாத்திரை பெ.

திரை. (வைத். விரி. அக.ப. 15)

கோரோசனை மாத்

20

2

அதியரையமங்கை

அதிமுணி பெ. பிறருடைய கிணற்றிலிருந்து

நீர்

இறைத்துச் சாகுபடி செய்வதற்காக அக்கிணறுடைய வருக்குக் கொடுக்கும் வாரம். (செ. ப. அக. அனு.) அதிமுத்தகம்1 (அதிமுத்தம்) பெ. குருக்கத்தி. அதி முத்தகங் குருக்கத்திக்கொடி (நாநார்த்த. 360). அதிமுத்தகம் ' பெ. திமிசு. (செ. ப. அக. அனு.)

அதிமுத்தம் (அதிமுத்தகம்') பெ. குருக்கத்திக்கொடி. (வைத். விரி. அக. ப. 15)

அதிமூத்திரநீக்கி பெ.

பொன்னாங்கண்ணி.

(சாம்ப. அக.)

அதிமூத்திரம் பெ.

சிவப்புப்

சிறுநீர்

மிகுதியாகப்

பெய்கை,

நீரிழிவு. அப்பிரகத்தில் குடலண்டம்...அதிமூத்திரம்

000

ஒழியும் (பதார்த்த. 1210).

அதிமூத்திரரோகம் பெ. நீரிழிவு நோய். (பைச.ப.286)

அதிமேற்றிராசனம் பெ.

தலைமைத்தானம். (கிறித். வ.)

அதிமேற்றிராணியாரின்

அதிமேற்றிராணியார் பெ. கத்தோலிக்கத் பெ. கத்தோலிக்கத் திருச்சபை அடங்கிய ஒரு வட்டத்தின் தலைமைப் பொறுப்புடைய வர். (முன்.)

அதியட்டி பெ. அடி ஒன்றிற்குப் பதினேழு அசைஉடைய தாய் நான்கடியால் வரும் ஒரு கவிச்சந்தம். (சங். அக.)

அதியம் 1 பெ. ஒரு மருந்து. (சங். அக.)

அதியம் பெ. அப்பிரகப்பாடாணம் என்னும் செயற்கை 2 நஞ்சு. (சாம்ப. அக.)

அதியமான் (அதிகமான், அதிகன்)

பெ. சங்க கால

வள்ளல்களுள் ஒருவன். இயல்தேர் அதியமான் பரிசில் கையகத்தது (புறநா. 101,4-8).

அதியமான் நெடுமானஞ்சி பெ. அதியமான். அதிய மான் நெடுமானஞ்சியை ஔவையார் பாடியது (புறநா.87 முன்குறிப்பு).

அதியர் பெ. அதியமான் மரபினர். அதியர் கோமான் (புறநா. 91,3).

அதியருதம் பெ. முன்னுள்ள கழலைமேல் தோன்றும் மற்றொரு கரையாக் கழலைக்கட்டி. (சாம்ப. அக.)

அதியரையமங்கை பெ. திருவதிகை என்னும் சிவத் தலம். அதியரையமங்கை அமர்ந்தான் தன்னை (தேவா. 6,3, 1).