பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிர்வி

அதிர்ச்சி. நிலத்துளக்கு விண்ணதிர்ப்பு வாலாமை (ஆசாரக். 47). அரசர் கண்டு அஞ்சினர் அதிர்ப்புற் றாரரோ (செ. பாகவத. 10,39, 50). அருஞ்சமர் கலக்கம் இழைத்திடும் அதிர்ப்பினில் இமையோர் உறுவர் (கோனேரி. உபதேசகா. 2, 27). அதிர்ப்பு ... அச்சம் அச்சம் (நாநார்த்த. 362).

3. அச்சம்.

அதிர்வி (அதிரி) பெ. ஒன்றை அதிர்வுறச் செய்வது.

(கலை. அக.ப.82)

2.

அதிர்வு (அதிர்ப்பு) பெ. 1.நடுக்கம். அதிர்வும் விதிர்ப்பும் நடுக்கம் செய்யும் (தொல். சொல். 316 சேனா.). அரசு புறத்து இறுப்பினும் அதிர்விலர் திரிந்து ( பதிற்றுப். 81, 8). ஓசையின் உலகம் எங் கும் அதிர்வுற (கம்பரா. 6, 21, 145). அதிர்வினோடு சென்று உரை செய்வார் (திருவால. பு. 37, 34). யாழ், முழவு முதலியவற்றின் அதிர்ச்சி. செம்பகை ஆர்ப்பே கூடம் அதிர்வே (சிலப். 8,29).அதிர் விலாச் சீர் முழா சீடம் (கள. நாற்.20). அதிர்வெனப் படுவது இழுமெனல் இன்றிச் சிதறி உரைக்குநர் உச்சரிப்பிசையே (சீவக. 717 நச்.). 3. (இக்.) ஒரு பொருள் முன்னும் பின்னும் ஒரே சீராக அசைவது. (பௌதிக.க.சொ. ப. 18) 4. முழக்கம். எதிரெழுந்து வருவன போலும் அதிர்வொடு (பெருங். 1,48,121). கனைவார் முரசு ஒத்தது கார் அதிர்வே (நந்திக் கலம். 13). மங்குலின் அதிர்வு மழையொடு மலைந்த (கம்பரா. 6, 21, 7). அதிர்வொடு தோன்றக் கண்ட செழியன் (திருவால.பு.26,8).

அதிர்வுக்கவை பெ. தட்டினால் அதிர்ந்து ஒலி தரும் கவையாகவுள்ள கருவி. (இயற்பி. க. சொ.)

அதிர்வெடி பெ. 1. அதிர்வேட்டு. (நாட். வ.) 2. சிறுபீரங்கி. (சங். அக.) 3. பீரங்கிச்சத்தம்.

(முன்.)

அதிர்வேட்டு பெ. கோயில் விழாக்களில் சுவாமி புறப் பாடு ஒத்த நிகழ்ச்சியை மக்களுக்குத் தெரிவிக்கும் குழாய்வெடியின் பேரொலி. (நாட்.வ.)

அதிரசம்1 பெ. 1. அரிசிமாவில் வெல்லம் குழைத்து வட்டமாகத் தட்டி எண்ணெயில் இட்டெடுக்கும் இனிப் புப் பலகாரம். அவல் எள் அதிரசமும் தோசை களும் கப்புவது (பெருந். 1639). அதிரசத்தை நன். றாய் அறி (பதார்த்த. 1511). அதிரசமும் அழகா கத் தட்டவேணும் (திருமணப்பா.ப.98). 2. மிகு சுவை. அரணமும் பாலும் தேனும் அதிரசக் கனி யும் நல்கி (திருநெல். பு. சுவேத.58).

20

04

அதிராத்திரம்

அதிரசம்' பெ. இரசம் (வைத்.விரி. அக.ப. 15)

அதிரசம்3 பெ. ஒருவகைக் குடிநீர். (வைத். விரி. அக.

ப. 6)

அதிரசம்+ பெ. உப்பு. (தைலவ. தைல. 107/செ. ப. அக.)

அதிரடி பெ. 1. பெருங்கலகம். அச்சந் திகிலும் அதிரடியும் சொற்பனமும் (பஞ்ச. திருமுக. 720).2. வெருட்டுகை. (திருநெல்.வ.) 3. பெருந்திகில். (பே. வ.) 4. கடுமை. விலை அதிரடியாக இருக்கிறது

(வட். வ.).

அதிரடிக்காரன் பெ. கேட்போர்க்கு அதிர்ச்சி அல்லது நடுக்கம் உண்டாகுமாறு வெருட்டும்குரலிற் கடுமை யாகப் பேசுபவன். அதிரடியாய்ப் பேசுபவன் (திரு நெல்.வ.).

அதிரடிப்படை பெ. (இக்.) திடீர்த் தாக்குதல் நடத் தும் போர்வீரர் குழு. அயல்நாட்டார் கடத்திய விமானத்தை அதிரடிப்படை மீட்டது (செய்தி.வ.).

அதிரதன் பெ. நால்வகைத் தேர்வீரருள் தலைமை யானவனும், தன்னையும் தன் வீரரையும் காத்துப் பல தேர்வீரரோடு போர் செய்யும் ஆற்றல் பெற்றவனு மான தேர்வீரன். அதிரதரும் மாரதருமாவார் (பாரத வெண். 186). அதிரதர் மாய்ந்தார் (பாரதம்.

7, 4, 94).

அதிரபுரசத்தான் பெ. அலரி. (சாம்ப. அக.)

அதிரர் பெ. அசுரர். அதிரர் தேவர் இயக்கர் விச்சா தரர் (தேவா. 5,32,8).

அதிரல் பெ. 1. புனலி, மோசிமல்லிகை.

நுண்

கொடி அதிரலொடு நுணங்கறல் வரிப்ப (அகநா. 237, 2). விரிமலர் அதிரலும் (சிலப். 13, 156). அதிரல் பரந்த அசோகந் தண்பொழில் (பெருங். 1, 40, 121). 2. காட்டுமல்லிகை. எல்லி மலர்ந்த பைங்கொடி அதிரல் (அகநா. 157,6).

அதிரல்' (அதிகல்) பெ. அடித்தூறு. அதிரல் விரிதூறு

(பிங். 2859).

அதிராகம் பெ. கந்தகம். (வைத். விரி. அக.ப. 15) அதிராத்திரம் பெ. சோமயாக வகை. அதிராத்திரம் நூறு செய்த (திருக்காளத். பு. 7, 43). அதிராத்திரம்