பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிராம்பை

துலங்கிய மகப்பயன் அடைவர் (மச்சபு. பூருவ. 59,27). அதிராம்பை பெ. பொற்றலைக் கையாந்தகரை. (சாம்ப.

அக.)

அதிராமரபு பெ. சுருதி கலையாமை. அதிராமரபின் யாழ்கை வாங்கி (சிலப். 8,23 கோவை கலங்கா பினையுடைய யாழ் -அடியார்க்.).

அதிராயம் பெ. அதிசயம். (வின்.)

மர

அதிராவடிகள் பெ. பதினோராந் திருமுறையுள் மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை பாடியவர்.

அதிரி (அதிர்வி) பெ. ஒன்றை அதிர்வுறச் செய்வது. (ஆங். தமி. களஞ்சியம் ப. 1174)

அதிரிச்சியம் பெ. (அ + திரிச்சியும்) பண்டங்களைப் பிறர் காணாமல் மறைக்கும் வித்தை. புகரிலா அதி ரிச்சிய மஞ்சனம் (திருவிளை. பு. 20, 17).

அதிரித்தம் பெ. அதிகமானது. ஆணவமலசாமர்த்தியத் தினைக் காட்டிலும் அதிரித்தம் (சிவசம. 43).

அதிருசியம் பெ. 1.காணப்படாதது. உணர்வரிதாய் அதிருசியப் பொருளாய் (சூத. முத்தி. 4, 19). 2. அறுபத்துநான்கு கலையுள் தன்னைக் காணாமல் மறைக்கும் வித்தை. (சங். அக.)

அதிருட்டம் பெ. (கண்ணுக்குப் புலப்படாமல் வரும்) நற்பேறு. அவ்வருகில் .அதிருட்டமாகவும் நினைத் திருப்பது இது தன்னையே (பெரியதி. 1, 6, 1

வியாக்.).

1

அதிருப்தி பெ. நிறைவின்மை. அதிருப்தி மாறாதே இருக்கை (பெரியதி. 2, 7, 1 வியாக்.). அதிருப்தியைக் கொத்துவோம், கொல்லுவோம்

5, 3).

(பாரதி. வசனகவி.

அதிரேகம் பெ. மிகுதி. ஆர் இவ் அதிரேக மாயை அறிவார் (கம்பரா. 6, 18, 252). அதிரேக விறற் பற்குணன் (பாரதம். 7, 4, 58).

அதிரோகணி பெ.ஏணி. (சங். அக.)

அதிரோகம் பெ. 1. அதிகமான நோய். (பே.வ.) 2. சயம் என்னும் நோய். (வின்.)

அதிரோகணி. (சங். அக.)

அதிரோகிணி பெ.

அதிலி பெ. அலரி. காக்கணம் வேர் அதிலி

வேர்

பாலை வேர் இம்மூன்றும் அரைத்துப்

பாத

205

அதிவிடையம்

லேபனம் செய்யவும் விடந் தீண்டாது (செ.ப. அக. அனு.).

அதிலோகம் பெ. இரசகர்ப்பூரம். (வைத். விரி. அக.ப.16) அதிவசம் பெ. அதிவிடயம். (சாம்ப. அக.)

அதிவண்ணாச்சிரமி (அதிவர்ணாச்சிரமி) பெ. ஆச் சிரமங்களின் ஒழுக்கங்களுக்கு அப்பாற்பட்டவன். அல கில் கீர்த்தி உடையானே அதிவண்ணாச்சிரமி யாவன் (சூத. முத்தி. 5, 16).

அதிவர்ணாச்சிரமி (அதிவண்ணாச்சிரமி) பெ. ஆச் சிரமங்களின் ஒழுக்கங்களுக்கு அப்பாற்பட்டவன். (சங்.

அக.)

அதிவாசம்1 பெ சிராத்தத்துக்கு முதல்நாள் உபவாசம்.

(செ. ப. அக.)

அதிவாசம்' பெ. 1. திருமணச் சடங்குக்கு முன் நிகழ்த் தும் சடங்கு வகை. (சீவக. 2363 நச்.) 2. யாகத் துக்கு முன் தெய்வங்களைத் தாபிக்கும் சடங்கு. சடங்கு அதிவாசம் அமைத்தார்கள் (கோயிற்பு. திரு விழா. 4).

அதிவாதகன்மம் பெ. சிலைப்பிரதிட்டைக்கு அங்கமான சடங்கு. அதிவாதகன்மங்களும் பிரதிட்டாகன்மங் களும் பத்தியினாலே செய்து (சிவதரு. 2, 71 உரை).

அதிவாதம்1 பெ. அதிவாத கன்மம். விதிநூல் முறையே அதிவாத வினையும்... இசையப் பண்ணி யிடுக (சிவதரு.2, 71).

அதிவாதம்" பெ. புனைந்துரை. (செ.ப. அக.)

அதிவாதனம் பெ. எழுந்தருளச் செய்கை. சிலாபேதம் அல்லாதவைகளுக்குக் கண்ணாடியில் அதிவாதனம் செய்க (சிவதரு. 2, 71 உரை).

அதிவிடம் (அதவிடம், அதிவிடை, அதிவிடையம்) பெ. ஒரு மருந்துச்செடி. (வைத். விரி. அக. ப. 15)

அதிவிடை (அதவிடம், அதிவிடம், அதிவிடையம்) பெ. ஒரு மருந்துச்செடி. (தைலவ. 4/செ . ப . அக.)

அதிவிடையம் (அதவிடம், அதிவிடம், அதிவிடை) பெ. ஒரு மருந்துச்செடி. (வைத். விரி. அக. ப. 7)