பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிவியாத்தி

அதிவியாத்தி (அதிவியாப்தி) பெ (தருக்கம்) இலக் கியம் அல்லாததன்கண்ணும் இலக்கணம் சொல்லு வதாகிய தோடம். (செ. ப. அக.)

அதிவியாப்தி (அதிவியாத்தி) பெ. (தருக்கம்) இலக் சொல்லு கியம் அல்லாததன்கண்ணும் இலக்கணம் வதாகிய தோடம். (விசாரசந். ப. 402)

அதிவீரராமன் பெ: 16-ஆம் நூற்றாண்டில் திருநெல் வேலி நாட்டை ஆண்டவரும், நைடதம், காசிகண்டம் முதலிய நூல்களைப் பாடியவருமான பிற்காலப் பாண்டிய அரசர். அதிவீரராமன் இகல் அரசர் ஏறே (நைடத. சி. பாயி.).

அதிவீரன் பெ. பெருவீரன். அயில் அனல் என எழ விடும் அதிவீரா (திருப்பு. 53).

அதிவெள்ளை பெ. பறங்கிப் பாடாணம். (சாம்ப. அக.) அதிவெள்ளைச்செந்தூரம் பெ. → அதிவெள்ளை. (முன்.) அதிழ் -தல் 4 வி. நடுங்குதல். அதிழ்கண் முரசம்

(தொல். சொல். 316 சேனா.).

அதினம் பெ. மிகுதி. அவன் அதினமாய்ப் பேசு கிறான் (வட். வ.)

அதீதம்1 பெ. கடந்து நிற்கை. ஆன மலஅதீதம் அப் பரம் தானே (திருமந். 2310). வாக்கு மனாதீத அகோசரம் (பட்டினத்தார். அருட்பு. 74). அதீத அநா கதம் ஐயமின்று உணர்ந்தோர் (ஞானா. 28, 15). பரமாயிருக்கும் அதீதத்திலே (கந்தரலங். (தாயுமா. 55, 33). அரு சமயாதீதத்தன்மை ஆகி (தாயுமா. வத்துக்கு அதீதம் ஆகி (இறைவாச. பு. கடவுள். 4).

68).

அதீதம்' பெ. (இசை) அதீத எடுப்பு. (பரத. 3, 43)

அதீதம்' பெ. வசப்பட்டிருக்கை. உனக்கு நிலை சிவ னுக்கு அதீதமாயிருக்கையும்

(களிற்று. 49 உரை).

அதீதம்' பெ. சூடம். (போகர் நி. 19)

அதீதம்' பெ. பொற்கொன்றை.

(சாம்ப. அக.)

அதீதர் பெ. 1. வானோர். (யாழ். அக.) 2. ஞானி

யர். (செ. ப. அக.)

அதீதவெடுப்பு பெ. (இசை) பாடலைப் பாடும்போது குரல் முன்னும் தாளம் பின்னும் வருமாறு பாடும் எடுப்பு வகை. (செ.ப.அக.)

20

06

அதீதன் பெ. சிவன். தாயொடு தமரும் அதீதன் (திருமலைமுரு. பிள். 20).

அது 2

இலாத

அதீதாவத்தை பெ. ஆன்மாக்கள் இறைவனுடன் ஒன்று மாகாது வேறுமாகாது. நிற்கும் நிலை. சூக்கும தேகம் நீங்கின அதீதாவத்தையில் ஆன்மாவின் அறிவற்றடங்கும் (சிவதரு. 10, 107 உரை).

201

அதீதியம் பெ. ஆசையின்மை. (யாழ். அக.அனு.)

...

அதீந்திரியம் பெ. புலன் அறிவுக்கு எட்டாதது. காலத் தின்கண் என்பது அருவப்பொருளை ஆதாரம் ஆக்கியவாறு இதனை வடநூலார் அதீந்திரியப் பிரமாணம் என்பர் (குறள். நுண்.102),

அதீபனம் பெ. மந்தாக்கினி. (இலங்.வ.)

அதீனம் பெ.

1. வசம்

ஆக்குகை. பிராணவளி

அதீனமேயாய் ... பொன்போல் திகழும் (சூத. எக்கிய. பூருவ. 4, 4). 2. உரிமை. (வின்.) 3. சார்பு. (முன்.)

அது1 சு. பெ. அஃறிணை ஒருமைச் சேய்மைச் சுட்டு.

அது

.

....

எனவரூஉம்

பெயரும்

...

அஃறிணைப் பெயரே (தொல்.சொல். 167 சேனா.). அது நீ அறி அன்புமார் உடையை (நற். 54, 6). அறிந்தனை (புறநா.35, 30).

யின்

நற்கு

அதனருகே தோன்றும் (தேவா. 4,6, 7). என்னாது (உந்தி. 39). நீல (உந்தி. 39). நீல நிறத்தை

அது

அதுகண்டு

அது இது

எல்லோ

ரும் நினைக்க அதுவாய் நிரம்பியதோ (கம்பரா. 1, அது என்றால் எது

10, 67).

அது

என ஒன்றடுக்கும் சங்கை (தாயுமா. 14, 23). புலாலுடையாக்கை பலா லம் அது அகற்றி (பட்டினத்துப். திருக்கழு. 40). வளர் அணுவே அணுவளர் அதுவே (திருவருட்பா 4251). அறம் அது தழைப்ப (பாரதி. தேசியம். 42, 80). நாயை அடித்தால் அது கடிக்கும் (இளைஞர் இலக். ப. 45).

1. உடைமைப்பொருள் தரும் ஆறாம் அது' இ. சொ. 1. வேற்றுமை அதுவெனப் உருபு. ஆறாகுவதே பெயரிய வேற்றுமைக் கிளவி (தொல். சொல். 79 சேனா.). பாரியது பறம்பு (புறநா. 109, 1). அச்சமே இரு கீழ்களது ஆசாரம் (குறள். 1075). நினது திருவடி (சிலப். 24, 18, 3). இதை உனது இல்லென (பெருங்.1,34,43). கலியது காலம் வந்து கலந்ததோ (கம்பரா. 4,7,88). 2. பகுதிப் பொருள்விகுதி. மற்றது (சிலப். 27, 103). ஆளது ஆகும் நன்மை (திருமழிசை. திருச்சந். 112). காதலது பிடித்து உந்த

(கம்பரா.

1, 3, 3). வடிவதும் உணர்ந்திலை (சி.சி.8,36).