பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுக்கம் 1

அதுக்கம்1

பெ. ஒதுக்கம். (சங். அக.)

அதுக்கம் ' பெ.

அடிப்பு. (முன்.)

அதுக்கம்' பெ.

துக்கமின்மை.

(முன்.)

அதுக்கம் + பெ. தொடும்போது அதுங்குகை. (செ.ப. அக.) அதுக்கு 1-தல் 5 வி. அடித்தல். தாளிற மூர்க்கர் அதுக்கலின் (சீவக. 936). அசனி வீழ்ந்ததென்று ஆய்ச்சியரால் வயிறு அதுக்கி (செ. பாகவத. 10, 4,18).

அதுக்கு 2 - தல் 5 al. 1. மெல்லுதல். மெல்விரல் இஞ்சி அதுக்கீரே (கலிங். 579). அழலுறு பதத்தில் காய்ச்சிப் பல்லினால் அதுக்கி (பெரியபு. 10, 125). துடித்து அதரத்தை யதுக்கியுறுக்கிய (திருமலைமுரு. பிள். 39).2. கடித்தல். பல்லால் அதரத்தை அதுக்கி (கம்பரா. 6,18,5). விசும்பை அதுக்கும் எயிற்றி னவே (கலிங். 170). பிறைவாள் எயிறு அதுக்கித் திசைவான் செவிடுபட நகைத்து (திருவிளை. பு.1,16). நண்ணுந் துயரந்தனை நோக்கி நகையாச் சின இதழ் அதுக்கி (கூர்மபு. பூருவ. 15, 32). 3. நறுக்கு தல். வீரநோய் வெகுளிதோற்றி விழுப்பற அதுக்கி யிட்டுக் காரகற் பொரிப்பர் (சீவக. 2771).

1.

அதுக்கு 3-தல் 5வி. நெருக்குதல். வண்புலச் சேவை அதுக்கி (பெரியாழ். தி. 5, 2, 3). அகல் வாயினிட்டு அதுக்கும் (கம்பரா. 6, 17, 161). 2. பிசைதல். அவ்வயிறதுக்கும் (திருவிளை. பு. 64, 41). 3. அமுக்குதல். காய் கனிந்துவிட்டதா என் என்று அதுக்கிப் பார்த்தான் (பே.வ.). சிரங்கு பழுத்து விட்டதா என்று அதுக்கிப் பார்த்தான் (வட்.வ.). 4. வாயிலடக்குதல்.செ.ப. அக.)

அதுக்கு' பெ. பாத்திரம்

(பே.வ.)

முதலியவற்றின் நெளிவு.

அதுக்கெடு-த்தல் 11 வி. பாத்திரம் முதலியவற்றின் நெளிவைச் சீர்படுத்துதல். (பே.வ.)

அது குபடி பெ. 1. தரிசு நிலத்தைத் தாழ்ந்த வரியில் சாகுபடிக்கு விடுகை. (செ.ப. அக.) 2. சாகுபடிக்குத் தகுதியுள்ள நிலத்தைத் திருத்தும பொருட்டுக் குறைந்த தீர்வைக்குக் கொடுக்கும் பாசன நீர். (செ. ப. அக. அனு.)

அதுங்கு-தல் 5வி. ஒதுங்குதல், தென்பால் செய் அதுங்கு அபத்து இரியத் திரியாது இரு (கந்தரந்.20).

அதுங்கு - தல் 5 வி. குழிதல். (யாழ். அக.)

அதும்பு-தல் 5வி. மொய்த்தல். முரல் வண்டு அதும் புங் கொழுந்தேன் (திருவாச. 6,36).

2

07

அதைரியம்

அதும்பை பெ. கௌதும்பை, (வைத். விரி. அக. ப. 5)

கவிழ்தும்பைச் செடி.

அதுலம் 1 பெ. (அ + துலம்) ஒப்பற்ற தன்மை. அதுல அதேகன் எனும் உயிர் (சிவப்பிர. விகா. 2 1). அசங்கம் அதுலம் (கைவல்ய. சந்தே. 137). பகர் சுபாவம் புனி தம் அதுலமதுலிதம் (திருவருட்பா 1960, 15).

அதுலம்' பெ. ஒரு பேரெண். (சங். அக.)

அதுலன் பெ. 1. ஒப்பில்லாதவன். அனகன் அதுலன் அமலன் (குலோத். உலா 157). திசையாள் அதுலன் குளந்தைக்கு அரசன் (மான். தூது 184). 2.கடவுள். அதிகரள நதியை அதிமதுர முறு நதி செய் திறல் அதுலர் (திருவால. பு. கடவுள் .12). அதுலன் இருபதம் அதனில் எழு புவி அளவிட (திருப்பு. 215). வான் மிசை அதுலன் (சிவஞா. காஞ்சி. இரணியேச.5). நீள் ஆர்த்தொடை அதுலன் (தண்டி. மேற்கோள். பெருந். 805). பந்தபாசம் அறுத்தருள் அதுல போற்றி (சிவதரு. 1, 40).

...

அதுவம் பெ. கீழ். அதுவக் கலவியுள் ஆயுழியோகமே (திருமந். 1171).

அதுவாகிமை பெ. கருஞ் சீரகம். (வாகட அக.)

அதெந்து இ. சொ. அது என்ன என்று அருளொடு கேட்டற் குறிப்பு. அதெந்துவே என்றருளாயே (திரு வாச. 29,1).

அதை-த்தல் 11 வி. அலைதல். அதைத்து ஒழிந்தேன் இனியாரோடுங் கூடேன் (திருமந். 1691).

அதை 2 -த்தல் 11வி. 1. செருக்குதல். இவனுக்கு அதைத்துப்போயிற்று (வின்.). 2. வீங்குதல். முகம் அதைத்திருக்கிறது (பே.வ.).

அதை 3-த்தல் 11 வி. தாக்கி மீளுதல். (ராட். அக.)

11வி.

அதைப்பு1 பெ. 1. திமிர். அதைப்பு உனக்கு ஏறிப் போச்சோ பையா (மலைய. ப. 66). 2. கர்வம். அவன் அதைப்பைப் பார் (பே.வ.). 3. வீக்கம். காலில் அதைப்பு தெரிகிறது (வட்.வ).

4. நீர்க்

கோப்பு. (செ.ப. அக.)

அதைப்பு' பெ.விம்மல்.

(சாம்ப. அக.)

அதைப்பு 3 பெ. தாக்கியெழுகை. (சங். அக.)

அதைரியம் பெ. (அ+ தைரியம்) அதைரியம் கொள்ளாதே (பே. வ ).

துணிவின்மை,