பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தரிலம்பம்

யெனும் பெரியாயோ (சர்வ. கீர்த். 65, 3). ஒப்பிலா நீயே அந்தரியாமி (சிவதத் விவே. 54).

.

அந்தரிலம்பம் பெ.

கோணம். (61) GOT.)

கூர்க்கோணங்கள்

கொண்ட முக்

அந்தரிலயம் பெ. ஆன்மாவுக்குரிய சாக்கிரம் முதலான ஐந்து நிலைகளில் ஐந்தாம் நிலையாகிய துரியாதீதம். (கதிரை. அக.)

அந்தரீபம் பெ. தீவு. (யாழ். அக. அனு.)

அந்தரீயம் பெ. (அரையிற் கட்டும்) வேட்டி. (அந். வ.)

அந்தருவேதி பெ.

யாகசாலையின் உள்ளிடம். அச்

செழு நதிகள் நாப்பண் அந்தருவேதியாகி (கச்சி. காஞ்சி. அந்தர். 22).

அந்தரேணம் பெ. நடு. (யாழ். அக.அனு.)

அந்தரை பெ. பரவர் பட்டப்பெயர். (செ. ப. அக. அனு.)

அந்தலை (அந்தலைப்பு) பெ.முடிவு.

அந்தலை' பெ. பேறு. (முன்.)

அந்தலை' பெ. சந்திப்பு. (முன்)

அந்தலை + பெ. மேடு. (முன்.)

(கதிரை. அக.)

அந்தலைப்பு பெ. அந்தலை. (முன்.)

அந்தளகத்தாளார் பெ. கவசந்தரித்த வீரர்.

உத்தம

சோழத் தெரிந்த அந்தளகத் தாளார் (தெ. இ.க.2,

97).

அந்தளகம் (அந்தளம்!) பெ. கவசம். சிவிகை அந் தளகம் ஈச்சோப்பி (தேவா. 2,79,7).

அந்தளம்" (அந்தளகம்) பெ. கவசம். கவசப் பெயரே அந்தளமும் அபரமும் (பிங். 1608).

...

அந்தளம் 2 பெ. பல்லக்கு. (சிவன். பல். உலா)

அந்தன்1 பெ. இயமன். அறையார் கழல் அந்தன் தனை... வேலின் மிசை ஏற்றார் (தேவா. 1,12,5).

அந்தன் 2 பெ. சனி. (சோதிட சிகா.13)

அந்தன்' பெ. அழகன். (செ. ப. அக.)

217

அந்தன் +

4

அந்தாதியுவமை

பெ. 1.குருடன். அந்தனான உனக்கு அறிவும் இல்லை (பெரியபு. 31,17). அந்தர் கர முற்ற தடியன்றி அறியார் (திருவாத.பு. புத்தரை. 79). 2. அறிவிலான். கூடற்பெருமான் செந்தாள் விடுத்துறை அந்தர்கள் (கல்லாடம் 7, 38-39).

அந்தன்' பெ. கடுக்காய்.(வாகட அக.)

அந்தா இ. சொ. 1. வியப்பினைத் தெரிவிக்கும் சொல். அந்தா இவள் அயிராணி (கந்தபு. 2, 34, 17). 2. சுட் டிக் காட்டுதற்குப் பயன்படும் சொல். அந்தா பன்றி எனக்காட்டி (அரிச். வெண். 139 உரை). அந்தா தெரு முனையிலே (பே.வ.).

அந்தாசு பெ. (சராசரியான) மதிப்பு. (செ. ப. அக.) அந்தாசுகட்டு-தல் 5 வி. மதிப்பிடுதல். (முன்.)

அந்தாசுபட்டி பெ. அறுவடைக்கு முன் இடும் பயிரின் விலை மதிப்பு. (செ.ப.அக. அனு.)

அந்தாதி பெ. 1. ஒரு செய்யுளின் இறுதிச் சீர் அல்லது அசை அல்லது எழுத்து, அடுத்த செய்யுளின் முதலில் அமைவது. அந்தம் முதலாத் தொடுப்பது அந்தாதி (யாப். காரிகை 17). 2. முடிவே முதலாகும் முறையில் பாடப்படும் சிற்றிலக்கியம். அந்தாதி தனைச் சொன்ன மறைக்குல நம்பி (நம்பியாண். அந். 1). எந்தை உனக்கு அந்தாதி சொல்லி (திருமலைமுரு. பிள். 58). அந்தாதி தூது உலா உலா பரணி கோவைக் கமசன் அவர் ஆயிரர்க்குள் ஒருவன் (தமிழ்நா. 229). 3. அடி முதல் முடி வரை உள்ள உறுப்பு. உருக் கோதை மேனிக்கு அந்தாதியைத் தீட்டில் (குலோத்.

உலா 131).

அந்தாதி-த்தல் 11 வி.

.

முடிவே

முதலாக (அந்தம் ஆதியாக) வருதல். அடிமடக்காய் அந்தாதித்து

(மாறனலங். 267 உரை).

அந்தாதித்தொடை பெ. (யாப்.) அடிதோறும் இறுதிக் கண் நின்ற சீர் அல்லது அசை அல்லது எழுத்து அடுத்த அடிக்கு முதலாகத் தொடுப்பது. அடியும் அந்தாதித்தொடையும் என்று அறிதல் வேண்டும் (இலக்.வி.725).

அந்தாதியாக வி.அ. இடைவிடாமல். அநாதிகாலம் அந்தாதியாக சம்சரித்துப் போந்த அடியேனுக்கு (ரகசியா. ஆசாரிய. ப.313).

அந்தாதியுவமை பெ. (அணி.) உவமைகள் அந்தாதி யாகத் தொடரும் வகையால் அமையும் அணி. அந்தாதி

.