பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தி12

முடித்துவைத்தல். அந்தித்திருக்கும் பொருள் இல்லை

(திருவால.பு.30, 14).

12

அந்தி இ. சொ. ஓர் அசைச் சொல். அந்தி அசையும் (பொதி. நி. 2, 67).

...

அந்திக்கடை பெ. மாலைநேரத்தில் பொருள்களை விற் கும் கடை. (செ. ப.அக.)

அந்திக்காப்பு பெ. 1. கண்ணேறு முதலியவற்றிலிருந்து காக்கக் குழந்தைகளுக்கு அந்திப்போதில் செய்யும் சடங்கு. உனக்கு அந்திக் காப்பிடும்படி வரவேணும் (பெரியாழ்.தி.வியாக். பிர.). அமர அரம்பையின் நல் லார் பலர் அந்திக்காப்பு எடுப்ப (திருவரங். அந். 31). 2. கோயிலில் தெய்வத்துக்கு மாலைக்காலத்தில் செய்யும் பூசை. அந்திக் காப்புக்குப் பொன் ஐங் கழஞ்சும் (தெ.இ.க. 7, 1046).

அந்திக்காவலன் பெ. சந்திரன், திங்கள். அந்திக் காவலன் அமுதுறு பசுங்கதிர் ( பெரியதி. 8, 5,1). அந்திக்கோன் பெ.

(மாலைக்கால அரசனாகிய ) சந்திரன், திங்கள். அந்திக்கோன் தனக்கே அருள் செய்தவர் (தேவா. 5, 25, 1).

அந்திகாசிரயம் பெ. அசையாப் பொருள்கள், தாவரம். (சிந்தா.நி.162/செ. ப. அக. அனு.)

அந்திகூப்பு-தல் 5 வி. சந்தியாவந்தனஞ் செய்தல். மந்தி ரத்து அந்தி கூப்பி (பெருங். 1,55,8)

அந்திகை 1 பெ. கபடம்.

அந்திகை கபடம் (நாநார்த்த.

440).

அந்திகை... அடுப்பு (முன்.)

அந்திகை ... இரவு (முன்)

அந்திகை' பெ. அடுப்பு. அந்திகை' பெ. இரவு. அந்திகை' பெ. சித்தம். அந்திகை" பெ. 1. அக்காள். (முன்.)

அந்திகை... சித்தம் (முன்.)

(கதிரை. அக.) 2. பெண்.

அந்திகை பெ. 1. குருடு. (முன்.) 2. ஒரு கண்நோய்.

(முன்.)

அந்திகை' பெ. அண்மை. (முன்.)

அந்திகோரம் பெ. நெல்லிக்காய்.

(வாகட அக.)

அந்திசந்தி பெ. காலைமாலை. சொக்கனார் அந்தி சந்திக்கு வைத்த விளக்கு மூன்றும் (தெ. இ.க. 5,

219

அந்திமாலை

அந்தித்தண்ணீர் பெ. பயிர்களுக்கு மாலையில் இறைக் கப்படும் நீர். (இலங்.வ.)

அந்திதொழு-தல் 1 வி. மாலையில் சந்தியாவந்தனம் செய் தல். அந்தி தொழுது போய் ஆர்த்த (திருமந்.958). அந்திநட்சத்திரம் பெ. மாலை வெள்ளி. (வின்.)

அந்திப்பனை பெ. சாயுங்காலம் ஏறும்பனை. (தொ.வ.)

அந்திப்புட்டோடம் பெ. (அந்தி+ புள் + தோடம்) மாலை யில் பறவைகள் பறக்கும்பொழுது கைக்குழந்தைகளைப் புறத்துக் காட்டலால் வரும் ஊறு. (செ. ப. அக.) அந்திப்பூ பெ. அந்திமந்தாரை. (வைத். விரி. அக.ப. 17) அந்திமக்கிரியை பெ. இறந்தோர்க்குச் செய்யும் இறுதிச் சடங்கு. (பே.வ.)

அந்திமகாலம் பெ. சாகும்வேளை. அந்திமகாலத்துக் குத் தஞ்சம், இப்போது தஞ்சம் ஏன் (சிரீவசன.1,

70).

அந்திமதசை பெ.

அந்திமகாலம். (செ.ப.அக.)

அந்திமந்தாரம் (அந்திமந்தாரை)

பெ. மாலையில்

வெள்ளை, மஞ்சள், சிவப்பு ஆகிய நிறங்களில் மலரும் பூ. (செ.ப. அக.)

அந்திமந்தாரை (அந்திமந்தாரம்) பெ. மாலையில் வெள்ளை, மஞ்சள், சிவப்பு ஆகிய நிறங்களில் மலரும் பூ. (பச்சிலை. அக.)

அந்திமந்தி பெ. மாலை மங்கற்பொழுது. அந்திமந்தி நேரத்திலே வெளியே போகாதே (பே.வ.).

அந்திமமிருதி பெ. இறக்குங்காலத்தில் கடவுளை நினைக்கை. அந்திமமிருதி யில்லையாகில் ஆதிபர தனைப்போல் மானாதல் மரையாதலாம் இத்தனை (திருவாய். 4, 1, 10 ஈடு).

அந்திமல்லி (அந்திமல்லிகை) பெ. அந்திப்பூ. (நட்.வ.)

அந்திமல்லிகை (அந்திமல்லி) பெ. அந்திப்பூ. (பச்சிலை.

அக.)

அந்திமலர்ந்தான் பெ. அந்திப்பூ. (வைத். விரி. அக.

ப. 17)

அந்திமாலை பெ. 1. மாலைப்போது. அந்திமாலை விசும்பு கண்டன்ன (பதிற்றுப். 35, 7).

அந்தி