பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்சம் 1

அம்சம் பெ. 1. கூறு. சீவத்ச அம்சராகத் திருப்பா ணாழ்வார் அவதரித்தருளினார் (குருபரம். ஆறா. ப. 64). 2. சிற்ப இலக்கணத்தின் ஆறு பிரிவுகளுள் ஒன்று. (சிற். செந். ப.26) 3. படிமை செய்வோர் 4. (தொ.வ.) அமைக்கும் கரு. ஐந்து அம்சக் கோரிக்கை (பே.வ.). 5. உரிமைப்பங்கு. யோக பூமி அம்சம் விடாது உறலால் பழைய தீ வினைபோம் (ஞானவா. நிருவா.33).

வகை.

அம்சம்' பெ. தோள். (திருமங்கை. திருநெடுந். 21 வியாக்.)

அம்சம்' பெ.அழகு. அம்சம் உள்ள சிம்மம் போலே

(மலைய. ப. 177).

அம்சம் + பெ 1. கீழ்வாயிலக்கத்தின் கீழெண், (செ. ப. அக.) 2. தேர்வு விடைத்தாளில் இடும் மதிப்பெண். (செ.ப.அக. அனு.)

அம்சம்" பெ. காலம். (தமிழ்ப்பாது. நூ.)

அம்சம்' பெ. நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று. (அபி. சிந். அனு.)

அம்சம்' பெ. அன்னப்பறவை. வண்டானது...அம்ச வுணர்வினால் அம்சமாயிற்று (ஞானவா. சதவுருத். 13 உரை).

அம்சம் பெ. செயல். அனுகூலர் பிரதிகூலத் தால் செய்யும் அம்சத்தைச் சொல்லுகிறது

(திருப்பா.24 சுவாப. வியாக்.).

அம்சம்' பெ. மேருவின் வடக்கே உள்ள ஒரு மலை. (அபி. சிந்.)

அம்சம் பெ. நால் வகைத் துறவு நிலைகளுள் ஒன்று. தீவிரதர வைராகிகள் அம்சம் பராம்சம் என்னும் சந்நியாசங்களையும் உடையவர்கள் (நானா

8. ப. 465 வியாக்.).

அம்சமந்திரம் பெ. புறத்தே ஒலிக்காமல் மனத்துக் குள்ளேயே செபிக்கும் அசபா மந்திரம். (சங். அக.)

அம்சன்1 பெ. கிருட்டிணன் மாமனான கம்சன். (செ.

ப. அக.)

அம்சன்' (அஞ்சன்) பெ. நால்வகைத் துறவியருள் ஒருவன். அம்சர்கள்...ஞானம் வர் (நானா சீ. ப. 466 வியாக்.).

பெற்றுமுத்தியடை

2