பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

அம்பிகை+

அம்பிகை " பெ. தாய்.

550).

அம்பிகை தாய் (நாநார்த்த.

அம்பிகை" பெ. அத்தை. அம்பிகை... அத்தை (முன்.).

அம்பிகை பெ.

வெட்பாலை.

(சாம்ப. அக.)

அம்பிகைசிறுவன் பெ. திருதராட்டிரன். கங்கை மகனும் அம்பிகை சிறுவனும் (பாரதவெண்.212,86).

அம்பிகைதனயன் பெ. (பார்வதியின் மகன்) விநாயகன். அங்குச பாசம் ஏந்தி அம்பிகை தனயன் (சூடா.நி. 1,21).

அம்பிகைபாகன் பெ. (பார்வதியை இடப்பாகத்தில் கொண்ட) சிவபெருமான். அம்பிகை பாகன் என்று உந்தீபற (உந்தி. 21). அம்பிகை பாகற் போற்றி (கச்சி. காஞ்சி. அந்தர். 32).

அம்பிகைமகன் பெ. வயிரவன். ஆனை முகற்கு ளையவன் அம்பிகை மகன் பத்திரை கேள்வன் (ஆசி.நி.9).

அம்பிகைமாலை

பெ. குலசேகரபாண்டியன்

எழுதிய

முப்பது பாடல் கொண்ட துதிநூல். குலசேகரன்... வடித்த ... அம்பிகைமாலை (பெருந்.2064).

அம்பிடி பெ. சீனிச் சர்க்கரை. (பச்சிலை. அக.)

அம்பியம் பெ. கழுகு. (வாகட அக.)

அம்பிலி (அம்பலி, அம்புலி2)

பெ. சோளமாவால்

ஆக்கிய கூழ். அம்பிலிகுடித்தால் நன்றாக வேலை செய்யலாம் (கோவை வ).

அம்பிலி (அம்பலி3) பெ. முட்டையின் வெள்ளைக் கரு.

(பைச. ப. 127)

அம்பினடி பெ. திப்பிலி மூலம். (தைலவ. தைல.39/

செ.ப. அக.)

அம்பு (அப்பு ®) பெ.வில்லில் தொடுக்கும்பாணம் உருவவில் பற்றி அம்பு தெரிந்து (அகநா. 82,11). அம்பு களைவு அறியாச் சுற்றம் (பதிற்றுப். 19, 9). கூப்பிடு கடக்கும் கூர்நல் அம்பு (மலைபடு. 421). அம்பு அமை வல் வில் (ஐங்.373). புதை அம்பில் பட்டுப் பாடுஊன்றும் களிறு (குறள். 597). அம்பின் நேர் விழி மங்கைமார் பலர் (தேவா. 2, 52, 4). ஈர் அம்பு கண்டிலம் ஏகம்பர் தம் கையில் (திருவாச. 14,2). அம்பும் அனலும் நுழையாக் கன அந்த பெ. சொ.அ.1-17 அ