பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புயத்தான்

அம்புயத்தான் பெ.

(தாமரை மலரில் உறைகின்ற)

பிரமன். அம்புயத்தான் மலர்த்தாள் போற்றி (கச்சி. காஞ்சி. இருபத். 207).

அம்புயத்துறைவோன் பெ. (தாமரை மலரில் உறை யும்) பிரமன். முட்டாட் செய்ய அம்புயத்துறை வோன் (குசே. 64).

அம்புயநூல்நாணான்

பெ.

வில்

(தாமரை நூலை நாணாக உடைய) மன்மதன். மன்மதன் பெயர் கமுகம் பூவில்லான் அம்புய நூல் நாணான் (நாம.நி.59 உரை).

...

...

அம்புயம்1 பெ. 1. (நீரில் தோன்றியது) தாமரை. அம்புயம் நீலம் கழுநீர் அணி நெய்தல் (திருமந். 1003). அம்புயம் அனையகண்ணன் (கம்பரா. 6, 36,9).அம்புயத்தின் போதை தும்பிதிறக்க (நள வெ.கலிநீ. 17). அம்புய மலராள் போல்வார் ஆலவாய் அமர்ந்தார் தம்மை (பெரியபு. 28, 647). அம்புயம் உறழும் நம்பி (கந்தபு. 1, 11, 127). முருகியலும் அம்புய மும் பாற்கடலும் ஐந்தருவும் (மதுரைச். உலா 470). அம்புயமலரோடச் செருவிளைத்து வேல்பொரு விழி (செ. பாகவத. 1, 3, 25). 2. நீர்.(வைத். விரி. ருக

அக.ப. 20)

...

அறுமுகம் படைத்த கோல

அம்புயம் 2 பெ. 1. அருகன் ஊர்தி. அருகன் ஊர்தி அம்புயம் (பிங். 192). 2. அருகன் படை. அம்பு யம் (அருகன்) படையே (முன்.).

அம்புயம்3 பெ. 1. பொதி, முட்டை. (செ. ப. அக.) 2.அம்புப்புட்டில். அம்புயம் என்பது புட்டிலும் (அக.நி.அம்முதல். 153).3. இறைகூடை. (சங். அக.)

...

அம்புயமின் பெ. (தாமரையில் உறையும்) திருமகள். அண்டர் தொழும் பெருமாள் அம்புயமின் பெரு மாள் (திருவரங். கலம். 84).

அம்புயன்

பெ. (தாமரையில் உறையும்) பிரமன். அங்கது தெரிந்து தொழுது அம்புயன் இசைப் பான் (கந்தபு. 5, 2, 223).

அம்புயாசனன் பெ. பிரமன். அம்புயாசனன் தெளி கிலா அருமறை (கந்தபு. 3, 8,92).

அம்புயை பெ. திருமகள். அம்புயை கொண்கனாய் இயைந்த மாயன் (திருக்காளத். பு.23,13)

அம்புராசி பெ. கடல். அம்புராசியின் ஆர் அமுதுடன் அவதரித்தோன் (பாரதம். 1, 1, 4). அம்புராசி