பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மகோ

தெரிவது அம்ம அரிதே (தக்க. 710). விதியினார்க்கு யான் அம்ம செய்கின்றதோர் அளவுண்டோ (கந்தபு. 2, 3, 14) 3. வருத்தத்தால் இடும் இரக்கக் குரல். கற்றிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சு மாறே (திருவாச. 35,1). அளியன் நம் பையல் என்னார் அம்மவோ கொடியவாறே (தொண்டரடி. திருமாலை 37). 4. (பொருள் பயக்காத) ஓர் அசைச் சொல். பயனின் று மன்றம்ம காமம் (கலித். 142, 5).

று

அம்மகோ (அம்மவோ) இ. சொ. ஓர் இரக்கக்குறிப்பு. அம்மகோ எனும் விழும் அழும் (மதுரைக்கலம். 15). அம்மங்கார் 1 பெ. ஆசாரியன் மனைவி. (வைண.வ.)

அம்மங்கார்' (அம்மங்காள்) பெ. அம்மான் மகள். (முன்.)

அம்மங்காள்

(Lypair.)

(அம்மங்கார் 2) பெ. அம்மான் மகள்.

அம்மட்டம் பெ. வட்டத்திருப்பிக்கொடி. (சங். அக.)

அம்மட்டி1 (அம்மாட்டி) பெ. கொட்டிக்கிழங்கு.(வைத்.

விரி, அக. ப.20)

·

அம்மட்டி' பெ. அம்மான்பச்சரிசி. (மரஇன. தொ.)

...

அம்மட்டு பெ. அந்த அளவு. அம்மட்டோ வாழ்ந்த நலம் (பட்டினத்தார். பொது 35).

அம்மண்டார் பெ. தாய் மாமன். (செ.ப.அக. அனு.

அம்மணக்கட்டை பெ. ஆடை உடுத்தாத சிறுவன். (பே.வ.)

அம்மணக்குண்டி பெ. ஆடை உடுத்தாத சிறுவன்.

(பே.வ.)

அம்மணத்தார் பெ. (ஆடையில்லாத

திகம்பர)

சமணர். அந்தணர் பேரமைச்சர் அம்மணத்தாராம் (சினேந். 139).

அம்மணத்தோண்டி பெ. அம்மணக்கட்டை. (வட். வ.) அம்மணம் பெ. 1. ஆடையற்ற நிலை. அரையில் கலை யுடுக்காள் அம்மணமுமாய் இருப்பாள் (சீவக. அம் மானை ப.80). 2. வெளிப்படை, உள்ளது உள்ளபடி. நான் இதுவரை சொன்னதெல்லாம் அம்மணமான உண்மை (பே.வ.). 3. ஆபாசப் பேச்சு.(சங். அக.) 4. பரத்தைமை, விபசாரம். (இலங்.வ.)

அம்மணவன் பெ. சமணன். (திவ்ய. அக.)

20