பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மன்வகை

அம்மன்வகை பெ. ஊர்ப் பொது அம்மன் கோயில் சொத்து. அம்மன் வகைச்சீர் ஆயிரம் ரூபாய் (நாஞ். மரு. மான். 6, 38).

அம்மனே இ. சொ. ஒரு வியப்புக்குறிப்பு.

உடைந்

ததுவும் ஆய்ச்சிபால் மத்துக்கே அம்மனே (இயற். மூன்றாம் திருவந்.28).

...

அம்மனை 1 பெ. 1. தாய். யானும் ஓர் அம்மனைக் காவல் உளேன் (முத்தொள். 34). தன்கைக்கோல் அம்மனைக் கோல் ஆகிய ஞான்று (நாலடி. 14). பிரமற்கும் அம்மனை (தக்க. 77). 2. தலைவி, பெண். நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம் மனாய் (திருப்பா.10).3. மகளிர் விளையாட்டான அம்மானை ஆட்டம். மகளிர் அம்மனைக்கு செம்பவளம் தா என்ன (நக்கீர. ஈங். 3). அத்தஞ் சிவக்க அம்மனை பந்தாடி (திருமலைமுரு.பிள். 41). 4. அம்மானை ஆடும் கருவி. அம்மனை தம் கை யில் கொண்டு (சிலப். 29 அம்மானைவரி 4). பொன் னிப் புகார் முத்தின் அம்மனையும் (விக்கிர. உலா 235). கைம்மலர்மேல் அம்மனையாம் அம்மலை கள் (கலிங். 133).

...

அம்மனை' பெ. தலையின் உச்சிக்கப்பால் உள்ள துவாத சாந்தத் தானம். அம்மனை ஆகி அமர்ந்து நின் றாளே (திருமந். 1253).

அம்மனை' பெ. அக்கினி. அம்மனைக்கு அம்மனை வழங்கும் (பாரதம். 1,3,125).

அம்மனைப்பாட்டு பெ. அம்மானை ஆட்டத்தில் பாடும் பாட்டு. பாவை பாடிடும் அம்மனைப் பாட்டு முத லாயின நான்கடியின் இகந்து வருவன (தொல். பொ. 461 பேரா.).

அம்மனைமடக்கு

பெ. கலித்தாழிசையால்

வினா

விடையாக மகளிர் இருவர் இருபொருள்படக் கூறுவ தாய்ப்புனையும் பாட்டு. (மாறனலங். 267 )

அம்மனையோ இ.சொ. துன்பத்தைத் தெரிவிக்கும் குறிப்புச்சொல். அம்மனையோ எனாத்துண்ணென் நெஞ்சினளாய்த் துடித்து (சீவக. 760).

அம்மனைவள்ளை பெ. மகளிர் உலக்கையால் குற்றிய வாறு பாடும் பாட்டு. பன்மலர்க்காவின் அம்மனை வள்ளையும் (பெருங். 1,40, 85). அம்பொன்மலை சிலம்ப அம்மனை வள்ளையுடன் (சூளா.1660).