பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மானைப்பருவம்

3. அம்மானை என்னும் நூல். ஆராய்ந்து முன்னூ லின் அம்மானை பாடுகின்றேன் (சீவக. அம்மானை ப. 1). 4. கலம்பக உறுப்புப் பதினெட்டினுள் ஒன்று. வருபுயம் மதங்கு அம்மானை காலம் (இலக். வி. 812). 5. அம்மானை ஆடும் மகளிர் மூவர் வினா விடையாகக் கூறுவதுபோல் அமைந்து கடையடி இருபொருள் தந்து, மாறுபடும் இருவர் வினாவிற்கும் பொருந்தும் விடை யாக அமையும் பாடல். தாரமாய்க் கொண்டதுமோர் சாபத்தால் அம்மானை (திருவரங்.கலம்.26). 6.அம் மானை வரிப்பாட்டு. தூங்கெயில் மூன்றெறிந்த சோழன் காண் அம்மானை (சிலப். 29,16,4). எல்லோரும் இன்புற்றிருந்தனர் காண் அம்மானை (கஞ்சன் அம். ப.52). ஆழத்துப்பிள்ளை அடிதொழுது ஐயம் திரிவை அறுத்தேன்காண் அம்மானை (குமாரதே. ஞானவம். 1-2).

...

அம்மானைப்பருவம் பெ. பெண்பாற் பிள்ளைத்தமிழின் பருவங்கள் பத்துள் ஒன்பதாவது. கழங்கு அம்மானை ஊசல் பெண்பாலதாகுமே (இலக். வி.)

அம்மானைவரி பெ. மகளிர் அம்மானையாட்டம் ஆடும் போது பாடும் இசைப்பாட்டு. (சிலப்.29 அம்மானைவரி என்னும் தலைப்பு.)

அம்மி1 பெ. அரை கல். சுரை ஆழ அம்மி மிதப்பு (பழமொ.நா.125). இலங்கொளி அம்மி மிதித்து .. அருந்ததி கண்டார் (கம்பரா. 1, 22, 92). அம்மி மிதந்து ஆழ்ந்து சுரை வீழ்ந்தது (சீவக. 495).சுரை ஆழ அம்மி மிதப்ப என்புழி...இயையாமையின் அம்மி ஆழ இயைந்தவாறு (தொல். சொல். 406 சேனா.). அம்மியும் கறையும் தம் எயிறாக்கும் மூப்பு (மதுரை மும்.கோ. 19,28). அம்மியில் வைத்துச் சம் மந்தியாக அரைத்துவிடுவாள் (நாஞ். மரு. மான். 2,58).

க.

...

...

அம்மி' பெ. கொல்லன் பட்டடை. குறைப்பட்டுள்ளது கம்மியர் அம்மி (முக்கூடற்.21).

அம்மிக்கல் பெ. 1. அரை கல்.

...

மாமணிகள் விற்

றுண்போன் அம்மிக்கல் முதலிய தாங்கி ...விற் றுண்பனோ (சூத. ஞான. 11,27). 2. குழவி. அம் மிக்கல் குழவி (பிங்.1696)

அம்மிக்குழவி பெ. அம்மியில் அரைக்க உதவும் நீள உருளைக் கல். (நாட். வ.)

அம்மி மிதி-த்தல் 11 வி. திருமணத்தில் மணமகள் அம்மி மேல் கால்வைத்தல். அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழி நான் (நாச்சி. தி . 6, 6). இலங்கு ஒளி அம்மி மிதித்து ... அருந்ததி கண்டார் (கம்பரா.

1, 22, 91).