பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மைபூட்டு-தல்

அம்மைபூட்டு - தல் 5 வி. அம்மை வார்த்தல். (நாட்.

வ.)

அம்மைபோடு-தல் 6 வி. அம்மை வார்த்தல். வீட்டில் குழந்தைக்கு அம்மை போட்டிருக்கிறது (பே.வ.).

அம்மைமுத்து பெ. அம்மை நோயால் தோலில் தோன் றும் முத்துப்போன்ற கொப்புளம்.

(முன்.)

அம்மையப்பன் பெ. (தாயும் தந்தையுமான) சிவபெரு மான். அம்மையப்பரே உலகுக்கம்மையப்பரென் றறிக (களிற்று.1). அம்மையப்பன் திருத்தேவனம் (தெ.இ.க.7,65).

அம்மையார் பெ. முதியவள். அம்மையார் நிழலில் யாம் அமர்வோம் (மாயூரப்பு. திருநாட். 54).

அம்மையார்கூந்தல்

பெ. ஒட்டுண்ணிக்

கொடிவகை.

(மரஇன. தொ.)

அம்மையார்சீட்டு பெ. இராசா மந்திரி என்னும் சீட்டாட் (செ.ப.அக.அனு.)

டம்.

அம்மையான் பெ. மேல் உலகத்தை அளிக்க வல்லவன். அம்மையான் அடிச்சண்டிப் பெருமான் (தேவா. 7,

39, 3).

அம்மையோ இ.சொ. 1. வியப்பை உணர்த்தும் சொல். அன்னையோ என்றது அம்மையோ என ஒரு வியப்பு (கலித்.85, 29 நச்.).2. துன்பம் உணர்த்தும் சொல். அம்மையோ என்ன வைத்தார் (தேவா. 4, 59, 6). 3. இகழ்ச்சி உணர்த்தும் சொல். அது கேட்ட கூனி அம்மையோ என இகழ்ந்து (கலித். 94, 5 நச்.).

அம்மைவடு பெ. அம்மைத் தழும்பு. (பே.வ.)

அம்மைவார்த் - தல் 11வி. அம்மைநோய் காணுதல். (நாட். வ.)

அம்மைவிசிறு-தல் 5 வி. உடலில் அம்மைக் கொப்பு ளம் மிகவும் பரவிக் காணப்படுதல். (பே.வ.)

அம்மைவிளையாடு-தல்

(முன்.)

5 வி. வைசூரி போடுதல்.

அம்மோ இ.சொ. இரக்கக் குறிப்புச்சொல். ஐயோ... அம்மோ இரக்கச்சொல் (நாம. நி. 671).

26