பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமஞ்சியாள்

அமஞ்சியாள் பெ. கூலியில்லாமல் வேலை செய்பவன். (செ.ப. அக.)

அமட்டு-தல் 5 வி. அதட்டி அச்சுறுத்தல். ஆராலு மென்னை அமட்ட ஒண்ணாது (திருமந்.2960).

அமட்டு-தல் 5வி. புரளுதல். (வின்.)

அமட்டு-தல் 5 வி. மயக்குதல். தூக்கம் கண்ணை அமட்டுகிறது (நாட் .வ.).

அமட்டு-தல் 5 வி. வாந்தி எடுக்கவருதல், குமட்டுதல். (ரா. வட். அக)

அமட்டு5-தல் 5வி. சிக்க வைத்தல். (வின்.)

அமட்டு" பெ. பெ. ஏய்ப்பு. (செ.ப. அக.)

அமடு பெ. சிக்குகை. மாதரார் ஒளிர அமளி பீடத் தில் அமடுபடுவேனுக்கு (திருப்பு.641).

...

அமண்' பெ. 1. சமணமதம். வல்லமண் ஆசு அற (தேவா. 3, 47, 11). 2. சமணர். புத்தரொடு அமணை வாதிலழிவிக்கும் அண்ணல் திருநீறு (முன். 2,85,10). அமணைக் கழுநுதி மேல் ஏற்றுவித்தோன் (நம்பியாண். திருத்தொண்டர். 26). ஆய நாள்களில் அமண் பயில் பாண்டிநாடதனை (பெரியபு. 28,1050). வல்லமண் விடுத்த வேழம் (திருவிளை. பு. 27,3).

அமண் 2 பெ. அரையில் ஆடை இல்லாமை. குவி முலை யார் தம்முன்னே நாணம் இன்றி ... அமணே நின் றார் (தேவா. 6, 3, 7).

அமண்' பெ. வரிக் கூத்துவகை. சீலமிகும் ஆண்டி அமண்புனவே டாளத்தி கோப்பாளி (சிலப். 3,13

அடியார்க்.).

அமண்டம் (அமண்டலம்) பெ. ஆமணக்கு. ( பச்சிலை.

அக.)

அமண்டலம் (அமண்டம்) பெ. ஆமணக்கு. (முன்.)

அமண்டலாதி பெ.செங்கடம்பு. (சித். அக / செ. ப. அக.

அனு.)

அமண்பாழி பெ. சமணர் தங்குமிடம், சமணர் தவம் செய்யும் குகை. அமண் பாழி நண்ணுகிலேன்