பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமதி3

அமதி பெ. அமிழ்து. (ராட். அக.)

அமந்தலம் (அபந்தலம்) பெ. செங்கத்தாரி. (பச்சிலை.

அக.)

அமந்தாசிகம் பெ. சுருளி. (செ.ப.அக . அனு.)

அமந்தி பெ. நாட்டு வாதுமை. (சங். அக.)

அமம் பெ. நோய். (யாழ். அக. அனு.)

அமம்சூழ்-தல் 4 வி. கீழ்ப்படுதல், உட்படுதல். விசும்பும் காற்றும் அமம் சூழ்ந்து அற விளங்கித் தோன் றும் (இயற். மூன்றாம்திருவந். 98).

அமயக்கணக்கர் பெ. வருங்காலத்தைக் கணிக்கும் சோதிடர். அமயக் கணக்கரும் அகலாராகி (மணிமே.

1,14).

அமயம் (அமையம் 1) பெ. பொழுது, சமயம். உவவுத் தலை வந்த பெருநாள் அமயத்து (புறநா. 65,6). வெங்கதிர் அமயத்து வியன் பொழில் அகவயின் (மணிமே. 10,27). நன்னாள் அமயத்து மின்னென நுடங்கி (பெருங். 5,1,125). ஆனதோர் அமயந் தன்னில் ஆடினர் அமரர் மாதர் (கந்தபு. 1,10, 72).

அமர் -தல் 4 வி. 1.(ஓரிடத்தில்/இருக்கையில்) இருத் தல். வல்சி புலையன் ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு (புறநா.360,19). உண்ணுங்கால் நோக்கும் திசை கிழக்குக்கண் அமர்ந்து (ஆசாரக். 20). ஆசிரியர் இருக்கையில் அமர்ந்தபின் மாணவர் அமர்ந்தனர் (நாட் .வ.)2.(ஒரிடத்தில்/ஊரில்) விரும்பி உறைதல். நீ அலது உளரோ என் நெஞ்சு அமர்ந்தோரே (ஐங். 293). அன்போடுருகும் அடியார்க்கு அன்பர் அமரும் ஊர் (தேவா. 2, 63, 5). அந்தமில் ஆரியனாய் அமர்ந்தருளியும் (திருவாச. 2,22). திருப்பரங்குன் றமர் சேயைப் போற்றுவாம் (கந்தபு.கடவுள்.12). 3. (இடையில்)

தங்குதல், படிதல். ஆலம் அமர் கண்டத்து அரன் (இயற். முதல்திருவந். 4). மங்கை கூறுஅமர் மெய்யான் (தேவா. 2,96,5). ஐ அமரும் தியக்கம் குறுகாமுன் (திருவரங். அந். 19). 4. (என்றும் இருத்தல்) நிலைத்தல். கார் ஆர்ந்த வான் அமரும் மின் இமைக்கும் (இயற். மூன்றாம்திருவந். 100).

அமர் -தல் 4 வி. 1. பொருந்துதல். மழைக்கண் அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனன் (நற். 16,10). அன்புற்றமர்ந்த வழக்கென்ப (குறள். 75).

27