பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமரபாதிரு

அமரபா திரு பெ. இந்திரன். (யாழ். அக. அனு.)

அமரபுட்பி பெ. கம்பிபுட்பி என்னும் புல்வகை. (மர இன. தொ.)

அமரபோகம் பெ.

சொர்க்க (தேவலோக) இன்பம். ஆதலால் அமரபோகம் நுகர்ந்தவன் (சூளா. 355).

அமரம்1 பெ. 1. தோணியின் பின்பக்கம். (செ. ப. அக.) 2. படகைத் திருப்பும் தண்டு. (முன்.) 3. ஒரு பொரு ளின் பின் பக்கம். அமரமேபின் பக்கமும் ஆகும். (அக. நி. அம்முதல். 36).

அமரம்' (அமரகோசம்) பெ. அமரசிம்மன் செய்த வடமொழி நிகண்டு. (செ.ப. அக.)

அமரம்3 பெ. 1. ஆயிரம் வீரர் கொண்ட காலாட்படையை ஆளும் தன்மை. (வின்.) 2 சிற்றரசன் தன் படை வீரனுக்கு அளித்த நில மானியம். (செ. ப.அக.)

அமரம்' பெ. 1. இறப்பில்லா இன்பநிலை. அமரவாழ்வு எய்துவோம் (பாரதி. பல்வகை. 1 காப்பு). ஆருயிர் அனைத்தும் அமரவாழ்வு பெற (சுத்தானந். கீர்த்). 2. என்றும் நிலைத்து நிற்பது. இது ஓர் அமர காவி யம் (நாட். வ.). 3. தெய்வத்தன்மை. (முன்)

அமரம்' பெ. கண் சூட்டு நோய். (வைத். விரி. அக.

ப.19)

அமரமுனிவன் பெ. தெய்வத்தன்மை வாய்ந்த இருடி. அமரமுனிவன் அகத்தியன் தனாது கரகம் (மணிமே. பதிகம் 11).

அமரர் 1 பெ. பகைவர். அடையலர் அமரர் (பிங்.

3065).

...

அமரர்' பெ. 1. பதினெண் கண கணத்துள் ஒரு பிரிவாய இறவாநிலையுடைய் தேவர், கடவுளர். அமரர்ச்சுட்டி யும் (தொல். பொ. 144, 29 இளம்.). பெருவிறல் அம ரர்க்கு வென்றி தந்த (புறநா. 55,3). அடக்கம் அமரருள் உய்க்கும் (குறள். 121). பிரிவிலா அம் ரர்கூடிப் பிரான் என்று ஏத்தும் அரி (தேவா. 4, 40,5). பல அமரர் உன்னற் கரியான் (திருவாச. 7, 7). இமையா நாட்டத்திலங்கிழை மகளிர் அமையாக் காதல் அமரரை மகிழ்ந்தன்று (புற. வெண். 9,48 கொளு). தாம் மகிழ்ந்து அமரர் சூழும் சதமகன் நகரம் தாழ (பெரியபு. 8,3). அமரர் மாதவர் முனி வரர்... தொழுதேத்தும் கருவை யெம்பெருமானே

பெ. சொ . அ. 1-18