பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமரி3

அருங்கலையூர்தி ... துர்க்கை பெயரே (பிங். 124). அமரி இன்புறும் (கலிங். 115). தொலைவில் அமரி எமக்கரணாம் (பெருந். 108).

அமரி' (அமுரி!) பெ. 1. சிறுநீர். அமரி சிறுநீர் உவரியும் ஆகும் (பிங். 1012). 2. கடல்நீர். (முன்.)

அமரி ( அமுரி*) பெ. கற்றாழை. (மர இன. தொ.]

பச்சிலை. அக.)

அமரி" (அமுரி) பெ.

கருங்குன்றி. (மாஇன. தொ.)

அமரி பெ. அமிர்தம். அமரியும் சுதையும் மருந்தும் அமுதே (பிங்.309). அமரி வெளவி (சேதுபு. கத்துரு.

28).

அமரிக்கை பெ. 1. அமைதி. சற்றுநேரம் ஏகாந்த மாயும் அமரிக்கையாயும் இருக்கலாம் (பிரதாப. ப. 268). 2. அடக்கம். பெண் அமரிக்கையாக இருக் கிறாள் (நாட்.வ.)

அமரிக்கையாளன் பெ. அடக்கமுடையவன். அமரிக்கை யாளன் முத்துராமலிங்க சேதுபதி (பெருந். 1302).

பாயை

அமரிகை பெ. விந்தியமலையின் பக்கத்தில் உள்ள தாகக் கூறப்படும் ஆறு. அமரிகைக்கு ஓசனை ஐம்பது சென்றால் (சீவக. 336). மற்றொர் நாள் அமரிகைக் கொடிகொள்மாமணிச் சுற்றுவான் சுடர் ஒளி

தழுவி (சூளா. 85).

அமரிடணம் பெ. கோபம். (யாழ். அக. அனு.)

அமரிதம் பெ. கடுக்காய். (பச்சிலை. அக).

அமரிதாவிகம் பெ. கையாந்தகரை. (சித். அக./செ. ப.

அக. அனு.)

அமரிப்புல் பெ. குதிரைவாலி. (மரஇன. தொ.)

அமரிப்பூகம் பெ. செங்கரந்தை. (சித். அக./செ. ப. அக. அனு.)

அமரியம் பெ. குருந்து. (மர இன. தொ.)

அமரியுப்பு பெ. சிறுநீரின் உப்பு. (செ.ப.அக.)

அமரியோன் பெ. போர்வீரன். அமரியோர்கள் ஓரைம் பது வெள்ளத்தர் (கந்தபு. 3, 14, 15).

பெ.சொ.அ.1-18 அ