பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமலன்1

அமலன்1 பெ. 1. மும்மலம் இல்லாதவன். குருந்தம் மேவிய சீர் அமலனே (திருவாச. 29, 4). அமலனும் உரைநேர்வான் (கம்பரா. 2, 7,42). கார்க்கடுமணி மிட றொளிரும் அமலன் (திருமலைமுரு. பிள்.2). 2. மும்மலம் நீங்கினவன், தூயவன். அனகன் அது லன் அமலன் (குலோத்.உலா 134). அனந்தேசுவரா திகள் சிவனால் அமலரானது போல (சி. சி. 21 சிவாக்). ஆற்றுமோர் வினை உருப்பெயர் அடைந் திடா அமலன் (செ. பாகவத. 1, 1, 14). 3. உருவ மற்றவன். யாவும் ஒன்றிய அறிவுன் ஆகலின் அமலன் (ஞானா. 65, 25-26). 4. சிவன். அமலன் கண்டாய் அவிநாசிகண்டாய் (தேவா. 6,73,7). சுத்தன் அமலன் சோதி நாயகன் (இருபா இரு.2). கடல் அளித்தவிடமுண்ட அமலன் (செ. பாகவத. 4. 2,33).5. திருமால். அமலன் ஆதிபிரான்... விமலன் (அமலனாதி.1). ஆரணநிலத்து அமலனே அபயனாக அறுக (கலிங். 185). அடலுடை ஆழிதாங்கும் அமல னென்று (செ. பாகவத. 7, 2, 82). மதிலரங்கத் துறையும் அமலனைக் கண்ட கண் மற்றொன்று காணாது (வைகுந்த. பிள். தெய்வ. 108). 6.பிரமன். தாமரைக் கண்காண் கடவுளொடு அஃதத்து உறை அமலனும் (ஞானா. 55,2).

அமலன்' பெ. கடுக்காய். (மரஇன. தொ.)

அமலனாதிபிரான் பெ. நாலாயிரத் திவ்வியப் பிரபந்த முதலாயிரத்துள் திருப்பாணாழ்வார் இயற்றிய பிர பந்தம். அமலனாதிபிரான் பத்தும் அருளினான் வாழியே (ஆழ்வார் வாழித் திருநாமம் 9).

அமலாங்குஞ்சம் பெ. செடிவகை. (சாம்ப. அக.)

அமலாயோகம் பெ. (சோதிடம்) இலக்கினம் அல்லது சந்திரனுக்குப் பத்தாமிடத்தில் சுபக்கிரகங்கள் இருக்கை. (செ.ப.அக. அனு.)

அமலாளி பெ. வரி தண்டும் அதிகாரி. சம்பள நெல் பற்றும் தருணத்தில் கட்டளவாய் நம்பும் அமலாளி பற்றினான் (சரவண. பணவிடு. 178)

அமலை1 பெ. 1. ஆரவாரம். கொழுங்களிமிதவை பெருஞ்சோற்று அமலை நிற்ப (அகநா. 86, 1-2). அவள் வாய் திறந்து அரற்றிய அமலை (கம்பரா. 3, 5, 95). வீரர் ஆர்க்கும் அமலையை அவிக்கும்ய (நைடத. நாட்டு.13). 2. பட்ட பகைவேந்தனைச் சூழ்ந்து நின்று வீரர் திரண்டுஆடும் ஆட்டம். அட்டவேந்தன் வாளோராடும் அமலையும் (தொல். பொ. 72 நச்.) ஒள்வாள் அமலைஆடிய ஞாட்பின் (அகநா. 142,

277

அமலை10

14). அவுணர் வீழ நங்கை மரக்கால் மேல் வாள் அமலை ஆடும் போலும் (சிலப். 12, 12, 2). 3. பட்டபகைவேந்தனை நெருங்கி வீரர் திரண்டு பாடும் பாட்டு. (தொல். பொ. 72 இளம்.)

அமலை' பெ. 1. மிகுதி. அமலை வெஞ்சோறு (அகநா. 196, 5). அமலை நனியே ... மிகுதி (பிங். 2232). 2. செறிவு. அமலை நனியே ... செறிதல் (முன்.). அத்த வேம்பின் அமலை வான்பூ (குறுந்.

281, 3).

அமலை3

பெ. சபை. அமலை எனும் பெயர் ... சபைப்பெயருமாம் (வட. நி. 120).

அமலை பெ. 1. சோற்றுருண்டை. எண் எறிந்து இயற்றிய மாக்கண்அமலை (மலைபடு. 441). அமலைக் கொழுஞ் சோறு (புறநா. 34,14). பிச்சைப் பாத்திரம் பெருஞ்சோற்று அமலை (மணிமே. 17, 2). பெருஞ் சோற்றமலைபரந்து பலர் மிசையும் (பெருங். 2,3,25). புற்றின் பழஞ்சோற்றமலை (நக்கீர. ஈங். 54). 2. சோறு. செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது ஆரமாந்தி (குறுந். 277). அமலை உணவு துப்பு அசனம்... சோறென உரைப்பர் (திவா. 1176).

...

அமலை" பெ. 1. (மலமற்ற) காளிதேவி. கமண்ட லம் நிறைந்த தெண்ணீர் அமலைக்குத்தூய தெண் ணீர் ஆரமுது (தக்க. 755). அந்தரி யாமளை அமலை ஆலகாலி (அரிச். பு. பாயி. 9). அமலையோ டும் சிறந்த கணத்தோடும் (கடம்ப. பு. 486). 2. சிவ சத்தி. அமலைக்கு வியாபகனே அரன் (சிவதரு. சிவ ஞானயோக, 22). 3. திருமகள். அமலை யாவும் அளிப்பவள் (செ. பாசுவத. 8,3, 37). தண்பூவின் (செ.பாசுவத. இடைத்தந்து அமலைக்குத் தலைவன் (திருவரங். அந். 4). 4. பூமிதேவி. அகல்இட அமலைக்கும் இருங் கமலைக்கும் இறைவ (திருவரங். அந். 35).

அமலை பெ. 1.கீழாநெல்லி. (மரஇன. தொ.) 2. நெல்லிமரம். (சங். அக.)

அமலை' பெ. பூவந்தி. (நாநார்த்த. 530)

அமலை பெ. கடுக்காய். (மரஇன. தொ.)

அமலை பெ. 1. கடுகு ரோகணி. (வைத். விரி. அக. ப. 19)2. மானாவாரிப் பயிரில் வரும் பசலை போன்ற

களை. (ரா. வட். அக.)

அமலை10 பெ. கொப்பூழ்க்கொடி. (சங். அக.)